142. வட்டவாட்டன

ராகம் : ரஞ்சனி தாளம்: மிஸ்ரசாபு
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவிபதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறிவயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனையழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிருகழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின்மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்தமயில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி
யெட்டுமாக் குலையஎறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளியபெருமாளே.

Learn The Song


Paraphrase

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு(vatta vAL thana manaicchi pAl kuthalai makkaL thAy kizhavi pathi nAdu): My wife who has round and bright bosoms, the prattling kids, my elderly mother, my town, my house, வாள்(vAL): bright;

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக( vaiththa thOttam manai aththam eettu poruL matRa kUttam aRivu ayalAga): the garden I set up therein, my wealth, all the assets that I have earned, a host of my relatives and my knowledge - are all about to desert me, அத்தம்(aththam): wealth;

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்(mutta Otti miga ettum mOttu erumai muttar pUtti enai azhaiyAmun): when the foolish messengers of Yama driving a large buffalo to throttle my neck with the rope (of attachment) to take my life; before that moment, மோட்டு, முட்டர் (mottu, muttar): foolish

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்(muththi veedu aNuga muththar Akka suruthi kurAkkoL iru kazhal thArAy ): to enable me to get liberated and become an emancipated soul, kindly bless me with Your two hallowed feet which permeate the sacred VEdAs and the bunch of kurA flowers!

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா(patta nAl peru maruppinAl kara ibaththin vAL pidiyin maNavALA:): You are the consort of the bright girl Deivayanai who grew under the care of the celestial elephant Airavatha, which has decorated veil over its forehead, four large tusks of ivory and a hanging trunk; மருப்பு ( maruppu ): tusk; பிடி(pidi): elephant;

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி (pacchai vEy paNavai kocchai vEttuvar pathicchi: ): (VaLLI who is)standing on a raised platform made of raw bamboo and belongs to a tribal town of unsophisticated hunters; வேய்(vEy):bamboo; பணவை(paNavai): raised platform; பதி(pathi): town; பதிச்சி(pathicchi): woman belonging to the town;

தோள் புணர் தணியில் வேளே(thOL puNar thaNiyil vELE): You embraced the shoulders of that VaLLi, Oh Lord of ThiruththaNigai!

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டுமா குலைய எறி வேலா(ettu nAl kara oruththal mA thigiri ettu mAk kulaiya eRivElA): The elephants with hanging trunks and the eight large mountains (Mount Krouncha and the seven protective mountains of the demons) shuddered when You wielded the spear, Oh Lord! ஒருத்தல்(oruththal): male of quadrupeds in general and male elephant here; நால்(naal): hanging; நால் கர/வாய் (naalvAy/naal kara ): hanging mouth of hanging arms, refers by inference to trunk;

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே.(eththidArkku ariya muththa pA thamizh kodu eththinArkku eLiya perumALE.): You are beyond the reach of those who do not worship and and You are easily accessible to those who sing Your glory in Tamil songs, Oh Great One!

Comments