எட்டுடன் ஒரு — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link ettudan

எட்டு உடன் ஒரு எட்டும் ஒன்றும் சேர்ந்து ஒன்பது
தொளை வாயாதுவாரங்கள் வாய்க்கப் பெற்ற
அது பசு மண் கலம்நிலை இல்லாத, சுடப்படாத மண்பாண்டத்தைப் போன்ற
இருவினை தோயாநல்வினை தீவினை இவை இரண்டால் உண்டான உடல்
மிகு பிணி இட்டு இடைசெயபல நோய்கள் வந்து இடையூறு செய்ய
ஒருபோதாகிலும் உயிர் நிலையாக இந்த உடலில் உயிர்  சற்று நேரமாவது நிலைக்குமா
எப்படி உயர்கதி நாம் பெறுவது எனஉயர்ந்த முக்தி நிலையை எப்படி முயன்று நாம் அடைவது  என்று
எள் பகிரினும் சிறிய எள்ளின் துகள் அளவு கூட
இது ஓரார் தம தமதுஇதைப்பற்றிச் சிந்திக்காதவர் அவரவர்கள்
இச்சையின் இடர் உறு ஆசைகளால் துன்பம் மிகுந்த
பேராசை கொள் கடல்பேராசை எனும் கடல்
அதிலே வீழ் முட்டர்கள் அதனுள் விழுகின்ற அறிவில்லாத மூடர்கள்
நெறியினில் வீழாது அடலோடு வழிகளில் விழுந்து விடாது வீரத்தோடு
முப்பதின் அறுபதின் மேலாம் அறு வரும் முற்றுதல் அறிவருஇந்தப்ரபஞ்சத்தின், மனித உடலின் மூலக்கூறுகளான (30+60+6 ) 96 தத்துவங்கங்களில் எதனாலும் அறிய முடியாத (இவற்றின் பிடியிலிருந்து/ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையிலேயே பெறப்படும்)
ஞான உதய ஒளி வெளியாகஆத்மஞானமாகிற எந்தக்கட்டும் எல்லையும் இல்லாத ஒளி வெளிப்பட்டு விளங்க
முக்குணம் அது கெட96 ல் அடங்கும் சத்வ ரஜோ தமோ குணங்களும் இல்லாமல் போய்
"நான் நான்" என வரு நான் என்று இந்த உடலை (96 தத்துவங்களின் கூட்டாகிய) அபிமானிக்கும்
முத்திரை அழிதரநாம ரூபங்களை இழந்து மனம் ஆன்மாவில் லயிக்கும் படியாக
ஆரா அமுது அன தெவிட்டாத அமிர்தம் போன்ற
முத்தமிழ் தெரி கனிவாயால் இயல் இசை நாடகம் என்னும் மூன்றுடன் கூடிய தமிழை ஆராய்ந்து உரை செய்யும் உனது பழம்போல் சிவந்ததும் இனியதும் ஆன திரு வாயால்
அருளுவது ஒரு நாளேஉபதேசம் கொடுக்கும் அந்த நன்னாள் என்றோ?
திட் என எதிர் வரு மாகாளியின் ஒடுதிடீர் என திடமாக தன்னை எதிர்த்து வாதாட வந்த மகா காளியோடு
திக்கிட தரிகிட தீதோம் என ஒரு சித்திர வெகு வித வாதாடிய இந்த வித ஜதிகளோடு ஒப்பற்ற ஆச்சரியகரமான பலப்பலவிதங்களில் பந்தயம் இட்டு நடனம் புரிந்த
பதமலர் ஆளன்திருப்பாத மலர்கள் உடைய சிவபெருமான்
செப்புக என முனம் எனக்குச் சொல்வாயாக எனக்கேட்க அன்றொரு நாள்
ஓதாது உணர்வது (வெறும்) கல்வியினால் மட்டும் அறிந்து விட முடியாத, உள் உணர்வினால் அடையப்படும்
சித் சுக பர வெளி ஈதே என ஆத்ம ஆனந்தமாகிய, கருவி கரணங்கள் எல்லாம் கடந்த மேலான நிலை இதுதான் என்று
அவர் தெக்ஷிண செவிதனிலே அவருடைய வலக்காதில்
போதனை அருள் குருநாதாஉபதேசம் செய்து அருளிய (சிவ) குருநாதனே
மட்டு அற அமர் பொரு அளவற்ற வீரத்துடன் போர் புரிந்த
சூராதிபன் உடல்சூரபத்மனுடைய உடல்
பொட்டு எழ முடுகிஎரிந்து விடும் படி, வேகத்துடன்
வை வேலால் எறிதரு மல் புய கூர்மையான வேல் ஆயுதம் செலுத்திய மல் யுத்தத்திலும் வல்ல தோள்கள் உடையவனே
மரகத மா தோகையில் நடம் இடுவோனேபச்சை வண்ணமுடைய தோகை மயில் பறவையுடன் நிருத்தம் புரிபவனே
வச்சிர கர தலகையில் வச்சிராயுதம் தரித்த
வானோர் அதிபதிதேவர்கள் அரசனான இந்திரனை
பொற்பு உறு கரி பரி பெருமை பொருந்திய ஐராவதம் எனும் யானையும் அமிர்தத்துக்காகக் கடையும் போது பால் கடலில் இருந்து கிடைத்த உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரையும்
தேரோடு மாதலி   எனும் சாரதி செலுத்தும் அழகிய தேர்
அழகுற வைத்திடு இவற்றோடு  பாதுகாப்பாக இருக்கச்செய்து
மருமகனே அவன் மகளான தேவயானையை மணந்து அவனுக்கு மருமகனும் ஆனவனே (இங்ஙனம் அவனை கௌரவித்தவனே)
வாழ் அமரர்கள் அழிவின்றி என்றும் வாழ்கின்ற தேவர்கள்
பெருமாளே தலைவனே.

Comments

  1. Apple Watch 6 Titanium - TiG - TiG
    At titanium wheels this time, microtouch titanium trim as seen on tv it is still nano titanium in the titanium build works, and will soon be available for sale. The watch features a titanium dive watch large number of Apple Watch accessories, such as Apple Watch 2.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே