மயில் வகுப்பு
For translation of the mayil vaguppu in English, click the link mayil vaguppu
ஆதவனும் அம்புலியும் | சூரியனும் சந்திரனும் |
மாசு உற | களங்கம் அடையும்படியாக (கிரஹண காலத்தில் இவை இரண்டுமே நச்சுக்கிரணங்களை வெளியிடும் என அறிவியலும் ஒப்புக்கொள்கிறது; கருநிழலும் அவற்றில் படிப்படியாகப் படிந்து பின் மெதுமெதுவே விலகுகிறது; மேலும் இது அவர்கள் கீர்த்திக்கே பெரும் களங்கமாகிறது) |
விழுங்கி | இவற்றை முறையே ராகுவும் கேதுவும் விழுங்கி |
உமிழும் | பின் வெளிவிடும் |
ஆல(ம்) மருவும் | விஷம் உடைய |
பணி இரண்டும் | அந்த ராஹூ, கேதுக்களாகிய இரு பாம்புகளும்(கூட) |
அழுதே | கலங்கித் துன்பப்பட்டு |
ஆறுமுகன் | ஆறுமுகங்கள் கொண்ட முருகப்பெருமானும் |
ஐந்து முகன் | பஞ்சமுகன் என்னும் சிவ பெருமானும் |
ஆனைமுகன் | யானைமுகம் கொண்ட கணபதியும் |
எம் கடவுள் ஆம் என மொழிந்து | நாங்கள் வணங்கும் கடவுளர்கள் (என்று ஏற்றுக்கொண்டோம், எங்களை விட்டுவிடுவாய்) என்று கூறி |
அகல | அந்த சூர்ய, சந்திரர்களை விட்டு விலகிப் போகவும் (அவர்கள் இருவரும் தம் துன்பம் தீர முருகனை உபாசிக்க அவர் ஏவுதலினால் வாகனமான மயில் தோன்றி) |
வென்று விடுமே | அவ்விரண்டு பாம்பையும் வெற்றிகாணும் |
ஆர்கலி | மிகுந்த ஆரவாரம் உடைய (பால்) கடலை |
கடைந்து | (மந்த்ர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தைக் கயிறாகக் கொண்டு) கடைந்து |
அமுது | தேவாமிர்தத்தை |
வானவர் அருந்த | தேவர்கள் உண்ணும்படி |
அருள் ஆதிபகவன் | கொடுத்த முழுமுதல் கடவுளாம் திருமால் |
துயில் | தனக்குப்படுக்கையாக்கி அறிதுயில் கொள்ளும் |
அனந்தன் | அனந்தன் எனும் ஆதிசேஷன் |
மணிசேர் | ரத்தினங்கள் பதித்த கிரீடமுடைய |
ஆயிரம் இரும் தலைகளாய் | ஆயிரம் பெருமை பொருந்திய தலைகளாக |
விரியும் பணம் | விரிகின்ற படங்கள் |
குருதி ஆக | இரத்தம் பெருக |
முழுதும் குலைய | அந்த சேஷன் ஒரேயடியாக வலுவிழந்து விடும்படி |
வந்து அறையுமே | வந்து அதனைத் தாக்கும் |
ஆதி சேஷன் தான் தன் வலிமையால் அண்டங்களைத்தாங்குகிறோம் என்று அடைந்த கர்வத்தை மயில் எனும் ஞானம் அடக்கி விடுகிறது. | |
வேதம் முழுதும் புகல் | வேதங்கள் எல்லாம் முழுமுதல் என்று யாரைப்போற்றுகின்றனவோ |
இராமன் தம்பி மிசை | அந்த இராமபிரானின் தம்பியான இலட்சுமணன் மேல் |
வீடணன் அரும் தமையன் | விபீஷணருடைய வெல்லமுடியாத இராவணனின் |
மைந்தன் | மகனாகிய இந்திரஜித் |
இகலாய் | பகைத்து, கோபம் கொண்டு |
வீசும் அரவம் | ஏவிய நாகாஸ்திரம் |
சிதறி ஓட | பயந்து இங்குமங்கும் ஓடும்படி |
வரு வெம் கலுழன் மேல் | வேகமாய் வரும் வலிமையும் கோபமும் உடைய (விஷ்ணு வாகனமான) கருடனின் மீது |
