300. அரியயனறியா


ராகம் : ரேவதி தாளம்: ஆதி
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையேவியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியேவியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமாறருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய்விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர்பெருமாளே.

Raga Revati (Janyam of 2nd mela Rathnangi)

Arohanam: S R1 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 R1 S

Learn The Song




Paraphrase

அரி அயன் அறியாதவர் ( ari ayan ariyAdhavar) : He could not be perceived even by Vishnu and BrahmA;

எரி புரமூணு அது புக நகை ஏவிய நாதர் (eripura mUN adhu puga nagai Eviya nAthar) : He burnt down the triple forts of Thiripuram by a mere smile; புர(ம்) மூணு(puram mUN) : three forts, Thripura; நகை(nagai) : smile;

அவிர் சடைமிசை ஓர் வனிதையர் பதி (avirsadai misaiyOr vanithaiyar pathi) : He is the master of Ganga river whom He carries on His tresses; அவிர் (avir) : bright and sparkling;

சீறு அழலையும் மழு நேர் பிடிநாதர் (seeR azhalaiyu mazhu nEr pidinAthar ) : He holds in His hands, the ravaging fire and a pick-axe;

வரை மகள் ஒரு கூறுடையவர் (varai magaL oru kUR udaiyavar) : He shares His body with PArvathi, the daughter of HimavAn (Mount);

மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் (madhanAgamum vizha vizhi yEviya nAthar) : and with His fiery eye on the forehead, He rendered the body of Manmathan (Love God) into ashes; ஆகம்(Agam) : body;

மனமகிழ் குமரா (manamagizh kumarA) : You gladden the heart of That Lord Siva, Oh KumarA!

என உனது இருதாள் மலரடி தொழுமாறு அருள்வாயே (ena unadhiru thAL malaradi thozhumAR aruLvAyE) : Kindly grant me that I worship Your lotus feet,contemplating on You as above.

அருவரை இரு கூறிட (aruvarai iru kURida) : You split the rare mountain (Krounchamalai) into two and

ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே ( oru mayil mEl avaniyai valamAy varuvOnE) : circumambulated the world on Your unique Peacock.

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் (amarargaL igal needu asurargaL siramEl) : On the heads of the asuras who are hostile to DEvAs,

அயில்தனை விசையாய் விடுவோனே ( ayil thanai visaiyAy viduvOnE) : You throw Your spear extremely fast!

வரிசையொடு ஒருமா தினை தரு வனமே ( varisaiyod orumA thinai tharu vanamE) : To the forest where there are rows of robust millet fields,

மருவி ஓர் குறமாது அணை வேடா (maruvi or kuRa mAdhu aNai vEdA) : You went in the disguise of a hunter to woo and hug VaLLi, the hunter girl.

மலைகளில் மகிழ்வாய் ( malaigaLil magizhvAy) : You revel in the mountains!

மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே.(maruvinal vadukUr varuthava munivOr perumALE.) : For those sages who come with devotion to this place VadukUr, You are very dear, Oh Great One! மனம் பொருந்தி நல்ல வடுகூர் என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே! மருவி = மனம் பொருந்தி;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே