419. வானப் புக்கு
Learn The Song
Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)
Arohanam: S R1 G3 M2 P D2 P S Avarohanam: S N3 D2 P M2 G3 R1 SParaphrase
வான் அப்புக் குப் பற்று மருத்துக் கனல் மேவு ( vAn appuk kup patru maruththuk kanal mEvu) : A combination of cosmos, water, earth, desire, air and fire ஆகாயம், நீர், பூமி, ஆசை, காற்று, தீ ஆகியவை கலந்த, அப்பு (appu) : water; கு (ku) : earth, மண்;
மாயத் தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் பிறவாதே (mAyath thetrip poykkudil okkap piRavAdhE) : has built this mystic edifice called my body. I do not want to be born in this illusory dwelling. மாயக் கட்டடமான இந்தப் பொய்க் குடிசையாம் உடலோடு பிறக்காமல், தெற்றி = கூடம், திண்ணை;
ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழால் (gnAna sidhdhi chiththira niththath thamizhAl un) : To enable me to reach the pinnacle of Knowledge, using beautiful and immortal Tamil language ஞானம் கைவரப் பெறும்படியாக, அழகியதும் அழியாததுமான தமிழ்ச் சொற்களால்
உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே (nAmaththaik katrup pugazh gaikkup purivAyE) : You should kindly grant me the wisdom to praise You with Your great names (like Murugan, Guhan and Kandhan), after learning their significance! உன் திரு நாமத்தை நன்கு கற்றறிந்து (கந்தா, முருகா, குகா என்றெல்லாம் கூறி) புகழ்வதற்கு நீ அருள் புரிய வேண்டும்.
கானக் கொச்சைச் சொற் குறவிக்குக் கடவோனே (kAnak kochchai soR kuRavikkuk kadavOnE) : You are indebted to protect the damsel of the KuRavAs, VaLLi roaming in the forest, who lisps sweetly like a child! காட்டில் வாழ்ந்தவளும், திருந்தாத குதலைப் பேச்சைக் கொஞ்சிப் பேசுபவளும் ஆன குறப்பெண் வள்ளியை ஆட்கொள்ளக் கடமைப்பட்டவனே, கடவை = கடமை;
காதி கொற்றப் பொற்குல வெற்பை பொரும் வேலா (kAdhik kotrap poRkula veRpaip porumvElA) : You hold the Spear which shattered the golden and majestic hill Mount Krouncha into pieces! வெற்றிச் சிறப்புடன் இருந்த தங்கமயமான குலகிரி கிரெளஞ்சமலையைக் கூறு செய்து அதனுடன் போரிட்ட வேலவனே, கொற்றம் (kotram) : வெற்றி, வீரம், வலிமை;
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே (thEnaith thaththach chutriya chechchaith thodaiyOnE) : You wear the garland of chechchai flowers around which beetles roam seeking honey! வண்டுகளைத் தாவித் தாவிச் சுற்றச்செய்யும்படியான வெட்சி மலர் மாலையை அணிந்தவனே,
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே. (dhEva sorgach chakkira varthip perumALE.) : You are the Emperor of the Heaven belonging to the DEvAs, Oh Great One! தேவர்கள் வாழும் சொர்க்கத்தில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே.
Comments
Post a Comment