இடி எனும்படி | இடி போல |
முழங்கி விழுமே | பெரும் ஓசையுடன் எதிர்த்துத் தாக்கி விடும் |
மேதினி சுமந்த | இந்த பூமியை (மற்ற அண்டங்களுடன்) தாங்குகின்ற |
மாசுணம் மயங்க | ஆதிசேஷனாகிற பாம்பு கலக்கம் கொள்ளும்படி |
நக(ம்) மேவு | நகங்கள் கொண்ட |
சரணம் கொண்டு | தன் கால்களினால் |
உலகு எங்கும் உழுமே | பூ உலகில் தான் நடக்கும்பொழுது கால்கள் ஆழப் பதிந்து உழுதது போல் செய்துவிடும். |
வேலி என எண்திசையில் வாழும் | வேலி இட்டது போல எட்டுத்திக்குகளிலும் அண்டத்தைச்சுற்றிக் காவலாக இருக்கின்ற |
உரகம் | வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன் போன்ற எட்ட நாகங்களும் |
தளர | பலம் குன்றிவிட |
வே அழல் எனும் | மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசுவதால் ஏற்படும் காட்டுத்தீ போல |
சினமுடன் படருமே | கோபத்துடன் விரைந்து எல்லா இடமும் நிறைந்து விடும். |
போதினில் இருந்த | (வெண்) தாமரையில் வீற்று இருக்கும் |
கலை மாதினை | கல்விக்கு அரசியாம் சரஸ்வதியை |
மணந்த உயர் போதனை | திருமணம் புரிந்த பதியான உயர்ந்த ஞானத்தை உடைய பிரமனை |
இரந்து | வேண்டித் துதித்து |
மலர் கொண்டு முறையே | நல்ல பூக்களைக்கொண்டு முறைப்படி |
பூசனை புரிந்து | பூஜைகள் செய்து |
கொடியாகி மகிழ் | அதன் பயனாக அவருக்கு வாகனமாயும் கொடியில் சின்னமாகவும் இருக்கும் பேறு பெற்றுப் பூரித்த |
ஒன்று துகிர் போல் முடி விளங்க | தலையில் பொருந்திய பவளம் போல் நிறம் கொண்டு |
வரும் அஞ்சம் அடுமே | வருகின்ற அன்னப்பக்ஷியின் அகந்தையைத் தாக்கி வீழ்த்திவிடும் |
பூதர் ஒடு கந்தருவர் | பூத கணங்கள், கந்தர்வர்கள் |
நாதரொடு கிம்புருடர் | நாகர்கள், கிம்புருடர் |
பூரண கணங்களொடு | இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்கள் |
வந்து தொழவே | தன்னைத் தொழும்படியாக |
போரிடுவ வென்று | போரில் வென்று |
பல வாரணகணங்கள் | பல (ஆயிரம்) யானைகளும் |
உயிர் போயினம் எனும் படி | "ஐயோ செத்தோம்" என்று அலறும்படி |
எதிர்ந்து விழுமே | அந்த யானைகளையும் வலிமையுடன் தாக்கும் |
பிரம்மனும், விஷ்ணு பகவானும் முருகனைத் தரிசிக்க வந்தபோது அவர்கள் வாகனங்களான அன்னமும் கருடனும் மயிலை மதியாது ஏளனம் செய்தன. மயில் அவர்களுடன் போர் செய்து வீழ்த்திக்கட்டி வைத்துவிட, பின் முருகன் வந்து விடுவித்து அனுப்பினார். இப்படி கர்வம் அடங்கப்பெற்றனர். ஆனால், எப்படியும் அடியாருக்குத் துன்பம் கொடுத்ததால் பூமியில் சென்று, தவம் செய்து தன்னை அடைய வேண்டும் என்று பெருமான் பணித்ததால் மயிலே மலையான தலம் விராலி மலை என்பர். கலைமகள் கல்விக்கு அரசி. அவளுடைய நாதரான