414. முனை அழிந்தது
Learn The Song
Paraphrase
முனை அழிந்தது மேட்டி குலைந்தது (munai azhindhadhu mEtti kulaindhadhu) : My courage was destroyed and my ego shattered; தைரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல, முனை = துணிவு, தைரியம்; மேட்டி= அகந்தை;
வயது சென்றது வாய்ப்பல் உதிர்ந்தது (vayadhu sendradhu vAyppal udhirndhadhu) : my age was advanced and all my teeth had fallen; வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர,
முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது (mudhugu venjchilai kAtti vaLaindhadhu) : my back was like a bow showing a big hunch; முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ,
ப்ரபையான முகம் இழிந்தது நோக்கும் இருண்டது (prabaiyAna mugam izhindhadhu nOkkum iruNdadhu) : my bright face was crestfallen and vision blurred; ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க, பார்வையும் இருளடைய,
இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது (irumal vandhadhu thUkkam ozhindhadhu) : I coughed uncontrollably and lost my sleep altogether இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக,
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது (mozhi thaLarndhadhu nAkku vizhundhadhu) : my speech slurred and tongue became inactive; பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ,
அறிவே போய் நினைவு அயர்ந்தது (aRivE pOy ninai vayarndhadhu) : my grasping power was gone and so was my memory; புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட,
நீட்டல் முடங்கலும் (neettal mudangalum) : I was simply stretching my legs and bending my knees; காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி,
அவசமும் பல ஏக்கமும் உந்தின (avasamum pala Ekkamu mundhina) : dizziness and worries took control of me; மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு,
நெறி மறந்தது மூப்பு முதிர்ந்தது (neRi maRandhadhu mUppu mudhirndhadhu) : I took leave of my discipline and old age took over; ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி,
பல நோயும் நிலுவை கொண்டது (palanOyum niluvai koNdadhu ) : many diseases plagued me பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க,
பாய்க்கிடை கண்டது (pAykkidai kaNdadhu:) : and I was bedridden; பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட,
சலமலங்களின் நாற்றம் எழுந்தது (jala malangaLi nAtram ezhundhadhu) : my own faeces and urine emitted an unbearable stench; மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ,
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு (nimisham ingini yAchchudhen munbu) : : and before people say that my time will be over in a minute இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு,
இனிது அருள்வாயே (inidhu aruLvAyE) : You have got to do good to me in that very last minute! நல்லவிதமாக அருள்வாயாக.
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமு மங்கிட ஓட்டி (inaiya indhiran Etramum aNdargaL thalamu mangida Otti) : IndrA was humiliated and the DEvAs lost their land, வருந்துகிற இந்திரனின் மேன்மையும், தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி, இணைய இந்திரன்/ இந்திரன் இணைய = இந்திரன் வருந்த;
இருஞ் சிறையிடும் இடும்புள ராக்கதர் (irum siRai idum idumbuLa rAkkadhar) : when they were persecuted and imprisoned by asuras with vengeance. கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில், இடும்பு = கொடுஞ்செயல்;
தங்களில் வெகுகோடி எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் (thangaLil vegukOdi edhir porumpadi pOrkkuL edhirndhavar) : From the oppressing multitude, millions of asuras advanced with large armies to fight a war with You; பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின்
தசை சிரங்களு நாற்றிசை சிந்திட (dhasai sirangaLu nAtrisai chinthida) : and the enemies' heads and flesh pieces were scattered all around சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட
இடி முழங்கிய வேற்படை ஒன்றனை எறிவோனே (idi muzhangiya vERpadai ondranai eRivOnE) : when You threw Your spear with a thundering noise! இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே,
தினை வனங்கிளி காத்த சவுந்தரி (thinaivanang kiLi kAththa savundhari) : There was this beautiful girl, VaLLi, who was guarding the millet fields from the parrots; தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின்
அருகு சென்றடி போற்றி மணஞ் செய்து (arugu sendradi pOtri maNanj seydhu:) : You went towards her, prostrated at her feet and later married her; பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து
செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே (jegam aRindhida vAzhkkai purindhidum iLaiyOnE:) : and Your married life with her was an open book before the whole world, Oh Young One! உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே,
திரிபுரம் பொடியாக்கிய சங்கரர் குமர (thiripuram podi Akkiya sankarar kumara) : You are the son of Sankara who burnt down Thripuram and reduced it to ashes. திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே,
கந்தப ராக்ரம (kandha parAkrama) : Oh KandhA, Oh valorous One! கந்தா, பராக்கிரம மூர்த்தியே,
செந்தமிழ் தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே. (senthamizh theLivu koNd adiyArkku viLambiya perumALE.) : You taught beautiful Tamil with all clarity to Your devotees, Oh Great One! செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே.
Comments
Post a Comment