407. மக்கள் தாயர்
Learn The Song
Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)
Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S Avarohanam: S N2 D2 P M1 G2 R2 SParaphrase
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே (makkaL thAyarkkum marukarkkum mAmarkkum manaivikkum vAzhnarkkum mika manathUdE) : My children, mother, nephews, uncles, wife and other relatives living with me, will experience; நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனதில் ,
மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம் வைத்து வாட (maiththa vElaikku nedithu utRa mAya thuyaram vaiththu vAda) : misery due to delusion that is darker than black sea and I will become disheartened; கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, மைத்த வேலை (maiththa vElai): dark sea;
சமனும் உற மேவி திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில் திருகி (samanum uRa mEvi thikku nAdik kariya meyk kadAvil thirugi) : Yaman, the God of Death, mounted on the black buffalo, will come in search of my place putting on an arrogant air; யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து
திக்க ஆவிக்கு அளவு தெரியா முன் (thikka Avikk(u) aLavu theriyA mun): my speech will falter; before I realize the remaining span of my life (in other words, before my imminent death), என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்),
சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாதக் கமலம் அருள்வாயே (siththam Ovith thuyilum atRu vAzha siRithu cithra pAthak kamalam aruLvAyE ) : to enable my mind to cease its activity and to leave me in a dreamless and wakeless state, will You kindly grant me, at least slightly, Your hallowed lotus feet? மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக.
இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை இட்டு (ikku vELaik karuka mukkaN nAdik kanalai ittu) : He assessed the action (of provoking lust) of Manmathan, God of Love, who held the bow of sugarcane; and He opened His third (fiery) eye upon Manmathan and burnt him down; கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, இக்கு வேள் ( ikku vEL ) : the god holding the sugarcane, Manmatha;
யோகத்து அமர் இறையோர் முன் (yOgaththu amar iRaiyOr mun): then He sat in deep meditation (yOgA); to that Lord SivA, யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில்,
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தை தனை இனிது ஈவாய் (eccharAthikkum uRa niRkum mAyaRku muthal ettoNA viththai thanai inithu eevAy) : You taught happily the primordial principle of True Knowledge that is inconceivable even to the mystical Lord VishNu who pervades all sentient and insentient beings! எச்சராதிக்கும் உற நிற்கும் மாயன் (eccharAthikkum uRa niRkum mAyan): Vishnu who pervades all animate lives; இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே,
பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே (pakka Arvaththudan uLnekku nAdip paravum paththar pAdaRku urukum murugOnE) : Oh MurugA, Your heart simply melts for the songs of Your devotees who poignantly extol Your glory with deep affection! உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே.
பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ (pakkam yAnaith thiruvOdu okka vAzha) : She who lives amicably with DEvayAnai, the daughter of Lakshmi, who lives On Your (left) side; உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும்,
குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே. ( kuRavar pacchai mAnukku iniya perumALE.) : is VaLLi, who looks like a green deer, reared by the hunters; You are Her sweetheart, Oh Great One! அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.
Comments
Post a Comment