பிரம்மாவும் ஞான யோகத்தில் சிறந்தவர். எனவே அன்னம் அவர் வாஹனம் எனப்படும். அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பாலை மாத்திரம் உண்ணும் திறமை உடையது. எனவே, ஆத்ம- அநாத்ம, நித்ய- அநித்ய விவேசனம் ஆகிய பகுத்தறிவுக்கு அன்னம் குறியீடு. அதில் பெரியாரை பரமஹம்ஸர் என்று ஹம்சம் எனும் அன்னத்தின் பெயராலேயே குறிப்பிடுவோம். இந்தக்கதை, கல்வியினால், அறிவாற்றல் மிகுதியினால் ஏற்படும் கர்வத்தையும் மயிலாகிய மெய்ஞ்ஞானம் இல்லாமல் அடக்கிவிடும் என்பதை உணர்த்துகிறது. | |
கோது அகலும் | குற்றம் சொல்ல முடியாத (மணம், அழகு, புதுமை, கவர்ச்சி குறையாத) |
ஐந்து மலர் வாளி | பஞ்ச தன் மாத்திரைகளாகிய ஐந்து பூக்களால் ஆன அம்புகளை உடைய |
மதனன் | காமன் |
பொரு வில் | தாக்குகின்ற (மனமாகிற) வில்லை ஏந்திய |
கோல உடலம் | அழகான உடல் |
கருகி வெந்து விழவே | பொசுங்கிக்கரும் சாம்பலாகி உதிரும்படி |
கோபம் ஒடு கண்ட நாதர் | மிகுந்த சினத்தோடு "மதன் ஆகமும் விழ விழி ஏவிய" என்றபடித் தன் தழல் பார்வையையே ஆக்னேய அஸ்திரம் போலச்செலுத்திய பரமசிவனார் |
அணியும் பணிகள் | தலை, கழுத்து, மார்பு, தோள்,கைகள், இடை, பாதம் இவற்றில் அணிந்திருக்கும் பாம்புகள் |
தாருகா வனத்து ரிஷிகள் மந்திரங்களால் ஏவிவிட்ட பாம்புகளை இறைவன் ஆபரணங்களாக அணிந்து கொண்டார் என்பது புராணம். தாருகாவன ரிஷிகள் பக்தி இல்லாத, வெறும் கர்மாக்கள் அதனால் கிடைக்கும் சக்தியையும், அறைகுறை அறிவினால் ஏற்படும் குதர்க்கம் இவற்றை இந்தப்பாம்புகள் குறிக்கும். மயில் என்கிற ஞானம் தோன்றியதும் இவை தானே மறையும் | |
கூடி மனம் அஞ்சி | எல்லாம் சேர்ந்து நெஞ்சில் பயம் கொண்டு |
வளை சென்று புகவே | பொந்துகளில் பதுங்கிக்கொள்ள |
கூவி இரவு அந்தம் உணர் | குரல் கொடுத்து இரவுப்பொழுது முடிந்து விட்டதை அறிவிக்கும் |
சேவல் ஓங்காரத்தின் ஒலி வடிவம், மயில் அதன் ஒளி வடிவம் அதாவது உருவம் என்பர். அஞ்ஞான இரவு போய் ஞான சூரியன் உதிக்க நேரம் நெருங்கும் போது, குண்டலினி ஆஞ்யா சக்கரத்தில் பிரவேசிக்கும் போது அநாஹத த்வனி கேட்கும் என்பர். அதுவே "கூவி இரவந்தம் உணர் " என்று கூறப்படுகிறது. | |
வாழி என | எல்லோரும் வாழ்க என்று |
பொரு கோழியொடு | (துட்டர்களிடம்) போர்க்குணம் கொண்ட (முருகனின் கொடியில் இருக்கும்) சேவலிடம் |
வென்றி முறையும் பகருமே | (அஞ்ஞானத்தை) வெற்றி அடையும் வழிகளை உரைக்கும் |
கோலம் உறு செந்தில் நகர் | அழகு மிகுந்த திருச்செந்தூர் நகரத்தில் |
மேவு குமரன் | உறையும் குமரக்கடவுளின் |
சரண கோகனதம் | திருவடித் தாமரைகளை |
அன்பொடு வணங்கு(ம்) மயிலே | பக்தியோடு பணிகின்ற மயில். |
Comments
Post a Comment