433. நச்சரவ மென்று

ராகம்: கானடாதாளம்: ஆதி
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்கமதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
நத்திரைவ ழங்குகடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்குமுறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்தகழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்தகதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்தபெருமாளே.

Learn The Song


Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 P G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 P M1 G2 M1 R2 S

Paraphrase

This song has been written in the Nayaka-Nayaki BhAva, portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the waves, seashells, the moon, Love God and the flowery arrows are some of the sources which aggravate the agony of her separation from the Lord. இந்தப் பாடல் தலைவியின் கூற்றாக, வேண்டலாக, நாயக-நாயகி பா(bha)வத்தில் அமைந்துள்ள ஓர் அகத்துறைப் பாடலாகும்.

நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று (nachchu arava mendru nachcharavam endru ) : Acting like a poisonous cobra, having been eagerly devoured and later regurgitated by the serpent Ketu (during eclipse), விரும்பிப் பிடிக்க வந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல நச்சு (nachchu) : desire, விரும்பி, அரவம் (aravam) : serpent: here, kethu; விஷப்பாம்பு (நவக்கிரகங்களில் ஒன்றானக் கேது), மென்று (mendru) : act of chewing, கடித்து, நச்சரவம் என்று (nachcharavam endru) : விஷப்பாம்பு என்றாகி,
நச்சு உமிழ் களங்க மதியாலும் (nachchu umizh kaLanga madhiyAlum) : the moon, full of blemishes, is flinging all that venom upon me. என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், நச்சுமிழ் (nachchumizh) : spewing venom, விஷத்தை உமிழ்கின்ற;
Explanation: To the love-lorn girl, the cool moon spews hot and distressing poison like a poisonous serpent, having been chewed and later spit out by Kethu, the poisonous serpent, ஒன்பது கோள்களில் ஒன்றானக் கேது என்னும் நச்சுப்பாம்பினால் முன்பு ஒருநாள் விரும்பிப் பிடிக்கப்பட்டு, விழுங்கி, மென்று உமிழப்பட்டக் காரணத்தால், தானும் நச்சுத்தன்மைகொண்ட ஒரு நச்சுப்பாம்பாக ஆகிவிட்டது என்று சொல்லும்படி என்மீது தாபம் என்னும் நஞ்சை உமிழும் நிலவாலும்,

நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு (naththodu muzhangu ganaththodu muzhangu) : The din made by the seashells and the thunderous sound from the clouds சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், நத்தொடு (naththodu) : சங்குகளோடு, கனம் (ganam) : cloud; கனத்தொடு (ganaththodu) : மேகத்தின்,
நத்திரை வழங்கு கடலாலும் (naththirai vazhangu kadalAlum) : that comes from the sea which throws out these uproarious waves, விசேஷமான அலைகளை வீசும் கடலாலும்,
Explanation: The girl suffers pangs of separation that is accentuated by the turbulent roar which arises from the wavy sea replete with shells and from the thunderous clouds, கடற்சங்கங்கள் பேரொலி எழுப்பி முழங்க, அத்தோடு விண்மேகங்கள் முழங்கும் இடியோசையும் சேர்ந்திட, அவ்வோசைகளுக்கு இணையாக ஓலமிடும் பேரலைகளை எழுப்பி வீசும் கடலாலும் உள்ளம் பொங்கி எழுந்து, விரக வேதனையடைந்து,

இச்சை உணர்வு இன்றி இச்சை என வந்த (ichchai uNarvindri ichchaiy ena vandha) : Assailed by love and lacking clarity of thought, she has come to You with nothing but desire; தலைவன் மீது அளவற்ற காதலால் உணர்வு இழந்து, இச்சையினால் அறிவு மயங்கி, உன் மீது காதல் எனக் கூறி வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே (ichchirumi nonthu meliyAthE) : and in order not to depress and weaken this little girl, இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல்,
எத்தனையு நெஞ்சில் எத்தனம் முயங்கி (eththanaiyu nenjil eththana muyangi) : coming to You with so many thoughts nurtured in the heart and making all attempts to worship, எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய அவளை/என்னை; எத்தனம் = முயற்சி.
இத்தனையில் அஞ்சல் என வேணும் (iththanaiyil anjal enavENum) : You should bless me right now granting refuge. இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும்.
Explanation: The girl, tormented by uncontrollable desire that gets intensified by the scorching moon and the roaring sea, makes numerous attempts to meet her lord, contravening societal restraints, and begs him to accept her. Her love is blind, immodest, fearless, and beyond intellect and reason. The devotee's mental state is similar; he pleads for the Lord's refuge. கட்டுக்கடங்காத விரகதாபத்தால் கொந்தளிக்கும் மனத்தோடு, கொதிக்கும் உடலோடும் பல முயற்சிகளை மேற்கொண்டு, முறைமைகளைக் கடந்து, தலைவன் இருக்கும் இடம் நாடி வந்து, தன்னை இதற்குமேலும் துன்பப்பட வைக்காமல். 'அஞ்சேல்!' எனக்கூறி ஏற்றுக்கொண்டருள் புரிய வேண்டும் என்று தலைவி வேண்டுகின்றாள். இப்பேதை அத்தலைவனிடம் கொண்டக் காதல் அவனை முற்றிலும் அறிந்தத் தெளிவினால் ஏற்பட்டது அன்று; அது அவன்மீதுக் கொண்டக் கண்மூடித்தனமான ஆசையினால் உண்டானது; எனவே, அது வெட்கம், காரண, காரியம், முறைமை எதையும் கருதாமல் எதற்கும் அஞ்சாமல் அவனை அடைவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. அப்பேதையின் நிலையில் தானும் இருப்பதாக அருணகிரியார் ஆண்டவனிடம் எடுத்துக்கூறித் தனக்கு அப்பெருமான் அபயம் அளிக்க வேண்டும் என்று இந்தப் பாடலில் வேண்டுகின்றார்.

பச்சை மயில் கொண்டு பச்சைமற மங்கை (pachchai mayil koNdu pachchai maRa mangai) : You mount the green Peacock and woo the green belle, VaLLi. பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன
பச்சை மலை எங்கும் உறைவோனே(pachchaimalai engum uRaivonE) : Your favourite resting place is the green and fertile hillside. பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே,
Explanation: Lord Murugan mounted the green peacock and dallied with the brave, green-hued lass Valli all over Vallimalai. Later He resided, along with the green peacock and the green maiden in verdant mountains standing on lush green forests. பச்சைநிற மயிலை வாகனமாகக்கொண்டு, அதன்மீதேறி, வீரம் மிக்க வேடர்தம் குலக்கொழுந்தும், பச்சை வண்ண மேனியை உடையவரும் ஆன‌ வள்ளியம்மை வாழும் பசுமை வண்ணம் கொண்ட வள்ளிமலை முழுவதும், அவ்வம்மையை அடைய வேண்டி அலைந்துத் திரிந்து, அந்தத் திருவிளையாடலின் போது அம்மலையெங்கும் உறைந்திருந்தவனே! பின்னர், அவ்வம்மையோடுப் பச்சைவண்ணப் பசுங்காடுகளால் போர்த்தப்பட்டுள்ள மலைகள் யாவற்றிலும் மயிலின்மிசை அமர்ந்து எழுந்தருளி உறைபவனே!

பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் (bakthiyuda nindru bakthiseyum anbar) : Your devotees, who remain steadfast in their devoutness, பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள்
பத்திரம் அணிந்த கழலோனே (paththiram aNindha kazhalOnE) : offer You green leaves (or supplicatory applications), adorning Your hallowed feet! பூஜிக்கிற இலைகளை அணிந்த திருவடிகளை உடையோனே, பத்திரம் (paththiram) : can mean either a 'leaf' or an 'application'. இலை, விண்ணப்பம், பத்தி (baththi) : can mean 'devotion' or 'righteousness'; 'பக்தி', 'முறைமை' அல்லது 'நிலைபெற்று' ;
Explanation: பக்தி நெறியில் நிலைத்து நின்று, சரியை, கிரியை, யோகம் போன்ற‌ வழிபாட்டு முறைகளை வரிசையாக, முறையாகப் பின்பற்றி, உன்னை பக்தியோடு வழிபடும் மெய்யன்பர்கள் பூசனையின்போது அருச்சிக்கும் இலைகளையும், மலர்களையும் அணிந்தத் திருவடிகளை உடையவனே! அவர்கள் வைக்கும் கோடானுக்கோடி விண்ணப்பங்கள் அலங்கரிக்கும் திருப்பாதத்தானே!

கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு (kachchivar kurumbai kachchavar virumbu) : The ascetics, who have shunned the seductive women wearing fancy blouses covering their bosoms, desire to worship You ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும்; கச்சு இவர் – கச்சு அணிந்துள்ள; கச்சவர் – கைத்தவர், வெறுத்தவர்;
கச்சியில் அமர்ந்த கதிர்வேலா ( kachchiyil amarndha kadhir vElA) : at Kachchi (kAnjeepuram) where You are seated, holding the bright spear! கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே,
Explanation: காம இச்சையைத் தூண்டும், பெண்களின் மார்புக் கச்சைகளின் உள்ளிருக்கும் தென்னங் குரும்பையைப் போன்ற கொங்கைகளை வெறுத்திடும் பெரும் தவசிகள் விரும்பித் தொழும் ஒளிரும் கதிர்வேல் கொண்டக் காஞ்சி மாநகருறைக் கந்தவேளே!

கற்பக வனங்கொள் கற்பு அக விசும்பர் (kaRpaga vanangkoL kaRpu aga visumbar) : The Celestials, who live in the land of wish-yielding trees and who uphold justice and righteousness in their hearts, கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின்; கற்பு அக விசும்பர் (kaRpu aga visumbar) : நன்னெறிகளை மனதில் கொண்ட விண்ணவர்கள்,
கைத்தளை களைந்த பெருமாளே. (kaiththaLai kaLaindha perumALE.) : were freed from their imprisonment by You, Oh Great One! கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே.
Explanation: பொன்னுலத்தில் இருக்கும் கற்பகவனத்தை உடையவர்களும், நீதி நெறிமுறைகளில், நன்னெறிகளில் நிலைத்த நெஞ்சத்தினரும் ஆன‌ விண்ணவர்க் கைகளில் சூரபதுமனால் பூட்டப்பட்டக் கைவிலங்குகளைக் களைந்து, அவர்களை வாழ்வித்தப் பெருமைக்குரியவனே!

Further Notes

இந்தப் பாடலின் ஒவ்வொரு கலையின் இரண்டாம் பகுதியைக் கொண்டு, பொருள்மிக்க ஒரு கரந்துறைப் பாடலையும் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்:
நச்சுமிழ் களங்க மதியாலும்,
நத்திரை வழங்கு கடலாலும்,
இச்சிறுமி நொந்து மெலியாதே,
இத்தனையில் அஞ்சல் எனவேணும்!
பச்சைமலை எங்கும் உறைவோனே!
பத்திரம் அணிந்த கழலோனே!
கச்சியில் அமர்ந்த கதிர்வேலா!
கைத்தளை களைந்த பெருமாளே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே