அரி அயன் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link ari ayan

அரிகாக்கும் கடவுளும் செல்வம், ஆற்றலுக்கு அதிபதியான ஆன திருமாலும்,
அயன்அறிவுக்குத்தலைவரான படைப்புக்கடவுள் பிரம்மாவும் ( கூட)
அறியாதவர்(முறையே) யாருடைய அடியையும், முடியையும் அதாவது முதலையும் முடிவையும் அறிய முயன்று காண முடியாது திரும்பினரோ அவர்,
புரம் மூணும் எரி புகமூன்று புரங்களிலும் (எனும் முக்குணங்களில்) தீ மூளும்படி
நகை ஏவிய நாதர் தன் சிரிப்பை அம்பு போலச் செலுத்தியவரும் ஆன சிவ பெருமான்
அவிர் சடை மிசை தன் அவிழ்த்த சடையின் நடுவில்
ஓர் வனிதையர் பதிமுடியப்பட்ட கங்கையாகிய மங்கையின் தலைவர்
சீறு அழலையும் கோபமுற்றது போல் ஒசையிடும் சுடும் நெருப்பை ஒரு கையிலும்
மழு நேர் பிடி நாதர் மழு எனும் பரசு ஆயுதத்தை மற்றொரு கையிலும் சமமாகப்பிடித்துக் கொண்டிருக்கும் இறைவர்
மன மகிழ் குமரா என மனதுக்கு ஆனந்தம் தரும் புதல்வனே என்று (உன்னைப்) புகழ்ந்து
உனது இரு தாள் உன் இரண்டு திருவடி
மலரடி தொழுமாறு அருள்வாயேமலர்களையும் (நான்) வணங்கும்படி அருள் புரிவாயாக (பக்தியை அருள வேண்டுகிறார்)
அரு வரை உயர்ந்த அல்லது பிளக்க மிகவும் கடினமான மலை (க்ரௌஞ்சம்)
இரு கூறு இடவேஇரண்டு பகுதிகளாகி விடும்படி
ஒரு மயில் மேல்ஒப்பற்ற உனது வாகனமான மயில் மீது அமர்ந்து
அவனியை வலமாய் வருவோனே (இந்த) பூமியை (பழத்தைப் பெற விநாயகரோடு போட்டி இட்டு) பிரதக்ஷிணமாக வந்தவனே
அமரர்கள் இகல்தேவர்களுக்குப் பகையான
நீடு அசுரர்கள் தலை மேல் பெரிய அரக்க சேனையின் தலைகள் உடலில் இருந்து விடு படும்படி
அயில் தனைகூர்மையான (உன் வேல்) ஆயுதத்தை
விசையாய் விடுவோனே வேகமாக விடுத்தவனே
வரிசையோடு(சீர்) பரிசுப்பொருள்களோடு
ஒரு மா தினை தரு வனமே மருவி ஒப்பற்ற பெருமையுடைய தினைப்புனம் சென்று அடைந்து
ஒர் குற மாது அணை வேடாஒப்பற்றவளான (வள்ளி) வேட குலப் பெண்ணை வேட வேடம் புனைந்து தழுவிக்கொண்டவனே
மலைகளில் மகிழ்வாய்மலைகள் தோறும் விரும்பிக்குடி கொள்பவனே
மருவி வரு நல் வடுகூர் வந்து சேரும் நலங்கள் சேர்ந்த வடுகூர் தலத்தில்
தவ முனிவோர்தவசிகள், முனிவர்களுக்கு
பெருமாளே= தலைவனே, தெய்வமே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே