10. மயில் வகுப்பு

ராகம் : ராகமாலிகை            தாளம்: சதுச்ர ஏகம்

ராகம் : பைரவி

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
யாகமுழு துங்குலைய வந்த றையுமே

ராகம் : நடபைரவி

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே

ராகம் : ஆனந்தபைரவி

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே

ராகம் : சிந்துபைரவி

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.


Learn The Song



Paraphrase

பாற்கடலை கடைந்து எடுத்து அமிர்தத்தை விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதாக கூறினாலும் தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை கொடுத்து தங்களை ஏமாற்றி விடுவார் என்று பயந்த அசுரன் சுவர்பானு தேவர்போல வேடமிட்டு அமிர்தத்தை விஷ்ணுவிடம் பெற்று மடக்கென்று குடித்து விட்டார். இதை கண்ட சூரியனும் சந்திரனும் மோகினியிடம் சொல்ல, கோபம் கொண்ட விஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டி வெட்டி விட்டு ஒப்பந்தத்தை மீறிய அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று கூறி எல்லா அமிர்தத்தையும் விஷ்ணு தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.

அமிர்தம் குடித்த சுவர்பானுவிற்கு உயிர்போகவில்லை. தனது நிலையினை கூறி பிரம்மாவிடம் முறையிட்டார் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறவே விஷ்ணுவை சரணடைந்தார் சுவர்பானு. உடனே பாம்பு உடலை மனித தலையோடு இணைத்தார் விஷ்ணு. பாம்பு தலையை மனித உடலோடு இணைத்தார்-

மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது. தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது.

ஆதவனும் அம்புலியும் ஆசு உற விழுங்கி உமிழ் ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே (aadhavanum ambuliyum maasuRa vizhungi umizh aala maruvum paNi iraNdum azhudhE) : The two venomous serpents (Rahu and Ketu), who distress the sun and the moon by swallowing and spitting them out, wailed, ஆலம் (aalam) : poison; பணி (paNi) : serpent;

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள் ஆம் (aaRumukan aindhu mukan aanai mugan em kadavuL aam ) : that "Shanmukha, five-faced Shiva and elephant-faced Ganesha are my personal gods we worship";

என மொழிந் அகல வென்று விடுமே (ena mozhindh agala vendru vidumE) : When they speak thus, the peacock relents and lets them go away. It is believed that at the time of eclipse, the sun and the moon do Shanmukha japa when the serpents come to swallow them. At the end of the japa, the peacock appears and saves them.

ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள் ஆதி பகவன் துயில் அநந்தன் மணி சேர் ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி ஆக முழுதும் குலைய வந்து அறையுமே (aarkali kadaindh amudhu vaanavar arundha aruL aadhi bagavan thuyil ananthan maNi sEr aayiram irunthalai gaLaay viri paNan kurudhi aaga muzhudhun kulaiya vandh aRaiyumE ) : The thousand hoods of Adisesha studded with precious stones on which reclines Lord Vishnu who helped the celestials drink the nectar by churning the noisy milky ocean were dripping with blood, having been smashed by the Lord's peacock; ஆர்கலி = மிகுந்த சத்தம் எழுப்புகின்ற (உரிச்சொல்); கடல்/மழை (பெயர்ச்சொல்); ஆர் = நிறைந்த; கலி = ஆரவாரமான; அநந்தன் : ஆதிசேஷன்; பணம் : பாம்பின் படம், Cobra's hood;

வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் (vEdha muzhudhum pugal iraaman oru thambi misai veedaNan arunthamaiyan maindhan igalaay) : Vibhishana's dear brother Ravana's son Indrajeet became antagonistic to Lakshmana, the younger brother of Lord Rama who is praised by all the vedas; இராமன் ஒரு தம்பி (iraaman oru thambi) : Rama's brother Lakshmana; வீடணன் அரும் தமையன் மைந்தன் (veedaNan arum thamaiyan maindhan) : son of the brother of Vibhishana, i.e., Ravana's son Indrajeet; இகல் (igal) : enmity;

வீசும் அரவம் சிதறி ஓட வரு வெம் கலுழன் மேல் இடி எனும்படி முழங்கி விழுமே (veesum aravan sidhaRi Oda varu vengkazhulan mEl idi enumpadi muzhangi vizhumE ) : and threw a serpent (nagastra), which was countered by the fierce Garuda; the peacock falls like a thunder on Garuda; கலுழன் (kaluzhan) : Garuda;

Indrajeet aimed nagastra on Lakshmana who, seated on Hanuman's shoulders, was fighting valiantly and destroyed all of Indrajeet's army. The serpents in the astra gripped Lakshmana with their tentacles and he fell unconscious. Seeing this, Garuda rushed to the spot. On seeing Garuda, the serpents (nagastra) got scared and ran away. Lakshmana is revived; but Garuda becomes haughty. The peacock attacks Garuda and destroys his arrogance;

மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க நக மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமெ (mEdhini sumandha peru maasuNa mayanga naga mEvu charaNang kod ulagengum uzhumE) : With the nails on its feet, the peacock scratches/digs the ground so that Adisesha, who bears the earth, swoons; உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய, நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும். மாசுணம் (maasuNam) : the big serpent (Adisesha); மேதினி (methini) : the earth;

வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளர வே அழல் எனும் சினமுடன் படருமே (vEliyena eNdisaiyil vaazhum uragan thaLara vE azhal enum sinamudan padarumE) : The peacock strides with fiery anger, making the serpents who surround the earth on all the eight directions like a fence become terrified; உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி, மூங்கிலில் எழும் காட்டுத் தீ எனும்படியான கோபக் கொதிப்புடன் பவனி வரும். உரகம் (uragam) : serpent; அழல் ( azhal) : fire; வே (vE) : bamboo; அழல் ( azhal) : fire;

போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர் போதனை இரந்து மலர் கொண்டு முறையே பூசனை புரிந்து (pOdhinil irundha kalai maadhinai maNandha uyar bOdhanai irandhu malar koNdu muRaiyE poosanai purindhu) : By performing archana with flowers and entreating Lord Brahma, who is the consort of Saraswathi seated on the lotus flower, போது (pothu) : flower; here, lotus; கலைமாது (kalaimaathu) : Saraswathi; போதன் (pothan) : Brahma; உயர் போதன் (uyar bothan) : Brahma with high intellect; உயர்ந்த புத்தியுள்ள பிரமன்;

கொடியாகி மகிழ் ஒன்றும் துகிர் போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே ( kodiyaagi magizh ondru thugir pOl mudi viLanga varum anjam adumE) : the swan became Brahma's flag and came out displaying proudly the red coral-like crest; the peacock punished this swan; (மயில்) பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் (செருக்கை அடக்க) தண்டிக்கும். அஞ்சம் = அன்னப்பறவை ; துகிர் (thugir) : red coral, pavaLam. The swan became arrogant for having become the vehicle as well as the flag for the Creator. Hence the swan did not show respect to the peacock and the cock (murugan's flag); the peacock punished the swan for this misdemeanor.

Even highly evolved souls like the Gandharvas and the kimpurushas who worship the lord with devotion get attacked occasionally by the intoxicated elephants representing the sensual pleasures. At such times, the peacock attacks the elephants, thus facilitating the spiritual journey of the sincere devotees.

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரண கணங்களொடு வந்து தொழவே (bootharodu gandharuvar naatharodu kimpurudar pooraNa gaNangaLodu vandhu thozhavE) : When the Bhoota Ganas, Gandharvas, Siddha Purushas and the Kimburushas, worshipped with their minions,

போரிடுவ என்று வெகு வாரண கணங்கள் உயிர் போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே (pOriduva vendru vegu vaaraNa gaNangaL uyir pOyinam enumpadi edhirndhu vizhumE) : herd of elephants obstructed them, but the peacock charged on them, scaring them to death;

கோதகலும் ஐந்துமலர் வாளி மதனன் பொருவில் கோல உடலம் கருகி வெந்து விழவே (kOdhagalum aindhu malar vaaLi madhanan poruvil kOla udalam karugi vendhu vizhavE) : The beautiful body of Manmatha who has five blemishless flower darts was burned and charred, கோதகலும்/கோது அகலும்(kodhagalum/kodhu agalum) : blemishless, faultless;

கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள் கூடி மனம் அஞ்சி வளை சென்று புகவே (kObamodu kaNda vizhi naathar aNiyum paNigaL koodi manam anji vaLai sendru pugavE ) : when the Lord stared angrily at Manmatha, and the terrified serpents worn by Shiva hid themselves in their burrows;

கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று பொரு கோழியொடு வென்றி முறையும் பகருமே (koovi iravu antham uNar vaazhi ena nindru poru kOzhiyodu vendri muRai yum pagarumE ) : Along with the rooster who crows to indicate the end of the night (of ignorance) and blesses all the lives, the peacock describes its strategies for victory;

ஆணவ இருள் விலகும் காலம் அண்மையில் உள்ளது. அகக் கண் திறந்து சிவ சூரியனை தரிசிக்க சித்தமாய் இருங்கள். 'வாழும் வழி இது' என்று சேவலான நாதத் தத்துவம் செய்தி உரைத்து ஆசியும் செய்கிறது. அதே சமயத்தில் ஞான சூரியனை இதோ கொணர்கிறேன் நான் என்று விந்துத் தத்துவமான மயில் தன் வெற்றி விருதையும் நினைவுறுத்துகிறது.

நாதம் என்பதான சேவல் ஓங்காரத்தைக் கொக்கரித்து உரைக்கும். மயில் ஓங்காரத்தை தோகை வடிவில் காட்டும். நாதமும் விந்துவும் கூடியது உலக இயக்கம்.

கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன் சரண கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே (kOlam uRu sendhil nagar mEvu kumaran charaNa kOkanadham anbodu vaNangu mayilE) : The peacock worships the lotus feet of Kumaran who resides at the beautiful town of Tiruchendur. கோகனதம் (kokanatham) : lotus;

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே