395. பரவைக்கு எத்தனை


ராகம் : ராமப்ரியாதாளம்: திச்ர ஏகம் (3)
பரவைக் கெத்தனை விசைதூது
பகரற் குற்றவ ரெனமாணுன்
மரபுக் குச்சித ப்ரபுவாக
வரமெத் தத்தரவருவாயே
கரடக் கற்பக னிளையோனே
கலைவிற் கட்குற மகள்கேள்வா
அரனுக் குற்றது புகல்வோனே
அயனைக் குட்டிய பெருமாளே.

Learn The Song




Discourse By Chitra Murthy

Paraphrase

Oh, Lord! You are from the lineage of Lord Shiva who, for the sake of Your devotee Sundara Nayanar, went several times as a messenger to Paravai Nachiyar. Following that tradition, kindly grant me boons profusely.

சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் ஒரு முறைக்கு இருமுறையாக இறைவன் தூது சென்றனர். அடியார்க்கு எளியராய் அங்ஙனம் தூது சென்ற சிவனுடைய மரபில்வந்த பிள்ளையாயிற்றே, முருகா, நீ ஆதலால் உன் மரபுக்கு ஏற்ற கருணையுடன் எனக்கு வரம் மெத்தத் தர வந்தருளுவாயாக.

பரவைக்கு எத்தனை விசை தூது (paravaikku eththanai visai thUthu) : A willing messenger to Paravai NAchchiyAr whom he visited numerous times (on behalf of His devotee Sundarar), (அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் தூது போகக் கூடியவர்
பரவை நாச்சியாரைத் திருவாரூரில் மணம் செய்திருந்த சுந்தரர் பின்னர் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்தார். இதனை அறிந்த பரவையார், சுந்தரர் திருவாரூரை அடைந்தபோது அவரைத் தன் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறித் தடுத்து விட்டார். சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபிரான் பரவை நாச்சியார் வீட்டிற்கு ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது நடந்து இருவரையும் கூட்டி வைத்தார்.

பகரற்கு உற்றவர் என மாண் (pagaraRku utRavar ena mAN) : such was the splendour (of Your Father, Lord SivA). என்று சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற; மாண் (mAN) : Greatness, glory, splendour, excellence, dignity; மாட்சிமை.

உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக (un marapukku uccitha prapuvAga) : You too will have to be a Great One in accordance with the eminence of Your lineage; உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி,

வரம் மெத்தத் தர வருவாயே (varam meththath thara varuvAyE) : kindly come here to bestow upon me bountiful boons! வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக.

கரடக் கற்பகன் இளையோனே (karadak kaRpakan iLaiyOnE) : You are the younger brother of Ganapathi, who has the sign of gushing saliva left behind on His elephant face and who is a benefactor like the wish-yielding tree, KaRpagam. மதம் பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, கரட (karada) : cheeks; கன்னக் கதுப்பு; கற்பகன் (kaRpagan) : beneficent like the Karpaga tree, Ganesha, விநாயகர்;

கலை விற் கண் குற மகள் கேள்வா (kalai viR kaN kuRa magaL kELvA) : You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, whose eyes are radiant like the deer's eye; மான் போன்று ஒளிபொருந்திய கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே; கலை = மான்; வில்கண் = ஒளிபொருந்திய கண்(ணை உடைய);,

அரனுக்கு உற்றது புகல்வோனே (aranukku utRathu pukalvOnE) : You preached to Lord SivA the significance of eternal truth! சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே,

அயனைக் குட்டிய பெருமாளே. (ayanaik kuttiya perumALE.) : You banged the heads of BrahmA with Your knuckles, Oh Great One! பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே