413. முருக மயூர


ராகம்: பாகேஸ்ரீ அங்கதாளம் 2 + 1½ + 2 (5½)
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமளமுலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய குருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும்வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது மொருநாளே
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலைபருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடிய சதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதை யாமற் போர்செய்துவிளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
புரமதில் மாபுத் தேளிர்கள் பெருமாளே.

Learn The Song


Raga Bageshri (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 P G2 M1 R2 S

Paraphrase

The saint-poet Arunagirinathar prays that he should sing and dance, with his heart suffused with divine love for the Lord. Being in the constant company of true devotees of the Lord takes one speedily along the path of Bhakti or devotion and helps attain salvation. This verse also describes seven of the balaleelas of Krishna.

முருக மயூர சேவக சரவண (muruga mayUra sEvaka saravaNa) : "Oh MurugA! You are the valiant one mounting the peacock! Oh SaravaNabhava! "முருகனே, மயிலேறும் வீரனே, சரவணபவனே,

ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே முழுகிய காதல் காமுக (EnaR bUdhari mukuLa pateerak kOmaLa mulaimeedhE muzhugiya kAdhal kAmuga) : You are the ardent lover of mountain girl of VaLLimalai, guarding an abundant produce of millet, and You immerse Yourself in her beautiful breasts which are like lotus buds and are splashed with sandalwood paste; வள்ளிமலையில் மிகுந்து விளைந்த தினைப்புனத்தைக் காவல் செய்த மலைப் பெண் வள்ளியின் தாமரை அரும்பு போன்ற, சந்தனம் அணிந்த, அழகுடைய மார்பின் மேல் முழுகிய அன்பு மிக்க ஆர்வலனே, படீரம் (pateeram) : sandal; ஏனல் (Enal) : Red millet, செந்தினை; பூதரம், பூதரி (bootharam, boothari) : மலை, மலைப் பெண்

பதி பசு பாசத் தீர்வினை முதிய புராரிக்கு ஓதிய குருவே (pathi pasu pAsath theervinai mudhiya purArik Odhiya guruvE) : Oh Master, You taught the crux of the three-some principle of God, Soul and Bondage (Pathi, Pasu, PAsam) to the old Lord SivA who burnt down Thiripuram!" கடவுள், உயிர், தளை என்ற மும்மைத் தத்துவங்களின் முடிவான உட்பொருளை பழமையான, திரிபுரம் அழித்த, சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே" ; தீர்வு= முடிவு;

என்று உருகியும் ஆடிப் பாடியும் இரு கழல் நாடிச் சூடியும் (endru urugiyum Adip pAdiyum iru kazhal nAdich chUdiyum) : - with these words, I wish to praise Your glory with a melting heart, dancing and singing, in pursuit of Your hallowed feet to place them on my head; என்று துதித்து, உள்ளம் குழைந்து உருகியும், ஆடியும், பாடியும், உனது இரு திருவடிகளை நாடியும், அவற்றைத் தலையில் சூடியும்

உணர்வினொடு ஊடி கூடியும் வழி பாடு உற்று (uNarvinodu uUdik kUdiyum vazhipAdu utRu) : my thoughts and emotions sometimes stray away from each other and, at certain other times, merge as I worship; ஞான உணர்ச்சியோடு பிணங்கியும், மீணடும் இணங்கிக் கலந்தும், வழி பாட்டில் பொருந்த நின்று,

உலகினோர் ஆசைப் பாடு அற (ulaginor Asaip pAdaRa) : in order that my attachment to the people on this earth is severed, உலகினோர் மீது வைத்த ஆசைப்பாடு அறவே அற்றுப் போக,

நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரைச் சேர்வதும் ஒரு நாளே (nilai peRu nyAnaththAl ini unadhu adiyArai sErvadhum orunALE ) : kindly bless me with a steady and true knowledge and the pleasure of joining the company of Your devotees; will there be such an auspicious day for me? நிலை பெற்றுள்ள பெரிய ஞான உணர்வுடன் இனி மேல் உன் அடியார்களைச் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நாளும் உண்டாகுமோ?

மருகன் எ(ன்)னாமல் சூழ் கொலை கருதிய மாமப் பாதகன் (marugan enAmal sUzh kolai karudhiya mAma pAthagan) : Without any consideration for the relationship to his nephew (Krishnan), the evil uncle, Kamsan, viciously plotted his murder; சகோதரி தேவகியின் மகன் என்று சற்றும் கருதாமல் சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய மாமனாம் பாவியாகிய கம்சன்,

வர விடு மாயப் பேய் முலை பருகா (vara vidu mAyap pEy mulai parugA) : he sent the crafty and cruel fiend (PUthanai) who sucked the life out along with the poisonous milk from her breast; அனுப்பி வைத்த, மாயத்தில் வல்ல, பூதனை என்ற பேயின் முலையின் விஷப் பாலோடு உயிரையும் அருந்தியும்,

மேல் வரும் மத யானைக் கோடு அவை திருகி (mEl varu madha yAnaik kOdavai thirugi) : later, when the violent elephant KuvalayApeetam charged to kill, its ivory tusks were squeezed out by Him killing the elephant; பின்னும், கொல்ல வரும் மத யானையாகிய குவலயாபீடத்தின் தந்தங்களைத் திருகிப் பறித்தும் (அந்த யானையைக் கொன்றும்; யானை என்பது கருமை, இருள். மதம்.அதை வெல்வது என்பது தமோகுணத்தை வெல்வது; கம்சனின் மதம் அறுத்தல் என்று பொருள்.)
குவலயாபீட வதம்: கண்ணனும் பலராமனும் திருவாய்ப்பாடியில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது கம்சன் தனது நகரமான மதுரையில் தான் வில் விழா ஒன்று எடுப்பதாகத் திட்டமிட்டு அதைக் காண்பதற்காக இந்த இரண்டு சிறுவர்களையும் அழைத்துவரும்படி அக்ரூரரை அனுப்பினான். அழைப்பை ஏற்று பலராமனும் கண்ணனும் அக்ரூரருடன் வந்து கொண்டிருக்கையில் சிறுவர்கள் இருவரையும் கொல்லுவதற்கு குவலயாபீடம் என்ற ஒரு மதயானை ஆயுதம் தாங்கிய பாகனுடன் கம்சனின் ஏவலின்படி நிறுத்தி வைக்கப் பெற்றிருந்தது. இவர்களை நோக்கி யானை பாய்ந்து வர, யாதவ வீரர்கள் இருவரும் அதனை எதிர்த்து அதன் கொம்புகள் இரண்டையும் பறித்து அவற்றால் அடித்து, யானையையும் பாகனையும் கொன்றனர்.

விளாவில் காய் கனி மதுகையில் வீழச் சாடிய (viLAviR kAy kani madhugaiyil veezhach sAdiya) : (when a demon KapistAsuran menacingly took the disguise of a viLA tree,) the unripe and ripe viLA fruits were knocked down breaking the tree forcefully throwing on him (yet another demon Vathsasura disguised as a calf); (வஞ்சனையாக கபிஸ்டாசுரன் என்ற ஓர் அரக்கன் விளாமரமாக நிற்க) அந்த விளா மரத்தின் காய்களும் கனிகளும் மரத்தோடு சேர்ந்து விழும்படி தனது வன்மையால் (வத்சாசுரன் என்ற கன்றின் உருவில் வந்த மற்றோர் அசுரனைக் கொண்டு) அடித்தும், மதுகை = வலிமை, ஆற்றல்;

ஒரு முறை, சிறுவன் கிருஷ்ணர் தன் தமையனான பலராமருடன் யமுனை நதிக்கரையில் பசுக்களை மேய்க்கச் சென்றனர். அவைகளை ஓரிடத்தில் மேய விட்டுவிட்டு, இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணனை அழிப்பதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட வத்சாசுரன் என்ற அரக்கனும் கபிஷ்டாசுரன் என்ற அரக்கனும் கண்ணனைக் கொல்வதற்கு தகுந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர். வத்சாசுரன் ஒரு கன்றுக்குட்டியாக உருவம் எடுத்து அங்கிருந்த கன்றுகளுடன் கலந்திருக்க, கபிஷ்டாசுரன் அருகில் இருந்த ஒரு விளாமரத்தில் ஒளிந்து கொண்டான். இதனை அறிந்த கண்ணன், அசுரன் ஒளிந்து கொண்டிருந்த கன்றின் பின்னங்கால்களை தூக்கிப் பிடித்து விளாமரத்தின் மீது எறிந்து மரத்தினை ஒடித்து அதில் மறைந்திருந்த அரக்கனையும் கண்ணன் கொன்றான்.

இதே போல் இன்னொரு கதையும் உண்டு. தாளவனம் என்ற காட்டில் பழங்களும் மிகுதியாக உள்ள பல ஈச்ச மரங்கள் இருந்தன. மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் கிருஷ்ணரும் பலராமனும் அங்கு சென்று மரத்தைப் பிடித்து உலுக்க, பழங்கள் உதிர்ந்தன. அந்தக் காட்டில், தேனுகாசுரன் என்னும் அசுரன் கழுதை வடிவில் பல அசுரர்களுடன் இருந்தார்கள். பழங்கள் உதிரும் ஓசை கேட்ட அசுரன், வேகமாக வந்து பலராமனைத் தாக்கினான். ஆதிசேஷனான பலராமன் அவனைத் தடுத்து, அவன் கால்களைப் பிடித்து சுழற்றி வீசிஎறிந்தார். உடனே, அங்கிருந்த மற்ற அசுரர்கள் வந்து கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்கினர். ஆனால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு கழுதையாக அவற்றின் கால்களைப் பிடித்து வீசி எறிந்து அனைத்து அசுரக் கழுதைகளையும் கொன்றனர்.

