நிராமய புராதன பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For the translation of the song nirAmaya in English, click the undelined hyperlink.

நிர் ஆமய (உடல், மன) வியாதிகளே அண்டாத (ஐம்பூதங்களால் உண்டான சரீரங்களுக்கு உரிய - விகாரம் எனப்படும் மாற்றங்களுக்கு அப்பால் பட்ட)
புராதனஎப்பொழுது தோன்றிற்று என்று கூற முடியாத பழமையான
பராபர எல்லாவற்றுக்கும் மேலான
வர அம்ருதஉயர்ந்ததும் அழிவில்லாததும் ஆன
நிராசஆசைகளை வென்ற/ துறந்த
தவ ராசர்கள்தவத்தில் சிறந்தவர்கள்
பரவிய (பராவிய என நீட்டல் விகாரமாக வந்தது)போற்றுகின்ற
நிராயுத புர அரிஆயுதங்கள் இன்றியே (தன் புன் சிரிப்பாலேயே) மூன்று புரங்களாகிய அசுரர்களை எரித்து அழித்தவர் (சிவபெருமான்)
அச்சுதன்தன்னைச்சேர்ந்தவரை (கை)நழுவ விடாத திருமால்
வேதாபிரம்மா
சுர ஆலய தேவர் உலகம்
தரா தல மண் உலகம்
சர அசர பிராணிகள் அசைவனவும் அசையாதவையாகவும் உள்ள உயிரினங்களின் (யாவையும்)
சொரூபம் இவர் ஆதியையாவற்றுள்ளும் உறைகின்ற ஆதிமுதல் பொருளை (பரம் பொருளை)
குறியாமே அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் (அடைய முயலாமல்)
துரால் புகழ் பயனற்ற ( முகஸ்துதி) பாராட்டு செய்கின்ற
பர ஆதீன தன் வசம் இல்லாமல், பிறர் (ஆசை முதலானவற்றுக்கு அடிமைப்பட்டு) வசப்பட்டவர்கள்
கரா உள முதலையைப்போன்ற உள்ளம் உடைய (முதலை கண்ணில் எப்போதும் தண்ணீர் வரும், அது துக்கத்துக்கு அடையாளம் அல்ல. எனவே உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்கள் முதலைக்கு ஒப்பாகச்சொல்லப்படுகின்றனர்)
பராமுக வெளியில் அன்பு அனுதாபம் பாராட்டுவதும் மனதில் அலட்சியமுமாக இருப்பவர்கள்
துரோகரைஇப்படிப்பட்ட துரோகிகளை (துன்பம் தருகிறவர்களை)
தரை ஆசை உற்றுமண் (முதலிய) ஆசைக்கு அடிமைப்பட்டு
அடைவேனோஅடைக்கலம் என்று சேர்வேனோ (மாட்டேன், அப்படி விட்டு விட வேண்டாம் என்பது குறிப்பு)
இராகவ ரகு வம்சத் தோன்றலான
இராமன் முன்ராமபிரான் முன்பு (த்ரேதா யுகத்தில்)
இரா வ(ண்)ணஇரவு போல் கருத்த நிறம் உடைய
இராவணஅழுகுரல் உடைய ( அவன் கயிலாய மலையைத்தூக்க முயற்சிக்க சிவபிரான் தன் இடக்கால் கட்டை விரலை அழுத்தி அதனால் அவன் மலையின்கீழ் நசுக்குண்டு கோரமாக அலறினான்; அதனால் அழுகுரல் உடையவன் எனும் பொருளில் (இ)ராவணன் என அழைக்கப்பட்டான்.
இராவண இராஜன்ராவண (இலங்கை) அரசன்
உட்கி உள்ளம் மிக நொந்து (ஒரு மானுனிடம் தோற்றோமே என்று அவமானமடைந்து)
உடன் மாய விரைவிலேயே மடிய
வென்றவெற்றி அடைந்த
இராகன் மலர் ஆள்(தன் மீது) மிகுந்த பற்றை/ அன்பை உடைய திருமாலின் (கண் ஆகிய) மலரை ஏற்றுக்கொண்டவர் (திரு வீழி மிழலை க்ஷேத்திரத்தில் தன் சங்கல்பப்படி தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் சஹஸ்ர சிவ நாம அர்ச்சனை செய்து வரும் காலத்தில் சிவபெருமான் ஒரு மலரை மறைத்து விடத் திருமால் தாமரை போன்ற தன் கண்களில் ஒன்றைப்பறித்து இட்டார். பரீட்சையில் தேறினார் என்று சிவபெருமான் உவந்து அவர் வேண்டிய சக்ராயுதம் அளித்தார் என்பது அத்தல வரலாறு.)
நிஜ புராணர் என்கிற தன் வரலாற்றை உடைய பரம சிவனாரின் (நிஜ என்ற சொல் தமிழில் 'உண்மையான' வழங்கப்படுகிறது: உண்மையில் அதற்குத் தனிப்பட்ட, தனக்கே உரிய என்பதே வடமொழிப்ரயோகம். ஹிந்தி, மராட்டி போன்றவற்றில் அந்த வடமொழிப் பொருளிலேயே வழங்கப்படுகிறது. நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்பத்ஸித கச்சபீ, நிஜ அருண ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானசா என்கிற லலிதா ஸஹஸ்ர நாமஙகள் நோக்குக.)
குமராபுதல்வனே
கலை ராஜ சொல்கலைகளுக்கு/ கல்விக்கு அரசர் என்று பெயர்பெற்ற
அ வாரணர்க்குஅந்த ஆனைமுக விநாயகருக்கு
இளையோனேதம்பியே
விராகபற்று அற்றவனே
அசுர அதிபஅசுரர் தலைவன் சூரபத்மன்
பொராது போர்புரியாது ஒளிந்திருந்த போதும் (போரின் நடுவில் கடலுக்குள் மா மரமாகி மறைந்து நிற்க)
தவிராது அடு அவன் போர் புரிவதைத் தவிர்த்து விடாமல் யுத்தம் புரிந்த
விராயண பராயண வீரச்செயலில் முனைப்பு உடைய
செரு ஊரா திருப்போருரில் குடிகொண்டு இருக்கும் முருகனே
விராவிய கலந்து, ஒன்றடுத்து ஒன்றாக
குரா அகில் அகிலும் குரா மரங்களும்
பராரை பருத்த அடிமரத்தோடு
முதிரா வளர் முற்றி (பெரிதாக) வளர்ந்து இருக்கும்
விராலி மலைவிராலி மலைத் தலத்தில்
ராஜத கம்பீரமாய் (மிகுந்த செல்வாக்கோடு) வீற்றிருக்கும்
பெருமாளே முருகப் பெருமானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே