345. எட்டுடன் ஒரு


ராகம்: த்விஜாவந்தி தாளம்: ஆதி 2 களை
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா மிகுபிணி
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர்நிலையாக
எப்படி யுயர்கதி நாமே றுவதென
எட்பகி ரினுமிது வோரார் தமதம
திச்சையி னிடருறு பேரா சைகொள்கடலதிலேவீழ்
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா மறுவரு
முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக
முக்குண மதுகெட நானா வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே
திட்டென எதிர்வரு மாகா ளியினொடு
திக்கிட தரிகிட தீதோ மெனவொரு
சித்திர வெகுவித வாதா டியபத மலராளன்
செப்புக வெனமுன மோதா துணர்வது
சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்
தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் குருநாதா
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்
பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு
மற்புய மரகத மாதோ கையில்நட மிடுவோனே
வச்சிர கரதல வானோ ரதிபதி
பொற்புறு கரிபரி தேரோ டழகுற
வைத்திடு மருமக னேவா ழமரர்கள் பெருமாளே.

Learn The Song



Paraphrase

எட்டுடன் ஒரு தொளை வாயாயது (ettudan oruthoLai vAyAyadhu) : This body has (8+1) nine portals; ஒன்பது தொளை வாயில்களை உடையது (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை.;

பசுமண் கலம் இரு வினை தோயா (pasu maN kalam iruvinai thOyA) : this vessel is made of raw clay, mingled with both good and bad deeds; பசு மண் பத்திரம் போன்ற இந்த உடல் நல்வினை, தீவினை என்னும் இருவினைகளில் தோய்ந்து;

மிகுபிணி இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக (migupiNi ittidai seya oru pOdhAgilum uyir nilaiyAga) : the excessive diseases inflicted thereon hinder the existence of life in this body at any time. மிக்கு வரும் பிணிகள் ஒரு பொழுதிலேனும் உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய;

எப்படி உயர் கதி நாம் ஏறுவது என (eppadi uyargathi nAm ERuvadhena) : Not knowing how they are going to climb up to the shore of salvation,

எள் பகிரினும் இது ஓரார் தம தமது (eL pagirinum idhu OrAr thama thamadh) : many people, who have never realised an iota of truth about salvation, pursue, எள் பகிரினும் (eL pagirinum ) : எள் பிளவு பட்ட அளவு கூட;

இச்சையின் இடர் உறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் (ichchaiyin idar uRu perAsai koL kadal adhilE veezh) : the path of desire, eventually falling into the disastrous sea of greed; ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற

முட்டர்கள் நெறியினில் வீழாது ( muttarga NeRiyinil veezhAthu) : I do not want to follow the lead of those fools. மூடர்களின் தீயவழியில் நான் விழாமல்,

அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் முற்றுதல் (adalodu muppadhin aRupadhin mElAm aRuvarum mutrudhal) : Conquering the powerful tenets, numbering ninety-six, வலிமையான 96 தத்துவங்களை முற்றிக் கடந்த;

அறி வரு ஞானோதய ஒளி வெளியாக ( aRivaru nyAnOdhaya oLi veLiyAga) : the True Knowledge that lies beyond the intellect emerges as a bright effulgence, அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படி விளக்கமானது வெளிப்பட,

முக்குணமது கெட (mukguNam adhukeda) : for the destruction of the three Gunas (qualities); சத்துவம், இராசதம், தாமசம் என்ற முக்குணங்கள் அழிய,
The three Gunas are Sattva (purity), Rajas (activity), and Tamas (darkness, destruction). Gunas are present in everything, animate and innate objects, in various degrees, one quality is always more dominant than the others. These gunas come from prakriti or maya and do not affect purusha/pati.

நானா என வரும் முத்திரை அழிதர (nAnA enavaru mudhdhirai azhithara) : and for the erasure of the stamp of egoism and arrogance, நான் என்று ஆணவ உணர்ச்சியான அடையாள முத்திரை அழிந்து ஒழிய,

ஆரா அமுது அ(ன்)ன முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒருநாளே (ArA amudhana muththamizh theri kani vAyAl aruLuvadh oru nALE) : will there be a day when You will open Your sweet mouth and preach to me in nectar-like Tamil language?

