397. பாணிக்குட் படாது


ராகம் : ஹரிகாம்போதிதாளம்: திஸ்ரத்ரிபுடை (7)
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதகபஞ்சபூத
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனைநெஞ்சமான
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
யேறிப்பற் றொணாது நாடினர் தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
யேறச்செச் சைநாறு தாளைவணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடாநி சாசரர் தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும்எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
வாசப்பத் மபாத சேகர சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
வாசிப்பித் ததேசி காசுரர்தம்பிரானே.

Learn The Song



Raga Hari Kambhoji (28th mela)

Arohanam: S R2 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

பாணிக்கு உட்படாது சாதகர் காணச் சற்று ஒணாது (pANikku utpadAdhu sAdhakar kANa satroNAdhu) : It cannot be touched and held in hands; practitioners of yOgAs cannot see It even a little; கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாதது, யோக வழியில் சாதகம் செய்பவர்களால் சிறிதும் காண முடியாதது,

வாதிகள் பாஷிக்கத் தகாது (vAdhigaL bAshikkath thagAdhu) : squabblers can only debate and discuss about It in vain; தர்க்க வாதிகளால் பேசி முடிவு காண முடியாதது,

பாதக பஞ்ச பூதப் பாசத்தில் படாது (pAthaka panchabUtha pAsaththil padAdhu) : It is beyond the grasp of the delusory bonds of attachment that are caused by the treacherous five elements; பாவங்களுக்கு இடம் தரும் ஐந்து பூதங்களால் நிகழும் பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது,

வேறு ஒரு உபாயத்தில் புகாது (vERor ubAyaththil pugAdhu) : It cannot be trapped by any other method; வேறு எந்தவிதமான உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது,

பாவனை பாவிக்கப் பெறாது (bAvanai bAvikkap peRAdhu) : It cannot be contemplated upon by any type of meditation; எவ்வித தியான வகையாலும் தியானிக்க முடியாதது,

வாதனை நெஞ்சமான ஏணிக்கு எட்டொணாது (vAdhanai nenjamAna ENikku ettoNAdhu) : It cannot be reached by climbing the ladder of the worry-filled mind; வருத்தங்களுக்கு இடமான மனம் என்கின்ற ஏணி கொண்டு எட்ட முடியாதது,

மீது உயர் சேணுக்குச் சமான நூல்வழி ஏறிப் பற்ற ஒணாது (meedhu uyar sENukku samAna nUl vazhi yERip patra oNAdhu) : It cannot be attained through the research of rich texts containing lofty ideas that are high as the sky; மேலே உயரத்தில் இருக்கும் ஆகாயத்துக்கு ஒப்பான கருத்துள்ள கலை நூல்களின் வழியே ஆய்ந்து ஏறிக்கொண்டு பிடிக்கமுடியாதது,

நாடினர் தங்களாலும் ஏதுச் செப்ப ஒணாதது (nAdinar thangaLAlum Edhuc cheppa oNAdhadhu) : Its root cause cannot be interpreted in any way by Its true seekers; தேடி முயல்பவர்களாலும் அதன் காரண மூலம் இன்னதென்று சொல்ல முடியாதது,

ஓர் பொருள் சேரத் துக்கமாம் மகா உததி ஏறச் (Or poruL sEra dhukkamA mahOdhadhi yERa) : It is such a unique and Supreme matter. To enable me to attain It, and to get out of the big sea of misery and reach the shore, இத்தகைய ஒப்பற்ற பரம்பொருளை நான் அடைய, துக்கம் என்னும் பெரிய கடலைக் கடக்க

செச்சை நாறு தாளை வணங்குவேனோ (chechchai nARu thALai vaNanguvEnO) : will I be able to worship Your hallowed feet, fragrant with vetchi flowers adorning them? வெட்சி மலரின் நறு மணம் கமழும் உனது திருவடிகளை வணங்க மாட்டேனோ?

ஆணிப் பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டுக் கடாவி (ANip poR prathApa mEruvai vElittuk kadAvi) : You wielded Your spear on the famous Mount Meru made of absolutely pure and solid gold; பத்தரை மாற்றுப் பொன் மயமானதும், புகழ் பெற்றதுமான மேரு மலையை (கனகங்கிரி) வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தியும்; ஆணிப்பொன் = உயர்மாற்றுப் பொன்;
When Murugan incarnated as PANdiya King, Ugra Vazhudhi, there was an unprecedented famine in Madhurai. In order to bring gold from Mount Meru, the King went up to the mount and prayed. As the mount was not yielding the gold, the King was enraged and wielded his spear upon it and obtained gold.

வாசவன் ஆபத்தைக் கெடா (vAsavan Abaththaik kedA) : You destroyed the danger that had befallen IndrA; இந்திரனுடைய ஆபத்தைக் கெடுமாறு செய்தும்,

நிசாசரர் தம் ப்ரகாசம் ஆழிச் சத்ர சாயை நீழலில் (nisAcharar tham prakAsam Azhi chathra sAyai neezhalil) : dispelling even the shadow of the dazzling discs and other weapons of the demons, அசுரர்களுடைய ஒளிமயமான சக்கரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் சாயையின் நிழல் நீங்க

ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழிச் சக்ரவாளம் ஆள் தரும் எம்பிரானே ( Adhiththa prakAsa nEr thara Azhich chakravALam ALtharum embirAnE ) : my Lord, You ruled the universe bounded by Mount ChakravALam that is bright as the sun! சூரியனுடைய ஒளிக்கு நிகராக விளங்கும், வட்டமான சக்ரவாள கிரிவரையில் உள்ள உலகை ஆண்டருளும் எம்பெருமானே,

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி ( mANikka pravALa neela madhANi) : She wears a pendant embedded with rubies, corals and blue sapphires; மாணிக்கமணி, பவளம், நீலமணி (இவைகள் பதிக்கப் பெற்ற) பதக்கத்தை அணிந்த

பொன் கிராதை நூபுர வாசப் பத்ம பாத சேகர (pOR kirAdhai nUpura vAsa padhma pAdha sEkara) : that beautiful lass belonging to the hunter tribe is VaLLi; and Your head is redolent with the fragrance of Her lotus feet waering anklets (meaning Murugan's head fell at VaLLi's feet)! அழகிய வேடப் பெண் வள்ளியின் சிலம்பு அணிந்த தாமரைபோன்ற திருவடியின் நறுமணத்தைச் சூடியுள்ளவனே (அதாவது முருகனின் சிரம் வள்ளியின் பாதங்களில் விழுந்ததின் காரணமாக),

சம்பு வேதா வாசிக்கப் படாத வாசகம் (sambu vEdhA vAsikkap padAdha vAsakam ) : the inner meaning of the PraNava ManthrA which could not be interpreted by Lord BrahmA, பிரம்ம தேவர் படித்துக் கூற முடியாத தனிமந்திரத்தின் உட்பொருளை,

ஈசர்க்குச் சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா (eesarkku suvAmiyAy mudhal vAsippiththa dhEsikA ) : was once preached to Lord SivA by You as His mentor. You are the preceptor who once preached to Lord SivA, Oh Great Master, சிவ பெருமானுக்கு நல்லாசிரியனாக இருந்து முன்பு உபதேசித்த குரு நாதனே, தேசிகன்(thesikan) : spiritual teacher;

சுரர் தம்பிரானே.(surar thambirAnE.) : You are the unique Lord of all the celestials தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவனே.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே