ta The Nectar of Thiruppugazh: 402. பூத கலாதிகள்

Tuesday, 15 November 2016

402. பூத கலாதிகள்

ராகம்: மோகனம் தாளம்: அங்கதாளம் 2 + 2 + 1½ (5½)
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்துவெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு ணர்ந்து வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு மடைவேனோ
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தையபிராமி
வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
வாலைபு ராரியி டந்தகுமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள்தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்தபெருமாளே.

Learn The Song

Share Music - Upload Audio Files -

Paraphrase

பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி போம் வழி ஏது தெரிந்து (pUtha kalAthikaL koNdu yOkamum Aka makizhnthu pUsaikaL yAthu nikazhnthu pizhai kOdi pOm vazhi Ethu therinthu): After analyzing the scriptures dealing with the five elements and experiencing the bliss from various forms of YogAs, performing numerous rituals of worship, understanding the cause that would lead to the absolvement of millions of errors in judgment, ஐம்பூதங்களின் சம்பந்தமான சாஸ்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து, யோகவகை கூடிட மகிழ்ந்து, பூஜைகள் யாவற்றையும் செய்து, கோடிக் கணக்கான பிழைகள் நீங்கும்படியான வழி இன்னதென்று காரணம் உணர்ந்து,

ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து (Athi anAthi iraNdu pUraNi kAraNi vinthu veLiyAna nAtha parAparam enRa yOki u(l)lAsam aRinthu): Knowing the bliss experienced by the yogis coming as an effulgence born from the union of the Supreme Principle consisting of ParAsakthi, the Primordial One without a Beginning or an End, with the cosmic 'lingam' accompanied by a great musical sound, முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி, சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து வெளியான நாதம் பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து,

ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண நாடி ஒரு ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ(njAna suvAsam uNarnthu oLi kANa nAdi oru Ayiram vantha thAmarai meethil amarntha nAyakar pAtham iraNdum adaivEnO): will I be able to attain that state of YOgA through my breath of knowledge and obtain the vision of the graceful light that I seek so that I could reach the two hallowed feet of the Lord and Master seated on the Lotus having a thousand petals? ஞான மூச்சினால் யோக நிலையை அறிந்து நாத நல்லொளி தோன்ற, அதை விரும்பி, ஓராயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது அமர்ந்துள்ள பெருமானது இரண்டு திருவடிகளை அடைவேனோ? ( நாதம் என்பது சக்தி ரூபமான ஒலி; விந்து என்பது ஒளி.)

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி வாழ் சிவகாம சவுந்த்ரி (mAthu sarvESvari vanji kALi pidAri vipanji vANi varAki madanthai apirAmi vAzh sivakAma savunthri): She is the Mother; She is the Goddess to all; She has a vanji (rattan reed) creeper-like waist; She is KALi, the Deity of the Villages; She is Goddess Saraswathi holding in Her arms the famous veeNA called Vipanchi; She is the most powerful and beautiful damsel; மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக் கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை,

வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெ(மே) லாம் முக பஞ்ச வாலை புராரி இடந்தகு உமையாயி(vAzh sivakAma savunthri Alam me(E)lAm muka panja vAlai purAri idanthaku umaiyAyi): She is the flourishing Consort loved by Lord SivA; during the end of the KalpA when destruction of the worlds takes place, this Goddess BAla holds Her five faces above the flood; She is UmAdEvi, the consort of Lord SivA who burnt down Thiripuram, concorporating snugly on the left side of that Lord; She is our dear Mother; வாழ்வு பொலியும் சிவகாம செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய்,

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு(ம்) பேதை (vEtha purANam viLampi neela murAriyar thangai mElodu keezh ulakangaL tharu(m) pEthai): She is the One who interpreted all the scriptures and the ancient epics; She is the younger sister of the blue-hued Lord VishNu, who killed the demon, Muran (hence named MurAri); She is the Mother who protects the fourteen worlds delivered by Her; வேதங்களையும், புராணங்களையும் சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும் ஈன்று அளித்த மாது,

வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே. (vEdam e(l)lAm uka sanga pAdalodu Adal payinRa vENiyar nAyaki thantha perumALE.): with all His dancing attires vibrating, He danced on the (golden) stage fiercely against the background music; He is Lord SivA with matted hair, and She is His DEvi PArvathi who delivered You, Oh Great One! (ஆடலுக்கு உரிய) வேடங்களெல்லாம் நிலை கலங்க,(பொற்) சபையில் பாடல்களுடனும் ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே.

நாதமும் விந்துவும்

Taken from http://www.jeyamohan.in/
பிரபஞ்சம் (universe) எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. தமிழில் பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது வெளி அல்லது வெட்டவெளி ஆகும். அதுவே மெய்ப்பொருள் (universal consciousness). பிரபஞ்சம் தோன்றியதை பெருவெடிப்புக் (big bang theory) கொள்கையின் வழியாக நம்மால் அறிய முடிகிறது. எவ்வித இயக்கமும் இல்லாதிருக்கும் வெட்டவெளியில் திடீரென ஒரு இயக்கம் நிகழ்கிறது. திடும்மென வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் வெடிப்பு(இயக்கம்) விரியத்துவங்குகிறது. அவ்வியக்கமே பேரண்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் வெடிப்பு அல்லது விரிவின்போது எழும் சத்தமும்(ஒலி), வெளிச்சமும்(ஒளி) பேரண்டத்திற்கான முதல் நிகழ்வுகள். நாதம், விந்து என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக் குறியீடுகளாகக் (symbols of creation) குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. நாதம்(ஒலி) முதலிலும், விந்து(ஒளி) பிற்பாடும் தோன்றின. சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? சிவம் இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் சிவமாகிய வெளியில் திடீரென நிகழும் அழுத்தமே வெடிப்பு . அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமன்று, சக்தி. வெட்டவெளிக்குள் நிகழும் இயக்கத்தின் துவக்கமாய் வெளிப்படும் ஒலியைச் சுட்டி நிற்பவன் பிள்ளையார். ஒலியைத் தொடர்ந்து கிளைக்கும் பேரொளியைச் சுட்டும் குறியீடே முருகன்.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.