143. வரிக்கலையினிகரான

ராகம் : காபி தாளம்: அங்க தாளம் (2 + 2 + 1½)
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள்மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூளஅதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடியவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீலமருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோதமகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடுபுலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலையுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவுபெருமாளே.

Learn The Song


Paraphrase

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே(varikkalayi nigarAna vizhikkadaiyil iLainyOrai mayakkiyidu madavArgaL mayalAlE:): From the corner of their doe-like eyes,these girls ensnare the youth; வரி கலை(மான்)(kalai(maan)): antelope with lines in the body;

மதி குளறி உள்ள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள (madhikkuLaRi uLa kAsum avarkkudhavi midiyAgi vayitrileri migamULa): who lose their sense thereby, become impoverished by giving away their money and possessions and as a result their stomachs burned;

அதனாலே ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரோடு பகையாகி(adhanAlE oruththarudan uRavAgi oruththarodu pagaiyAgi): Due to that fire, I became friendly with some and turned hostile to some;

ஒருத்தர் தமை மிக நாடி அவரோடே(oruththar thamai miganAdi): and yet again, I got exceedingly attached to few others;

உணக்கை இடு படு பாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே(avarOdE uNakkaiyidu padupAvi enakkunadhu kazhalpAda uyarcchipeRu guNaseelam aruLvAy): and become dejected; Kindly bless this sinner so that I may attain a lofty character and sing the glory of Your feet; உணக்கை இடு(uNakkai) can mean உண்ண கை இடு : that is, extending one's hands for receiving food, or it can mean becoming depressed;

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை(virith aruNagirinAthan uraiththathamizh enumAlai): The compositions of Thiruppugazh by ArunagirinAthan describing the glory of God in Tamil

மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே(miguththabala mudanOdha magizhvOnE): is sung with full force, You are pleased.

வெடித்த அமணர் கழு ஏற ஒருத்தி கணவனும் மீள(vediththa amaNar kazhuvERa oruththi kaNavanumeeLa): The chamaNas (anti-saivites) were killed in the gallows and The Pandya King, husband of the unique Mangaiyarkkarasi, was redeemed,

விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே( viLaiththadhoru thamizhpAdu pulavOnE ):when You came as ThirugnAna Sambandhar and sang the Divine Hymns (DEvAram) in Tamil

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது(serukkiyidu porusUrar kulaththaiyadi aRamOdhu): The haughty clan of SUran came to fight a war with You, and their entire dynasty was uprooted

திரு கையினில் வடி வேலை உடையோனே(thirukkaiyinil vadivElai udaiyOnE): by the sharp spear in Your auspicious hand!

திருக்குலவும் ஒரு நீல மலர் சுனையில் (thirukkulavum oruneela malarchchunaiyil): In this hallowed place is a beautiful fountain which produces every day a unique violet flower (Neelothpala flower);

அழகான திருத்தணிகை மலை மேவு பெருமாளே.(azhagAna thiruththaNigai malaimEvu perumALE.): this beautiful place is known as ThiruththaNigai, and You reside on its mount, Oh, Great One!

Comments