145. வெற்றி செயவுற்ற

ராகம் : ஹம்சத்வனி தாளம்: கண்டத்ருவம்( /5/5 0 /5 )
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்டவிசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்றுவரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த கழல்வீரா
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்தழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்குமுருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்டபெருமாளே

Learn The Song


Paraphrase

This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the nayaki (heroine) from Lord Muruga. The sea, the moon, Love God, the flowery arrows, the scandal-mongering women and the music from the flute are some of the sources which aggravate her separation from the Lord.

வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே(vetri seya utra kazhai viR kudhai vaLaiththu madhan vitta kaNai patta visaiyAlE): The force of the victorious arrows of flowers shot by Manmathan (Love God) from the strung bow of sugarcane, கழை(kazhai): sugarcane; விசை(visai): force;

வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே( vetta veLiyil teruvil vatta paNaiyil kanal viriththu oLi parappu madhiyAlE): the moon looking like a round disc emitting fire and spreading light in the milky way and in the streets; மதி(mathi): moon; கனல் (kanal): heat, fire;

பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே( patri vasai katra pala thaththaiyar thamakkum isai patta thigirkkum azhiyAdhE): the profanities thrown at me by the women of the town who are skilled in this art, and the music that emanates from the flute - in order that these do not torment me திகிரி(thigiri): several meanings such as chariot, discus, wheel, bamboo; here, flute; இசைபட்ட திகிரிக்கு = இசையை எழுப்பும் புல்லாங்குழலின் இசையாலும்;

பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வர வேணும் (baththiyai enakkaruLi muththiyai aLiththu vaLar pachchai mayil utru varavENum): You have to kindly grant me devotion and salvation by appearing before me, mounted on Your great green-hued Peacock.

நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர்(netri vizhi patteriya nattam idum uththamar): The righteous god Shiva who burnt down Manmathan by the fiery eye in His forehead and performs the cosmic dance; நட்டம்/நடனம்(nattam): dance;

நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா(ninaikku manam oththa kazhal veerA:): and that SivA thinks of You in His heart where You reside with Your anklets, oh brave one!

நெய் கமலம் ஒக்கு முலை மெய் குறவி இச்சை உற நித்தம் இறுக தழுவும் மார்பா(neyk kamalam okkum mulai meyk kuRavi ichchai uRa niththam iRugath thazhuvu mArbA): You hug very tightly with Your chest that chaste Kurava damsel VaLLi with bosoms like honeyed lotus flowers and fill her with desire;நெய் கமலம்(ney kamalam): lotus filled with nectar;

எற்றிய திருச்சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கு முருகோனே( etriya thiruch chaladhi sutriya thiruththaNiyil eppozhudhu niRku murugOnE): You stand steadily for ever at ThiruththaNigai, which is surrounded by wavy oceans, Oh MurugA!

எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் (ettachalam etta nilam muttamudi nettasurar): Those demons who ruled the entire earth across which is spread the eight mountains (including Mount Krouncha),அசலம்(achalam): mountain;

இட்ட சிறை விட்ட பெருமாளே.(itta siRai vitta perumALE.): and who imprisoned the DEvAs; You released them, Oh Great One!

Other songs based on the Nayaka-nayaki bhava:

Viral maran

kalai madavaar

muththuththerikka

kanaiththu athirkkum

Comments