அச் சதம் மா புள் பொருது (ach chadham mA put poruthu) : He fought with the giant crane (Kesi) with huge feathers (and killed it by splitting its beaks open); பெரிய இறக்கையுடைய பறவையாகிய (பகாசுரன் என்ற) கொக்குடன் சண்டை செய்து, சதம் (satham) : feather; புள் (puL) : a bird, கொக்கு;

இரு கோரப் பாரிய மருது இடை போய் (iru gOrap pAriya marudhidai pOy) : He crawled (with His waist tied to a stone-barrel) amidst two large hideous marutha trees, knocking them down; அச்சத்தைத் தரும் இரண்டு பருத்த மருத மரங்களுக்கு இடையில் (இடுப்புடன் கட்டிய உரலுடன் -- வயிற்றைச் சுற்றிக் கயிற்றால் கட்டப்பட்டதால் 'தாமோதரன்' என்ற நாமம். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு.) தவழ்ந்து சென்றும் (அம்மரங்களை முறித்தும்),
குபேரனது புத்திரர்களான நளகூபன் என்பவனும் மணிக்ரீவன் என்பவனும் நாரதரின் சாபத்தால் கோகுலத்தில் மருத மரங்களாகப் பிறந்திருந்தனர். அவர்கள் கண்ணனது ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றனர்.

அப்போது ஒரு சகடு உதையா (appOdhu oru sagad udhaiyA) : at that time, He kicked with His foot the giant wheel of a cart and killed the demon (SakatAsuran in disguise); அப்போது ஒரு வண்டிச் சக்கர வடிவில் வந்த (சகட) அசுரனை உதைத்தும்,
யசோதை குழந்தைக்கு பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர். அப்போது குழந்தை கிருஷ்ணன் கால்களை உதைத்துக்கொண்டு அழுதது. கால்கள் பட்டதும் வண்டி உடைந்தது, வண்டி வடிவில் இருந்த அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான்.

மல் போர் செய்து விளையாடி (mar pOr seydhu viLaiyAdi) : He grappled with the state wrestlers (ChaNUran and Mushtikan), performing so many miracles as a child's sport, (சாணூரன், முஷ்டிகன் என்ற) மல்லர்களுடன் போர் செய்து விளையாடியும்,

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா (podhuviyar sErik kEvaLar puyal marugA) : He grew among the shepherds; He is Krishna of the hue of dark cloud; and You are the nephew of that VishNu! இடையர்களின் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய கண்ணனாம் திருமாலின் மருகனே,

வஜ்ராயுத புரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே(vajrAyudha puramadhil mA puththELirgaL perumALE.) : You are the Lord praised by the great celestials living in the golden world of IndrA who holds the weapon, vajram, Oh Great One! குலிஜம் என்ற ஆயுதம் ஏந்திய இந்திரனின் ஊராகிய பொன்னுலகத்தில் சிறந்த தேவர்கள் போற்றும் பெருமாளே. புத்தேளிர் = வானோர், தேவர்;

Comments

  1. Hello Madam,

    Me and my parents visited Tiruvannamalai temple in July 2016 and a group of people were singing Thiruppugazh songs in the Kambathu ilayanaar sannidhi. Following are the links to the youtube videos that we recorded. Could you please provide links to translations of these songs ? I found the relevant translations for the first song on your blog.

    1.https://www.youtube.com/watch?v=HOWPHn0IO0o

    2.https://www.youtube.com/watch?v=lKwMDewlvaU

    3.https://www.youtube.com/watch?v=mxGrwYbiveM

    4.https://www.youtube.com/watch?v=Ho7pDwnFrNA

    best regards,
    Venkatesh.


    ReplyDelete
    Replies
    1. Thank you Venkatesh for the interest shown. Here are the links:

      1) http://thiruppugazh-nectar.blogspot.ae/2016/07/325.athala-sedan.html
      2)http://thiruppugazh-nectar.blogspot.ae/2015/08/Thiruvelaikkaranvaguppu.html
      3)http://thiruppugazh-nectar.blogspot.ae/2016/01/217.mathiyal.html
      4)http://thiruppugazh-nectar.blogspot.ae/2016/03/251.iruvinaipiravi.html

      Delete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே