ta The Nectar of Thiruppugazh: 406. போத நிர்க்குண

Wednesday, 16 November 2016

406. போத நிர்க்குண

ராகம்: சுநாதவினோதினி தாளம்: அங்கதாளம் (8)
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநமபஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநமஎன்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுகலங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர்தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவகண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் தம்பிரானே.

Learn The Song

Listen Music - Listen Audio -

Paraphrase

போத நிர்க்குண போதா நமோநம(bOdha nirkguNa bOdhA namO nama): "Oh wise One who is beyond all attributes, I bow to You, I bow to You, ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி,

நாத நிஷ்கள நாதா நமோநம (nAdha nishkaLa nathA namO nama): Oh Leader, You are One without any form, I bow to You, I bow to You, தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி,

பூரணக்கலை சாரா நமோநம(pUraNak kalai sArA namO nama): You are the Essence of all arts, I bow to You, I bow to You, எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி,

பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம (pancha bANa bUpan maiththuna bUpA namO nama): You are the cousin of Manmathan, the Lord of Love with five flowery arrows, I bow to You, I bow to You, ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம் அரசனே, போற்றி, போற்றி,
Manmathan is the son of Vishnu, uncle to Murugan (Vishnu's sister Parvathi is Murugan's mother). Thus Murugan is the cousin of Manmathan.

நீப புஷ்பக தாளா நமோநம (neeba pushpaka thALA namO nama): Your feet are decorated with kadappa flowers, I bow to You, I bow to You, கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,

போக சொர்க்க புபாலா நமோநம (bOga sorgga bupAlA namO nama): You protected the blissful heavenly land of the DEvAs, I bow to You, I bow to You, இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி,

சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம (sangameRum mA thamizh thraya sEyE namO nama): You sat on the famous plank of Sangam and You are the wizard of the three branches of Tamil, I bow to You, I bow to You, சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி,

வேதனத்ரய வேளே நமோநம (vEdhana thraya vELE namO nama ): You are worshipped in the three branches (Rigg, Yajur and SAma) of VEdAs, I bow to You, I bow to You, ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும் தொழும் தெய்வமே, போற்றி, போற்றி,
Of the four VEdAs, Atharvana VedA is omitted here as it contains certain destructive ManthrAs along with good ones.

வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம (vAzh jagathraya vAzhvE namO nama): The living trio of worlds (namely, Earth, Thrisangu world and Heaven) value You as their Treasure, I bow to You, I bow to You." வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி,

என்று பாத வாரிஜத்தில் விழாதே (endru pAdha vArijath thil vizhAdhE): - so I should sing Your Glory and fall at Your Lotus Feet. Instead, என்றெல்லாம் கூறிப் போற்றி உன் பாதத் தாமரையில் விழாமல்,

மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா (magOdhadhi Ezh piRappinil mUzhgA): I am drowned in the huge sea of seven births மகா சமுத்திரமாகிய ஏழ் பிறப்பில் நான் மூழ்கி,

மனோபவ மாயையிற் சுழி ஊடே விடாது கலங்கலாமோ ( manObava mAyaiyiR suzhiyUdE vidAdhu kalangalAmO): and am also caught in the thoughts of my mind, whirlpools of delusion, making me constantly agitated; is it fair? மனத்தில் உதிக்கும் எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே வெளிவர முடியாமல் அகப்பட்டுக் கலங்குதல் நன்றோ?

கீத நிர்த்த வெதாள அடவீ நட நாத பாகீரதீ புத்திர (geetha nirththa vethALa adaveenata nAtha puththira bAgirathee): With the devils singing and dancing around, Lord SivA danced in the cremation ground; Your are the Son of that SivA and Bhageerathi (River Ganga)! பாடல் ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும் சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே,

கிருபா சமுத்திர (kirupA samudhdhira): You are the ocean of compassion! கருணைக் கடலே,

ஜீமூத வாகனா தந்தி பாகா (jeemUtha vAhanar dhanthi pAgA): You are the consort of DEvayAnai, Daughter of IndrA who rides the clouds! மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே,

கேகயப் பிரதாபா முலாதிப (kEkayap pirathApA mulAdhipa): You are famous for riding Your Peacock! You are the foremost leader! மயில் வாகனக் கீர்த்திமானே, மூலாதார மூர்த்தியே, கேகயம்(kEkayam): peacock;

மாலிகைக் குமரேசா விசாக (mAligaik kumarEsA visAka): You are Lord Kumara fully garlanded! You shine on Your birth star, VishakA! மாலைகள் அணிந்த குமரக் கடவுளே, விசாகனே,

க்ருபாலு வித்ருமகாரா (krupAlu vidhrumakArA): You are extremely kind and have the complexion of coral! கிருபாளனே, பவள நிறத்தோனே, வித்ருமம்(vithrumam): ruby, பவளம்;

ஷடானன புண்டரீகா(shadAnana puNdareekA): Your six faces are like lotus flowers! ஆறு திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே,

வேத வித்தக வேதா விநோத (vEdha viththaga vEdhA vinOdha): You are the wizard of all VEdAs! You taunted BrahmA for fun! வேதங்களில் வல்லவனே, பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே,

கிராத லக்ஷ்மி கிரீடா (kirAtha lakshmi kireetA): You indulged in romantic sport with VaLLi, who is none other than Lakshmi, born among the hunters! வேடர் குலத்து லக்ஷ்மியாம் வள்ளியுடன் சிருங்கார லீலைகள் புரிந்தவனே,

மகாசல வீர விக்ரம(mahAchala veera vikrama): Oh valorous One, You choose mighty mountains as Your abodes! You are courageous! பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும் வீரனே, பராக்கிரமசாலியே,

பார அவதான (pAra avadhAna): You act with extreme care and caution! மீகுந்த கவனத்தோடு செயல்படுவோனே, அவதானம்(avathAna): Glorious act, achievement; கவனம், நினைவாற்றல் ;

அகண்ட சூரா வீர நிட்டுர வீர (akaNdasUra veera nittura veera): Your bravery is complete! You have the ferocity needed by a warrior! பூரணமான சூரத்துவம் உடையவனே, வீரனுக்கு இருக்கவேண்டிய கொடூரம் கொண்ட வீரனே,

ஆதி காரண(adhi kAraNa): You are the fundamental cause of everything! மூல காரணப் பொருளே,

தீர நிர்ப்பய தீர அபிராம (dheera nirbaya dheera abirAma): You are an adventurous and fearless One! You are extremely handsome! தீரனே, பயமற்ற தைரியசாலியே, அழகனே,

விநாயகப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே.(vinAyaka priya vElAyudhA surar thambirAnE.): You are beloved of VinAyagA, You hold the Spear as Your weapon, and You are worshipped by all the DEvAs, Oh Great One! விநாயகருக்குப் பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.