பொற்பதத்தினை — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link poRpathaththinai

பொன் பதத்தினைஉன்னுடைய மேலான திருப்பாதங்களை
துதித்துபோற்றிப் புகழ்ந்து
நல் பதத்தில் உற்ற பத்தர்அந்த நலம்தரும் பாதங்களை (அந்த உயர்ந்த பதவி/ நிலையை) அடைந்த பக்தர்களுடைய
பொற்புசிறப்புகளை(மேலான பண்புகளை)
உரைத்துஎடுத்துச் சொல்லி
நெக்கு உருக்க தானும் உருகிக் கேட்பவர்களையும் உருகச்செய்ய
அறியாதேதெரிந்து கொள்ளாமல்
புத்தகப்பிதற்றை விட்டு புத்தகங்களைமட்டும் படித்து வறட்டு வேதாந்தத்தால் அல்லாமல்,
வித்தகத்து உனைத் துதிக்கநுண் அறிவால்/ விவேகத்தால் உன்னை ஆராதிக்க
புத்தியில் கலக்கம் அற்று நினையாதே அறிவில் எந்தக் குழப்பமும் இல்லாமல் உன்னை நினையாமலும், (குறியாகக் கொள்ளாமல்)
முன் படத்தலத்து ஏற்கெனவே இப்பூமியில் வந்து பிறந்து
பின் படைத்த பின்னும் பிறப்பதற்கான
கிர்த்யம்(சம்ஸ்க்ருத க்ருத்யம்)(நல்ல, தீய) வினைகள் (செய்து)
முற்றி (அவை) பழுத்து (அவற்றின் பயனாக)
முன்கடை மீண்டும், மீண்டும்
தவித்து (பிறந்து) துன்பப்பட்டு
நித்தம் உழல்வேனைநிரந்தரமாக சுற்றிக்கொண்டிருக்கும் (பிறப்பு இறப்புச் சுழியில்) என்னை
முட்ட இக்கடைப்பிறப்பின்முழுதுமாக இந்தக்கீழ்மையான பிறவி(இறப்பு)களின்
உள் கிடப்பதை தவிர்த்து சுழற்சியில் உள் அகப்படுவதை இல்லாமல் செய்து
முக்தி சற்று எனக்கு அளிப்பது வீடு பேற்றை கொஞ்சம் (முருகனுடைய சிறிய கருணைப்பார்வை போதும் நம்மைக்கடைத்தேற்ற) எனக்கும் கூட அருளும்
ஒரு நாளே ஓர் நாள் வருமோ
வெற்பு அளித்த(இமய)மலை பெற்ற
தன்பரைக்கு எல்லாருக்கும் மேலான பார்வதி தேவிக்கு
இடப்புறத்தை உற்று அளித்த தன் இடப்பாகத்தை அன்பு கொண்டு கொடுத்த
வித்தகத்தர் மிகுந்த அறிவும் திறமையும் உடையவர் (வித்தகம்)
பெற்ற உலகுக்கு அளித்த
கொற்ற மயில் வீரா வெற்றியுடைய மயில் வாகனம் உடைய வீரனே
வித்தை தத்வசகல வித்தைகளுக்கும் தத்துவங்களுக்கும் இடமான (தன்னுள் கொண்ட)
முத்தமிழ்இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவு உடைய தமிழின்
சொல் அத்த சத்தம் சொல்(பதம்), பொருள், சந்தம் என்பவற்றை விளக்கும் இலக்கணத்தை
வித்தரிக்கும்விஸ்தாரமாக விளக்கிச் சொல்லும் (அகஸ்த்யருக்கும், நக்கீரருக்கும் உபதேசித்தது குறிக்கப்படுகிறது)
மெய்த்திருத்தணிப் பொருப்பில்(அல்லது அந்தத்தமிழ் வழங்கும்) நிலையான திருத்தணி மலையில்
உறைவோனே வசிக்கின்ற இறைவனே
கற்பக கற்புக்கு இடமான மனதை உடைய
புனக்குறத்திதினைப்புனத்தில் இருந்த குறமகள் வள்ளியின்
கச்சு அடர்த்த இறுக்கமான மார்க்கச்சம் அணிந்த
சித்ரம் உற்றஅழகான
கற்புர திருத்தனத்தில்கற்பூரம் மணக்கின்ற திருமார்பை
அணைவோனே தழுவிக் கொள்பவனே
கைத்துபகை கொண்டு
அரக்கர் கொத்து அசுரர்களின் கூட்டம்
சினத்து (சினந்து) கோபத்துடன்
வச்ரனுக்குவஜ்ராயுதத்தை உடைய இந்திரனுக்கு
அமைத்த இட்ட
கைத்தொழு தறித்து விட்டகை விலங்குகளை நீக்கி விட்ட
பெருமாளே பெரியவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே