கடைக்கணியல் வகுப்பு

ராகம் : ஹிந்தோளம் தாளம்: ஆதி திச்ர நடை (12)

அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம்

அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும்
அரசென அறஞ்செ லுத்தி யாளலாம்

அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும்
அருள்பெற நினைந்து சித்தி யாகலாம்

அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க
அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம்

இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த
இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம்

இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும்
ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம்

எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடிஎன முழங்கி வெற்றி பேசலாம்

இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை
யினையினி விடும்பெ ருத்த பாருளீர்

முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப
முகையவிழ் கடம்ப டுத்த தாரினான்

முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள்
முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான்

முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி
முறைநெறி பறந்து விட்ட கோழியான்

முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று
முதுகழுகு பந்தர் இட்ட வேலினான்

மலைமருவு பைம்பு னத்தி வளருமிரு குன்ற மொத்தி
வலிகுடி புகுந்தி ருக்கு மார்பினான்

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை யுண்டு முற்றும்
வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான்

மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று தித்து
மலையிடிய வுந்து ணித்த தோளினான்

மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
இயலையு நினைந்தி ருக்க வாருமே.


Learn The Song

Upload Music - Upload Audio Files - Kadaikkaniyal vaguppu

Paraphrase

அலைகடல் வளைந்து உடுத்த எழுபுவி புரந்திருக்கும் அரசென நிரந்தரிக்க வாழலாம் (alai kadal vaLaindh uduththa ezhu buvi purandhirukkum arasena nirantharikka vaazhalaam): You can live indefinitely as an emperor renowned for being a savior of the seven worlds that is clothed with the water of the wavy seas;

அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும் அரசென அறம் செலுத்தி ஆளலாம் (aLagai arasan thanakkum amarar arasan thanakkum arasena aRan seluththi aaLalaam): You can become the righteous ruler of Kubera, the king of Alagapuri, and Indra, the king of the Devas,

அடைபெறுவது என்று முத்தி அதிமதுர செந்தமிழ்க்கும் அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்(adai peRuva dhendru muththi athi madhura sen thamizhkkum aruL peRa ninaindhu sidhdhi aagalaam): You can attain Moksha or Liberation, considering it to be most desirable objective in life, by seeking His grace for salvation as well as for gaining mastery over the sweet Tamil language. மோட்சமே அடையத்தக்க இலட்சியம் என்று உணர்ந்து, முத்தி முதல்வனின் அருள் பெறுவதே எனக் கருதி மிக இனிய செந்தமிழ் ஞானம் பெற அவனது அருளையே நாடி, எண்ணிய எண்ணம் கை கூடப் பெறலாம்

அதிரவரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்(adhira varum endru mutta alagil vinai saNdai niRka adal edhir purindhu vetri aagalaam): You can fight and win over the enemies who come threateningly at you;

இலகிய நலம் செய் புட்பகமும் உடல் நிறம் வெளுத்த இப அரசு எனும் பொருப்பும் ஏறலாம் (ilagiya nalam sey pushpakamum udal niRam veLuththa iba arasenum poruppum ERalaam): You can ride the Kubera's chariot or pushpaka vimana and the white elephant king Airavata;

இருவரவர் நின்றிடத்தும் எவர் எவர் இருந்திடத்தும் ஒருவன் இவன் என்று உணர்ச்சி கூடலாம் (iruvaravar nindridaththum evar evar irundhi daththum oruvan ivan endr uNarchchi koodalaam): You may get to be known for your knowledge and wisdom whether you are in the company of two or you are in a crowd;

எமபடர் தொடர்ந்து அழைக்கில் அவருடன் எதிர்ந்து உள் உட்க இடி என முழங்கி வெற்றி பேசலாம் (emapadar thodarndhu azhaikkil avarudan edhirndhu uL utka idi ena muzhangi vetri pEsalaam): When the Yama's messengers follow and invite you, you can frighten them by fearlessly asserting your victory in thundrous voice;

இவை ஒழியவும் பலிப்பது அகல விடும் உங்கள் வித்தையினை இனி விடும் பெருத்த பாருளீர் (ivai ozhiyavum palippadhu agala vidum ungaL vidhdhaiyinai ini vidum peruththa paaruLeer): Not only will the Lord's graceful glance get you all of the above, it will also destroy the chain of repeated birth, so give up your worldly arts (which will not accomplish this);

முலை இடை கிடந்து இளைப்ப மொகுமொகு என வண்டு இரைப்ப முகை அவிழ் கடம்பு அடுத்த தாரினான்.(mulaiyidai kidandhu iLaippa mogu mogena vaNdu iraippa mugai avizh kadambu aduththa thaarinaan): He wears a garland of flowers which, when He hugs Valli tightly, get crushed under the pressure of her bosoms, making the bees hovering over the flowers buzz away;

முதலி பெரிய அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள் முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்(mudhali periya ambalaththuL varai achala mandapaththuL munivar thozha andru nirththam aadinaan): He danced in the big dancing hall of the majestic Kanaka Sabhai as Patanjali and Vyagrapadha worshipped Him;

முனைதொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க வெற்றி முறை நெறி பறந்து விட்ட கோழியான்(munai thoRu muzhangi otri mugilena iranga etri muRai neRi paRandhu vitta kOzhiyaan): His flag is of the rooster which raises thundrous war-cries and fights by flying in the air;

முதிய அவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று முது கழுகு பந்தர் இட்ட வேலினான்(mudhiya avuNar andru patta mudhiya kudar nandru sutru mudhu kazhugu pandhar itta vElinaan): He holds the vel in his hands that wears a garland of the intestines of the asuras who fought in the war, to eat which old vultures circle overhead like a fence;

மலை மருவு பைம்புனத்தி வளரும் இரு குன்றம் ஒத்தி வலி குடி புகுந்திருக்கு மார்பினான்(malai maruvu paimpu naththi vaLarum iru kundra moththi valikudi pugun dhirukku maarbinaan): His chest sustains the injury caused by the mountainous breasts of Valli who guards the green millet field at Vallimalai;

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும் வடிவுடன் வளர்ந்திருக்கும் வாழ்வினான்(mazhalaigaL viLambi moyththa aRuvar mulai uNdu mutrum vadivudan vaLarndhirukkum vaazhvinaan): He has a fully developed and beautiful body, having fed on the breast milk of the prattling Karthigai maidens who surround Him;

மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்று உதித்து மலை இடியவும் துணித்த தோளினான்(malai iRai madandhai petra oru madhalai endr udhiththu malai idiyavun thuNiththa thOLinaan): Though born as mountain goddess Parvati's incomparable baby, He has shoulders that have smashed a mountain;

மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே(mayilaiyum avan thirukkai ayilaiyum avan kadaik kaN iyalaiyu ninain dhirukka vaarumE): Please come to meditate on His Peacock Vehicle, the Vel on His auspicious hand and the unique attributes of the glance of His eyes.

No comments:

Post a Comment

எழுபிறவி — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song muttup pattu ( எழுபிறவி ) in English, click the underlined hyperlink. முன...

Popular Posts