வந்து வந்து முன் தவழ்ந்து : J R. விளக்கவுரை
For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : வந்து வந்து முன் தவழ்ந்து
முன்னுரை
"வந்து வந்து முன் தவழ்ந்து" என்று தொடங்கும் திருச்செந்தூர் திருத்தலப் பாடல். சாஸ்வதம் என நம்பி உலகப் பற்றுக்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். அழகிய குழந்தை, அன்பான மனைவி, மாடமாளிகை, பரிவோடு கூடிநின்று அரண் அமைக்கும் சொந்த பந்தம், என்று வண்ணமயமாய் நிறைந்திருக்கும் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மறக்கும் அளவுக்கு நினைவாற்றல் இழப்பதற்கு முன் முருகன் கழல் பற்றத் தவிக்கும் அருணகிரியார், அந்தத் தவிப்பை நமக்குள்ளும் செலுத்தும் பாடல். ஒருநாள் இந்த உலக நினைவுகள் மங்கி மறந்து போகலாம், அந்த சுந்தரக் கந்தனையும் நினைக்காமல் விட்டுவிட்டால் அந்தரத்தில் அல்லவா ஊசலாட நேரிடும் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
வந்து வந்து முன் தவழ்ந்து
வெஞ் சுகம் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி அழுங்குழநதையோடு
மண்டலம் குலுங்க அண்டர்
விண்டலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும்பயின்ற வீடு
கொந்தளைந்த குந்தளம்
தழைந்து குங்குமம் தயங்கு
கொங்கை வஞ்சி தஞ்சமென்றுமங்கு காலம்
கொங்கடம்பு கொங்கு பொங்கு
பைங்டம்பு தண்டை கொஞ்சு
செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்
சந்தடர்ந்து எழுந்தரும்பு
மந்தரம் செழுங் கரும்பு
கந்தரம்பை செண்பதங் கொள்செந்தில் வாழ்வே
தண் கடங் கடந்து சென்று
பண்கடங் கடர்ந்த இன்சொல்
திண்புனம் புகுந்து கண்டுஇறைஞ்சு கோவே
அந்தகன் கலங்க வந்த
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்தலம்புரிந்த மார்பா
அம்புனம் புகுந்த நண்பர்
சம்பு தன் புரநதரன்
தரம் பலும்பர் நம்புதம்பிரானே
Comments
Post a Comment