திட்டென எதிர் வரு மாகாளியினொடு (dhittena edhir varu mAkALiyinodu) : Goddess KALi suddenly confronted Him in a challenging posture;

திக்கிட தரிகிட தீதோம் என ஒரு (dhikkita tharikita dhee thOmena oru) : (taking up that challenge) to the meter of "dhikkita tharikita dhee thOm",

சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் (chiththira veguvidha vAdhAdiya padha malarALan) : He danced the Cosmic Dance beautifully and in a unique way; that Lord SivA, with the hallowed feet,

செப்புக என முனம் ஓதாது உணர்வது (seppuga ena munam OdhAdh uNarvadhu) : beseeched You to reveal to Him the significance of the PraNava ManthrA, which was never before stated and which could only be perceived;

சிற் சுக பர ஒளி ஈதே என (siRsuka paraveLi eedhE ena) : Stating that It was the only blissful and Cosmic Truth, ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று;;

அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா (avar dhekshaNa sevithanilE bOdhanai aruL gurunAthA) : You graciously preached into His right ear the significance of that ManthrA, Oh Master of Masters!

மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் ( mattaRa amarporu sUrA dhipan udal) : The body of SUran, the leader of the Demons, who fought a meticulous war, மிகப் பல வழியில் சண்டை செய்த சூரனாம் தலைவனுடைய உடல்;

பொட்டு எழ முடுகி வை வேலால் எறி தரு மல் புய (pottu ezha mudugi vaivElAl eRitharum maRbuya) : was shattered to pieces when You swiftly wielded Your sharp spear; You have such powerful and strong shoulders!

மரகத மா தோகையில் நடம் இடுவோனே (maragatha mAthOgaiyil nata miduvOnE) : Mounting the emerald-green peacock, You dance so beautifully!

வச்சிர கர தல வானோர் அதிபதி (vajjira karathala vAnOr adhipathi) : IndrA, the Leader of the celestials, who wields the weapon vajra,

பொற்பு உறு கரி பரி தேரோடு அழகுற வைத்திடும் மருமகனே ( poRpu uRu kari pari thErOd azhaguRa vaiththidu marumaganE) : who has the elegant elephant (AirAvadham), the horse (Uchchaisravas) and chariots, owes His status to You, His dear son-in-law! பொற்பு (poRpu) : beauty, elegance;

வாழ் அமரர்கள் பெருமாளே. (vAzh amarargaL perumALE.) : You are also the Lord of the prosperous celestials, Oh Great One!

சிவன் காளி நடனப்போட்டி

ஒரு சமயம் தேவர்கள் அசுரர்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி அம்பிகையை வேண்டினர். தேவியின் அம்சமான சப்த மாதர்கள் சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களை வதைத்தார்கள். பிறகு சும்ப நிசும்பர்களின் மருமகனான ரக்தபீஜன் யுத்தத்திற்கு வந்தான். ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் அசுரர்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர்! தேவி தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய காளியைத் தோற்றுவித்து ரத்தபீஜனுடைய உடலிலிருந்து வெளிப்படும் ரத்தம் துளிக்கூட பூமியில் சிந்தாமல் கைகளை கபாலம் போல் குவித்து அதில் ஏந்திக் குடிக்கும்படி ஆணையிடுகிறாள். காளி தன் எண்ணற்ற கரங்களில் அவன் ரத்தத்தை ஏந்திப் பருக அவன் மாள்கிறான். தேவர்கள் துன்பம் தொலைந்தது.

அசுரன் ரத்தத்தைக் குடித்ததால் காளிக்கு அசுரத்தன்மை உண்டானது. அவள் மோகினி, இடாகினி என்று பல பூதங்கள் புடை சூழ காடு காடுகளாய் சுற்றி இறுதியில் திருவாலங்காட்டுக்கு அருகில் வந்து தங்கி அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

காளியின் இந்த துர்ச்செயல்கள் நாரதர் மூலம் திருமாலுக்கும் திருமால் மூலம் சிவனுக்கும் செல்ல, அவர் காளியின் செருக்கை அடக்கத் திருவாலங்காட்டுக்கு வருகிறார். அவரது போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சிய காளி போரைத் தவிர்த்து விட்டு சிவனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள். அதில் சிவன் வென்றால் காளி, தன் அசுரத்தன்மையை விட்டுவிட வேண்டுமென்றும் ஒப்பந்தமானது. போட்டியில் சிவன் ஊர்த்துவ நடனமாடி வெற்றி பெற்றார். காளியும் சாந்தமானாள். அவர்கள் நடனமாடிய சபை ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டதால் திருவாலங்காடு ‘ரத்தின சபை’ எனப்பட்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே