140. பொற்பதத்தினை


ராகம் : த்விஜாவந்தி/ ரஞ்சனி தாளம்: ஆதி (திச்ர நடை)
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்கஅறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து நைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று நினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்தமுழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்றைமயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருந்த ணிப்பொ ருப்பிலுறைவோனே
கற்ப கப்பு னக்கு றத்தி கச்சு டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி லணைவோனே
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே.

Learn The Song

The Song in the Raaga Dwijavanthi

Raga Dwijavanti (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 P D2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 M1 R2 G2 R2 S

The Song in the Raga Ranjani

Know The Raga Ranjani (Janyam of 59th mela Dharmavati)

Arohanam: S R2 G2 M2 D2 S    Avarohanam: S N3 D2 M2 G2 S R2 G2 S

Paraphrase

பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் (poR padhaththinai thudhiththu naRpadhaththil utra bakthar) : Many devotees worshipped Your golden/beautiful feet and attained lofty position. அழகிய (உனது) பாதங்களைத் துதித்து மேலான பதவியை அடைந்த பக்தர்களுடைய

பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே (poRpu raiththu nekku rukka aRiyAdhE) : I am incapable of praising their greatness with a melting/tender heart; பொற்பு (poRpu) : greatness, beauty; சிறப்பினைை எடுத்துரைத்து (உள்ளம்) நெகிழ்ந்து உருக அறியாமலும்

புத்தக பிதற்றை விட்டு வித்தகத்து உனை துதிக்க (puththagap pidhatrai vittu viththa gatthunaith thudhikka) : instead of prattling from books, I should worship You with true knowledge. வித்தகம் = ஞானம்;

புத்தியில் கலக்கம் அற்று நினையாதே (budhdhiyiR kalakkam atru ninaiyAdhE ) : that comes from thinking with a clear head;

முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி (muRpada thalaththu udhiththu pin padaiththa akirthyam mutri: ) : I came in a hurry to be born in this world, and accumulated the results of sinful deeds in my later years, இந்தப் பூமியில் முற்பட்டவனாக பிறந்து, பின்னர் தகாத அக்ரமமான செயல்கள் பல செய்து, முற்படத் தலத்து உதித்து = வினையின் காரணத்தால் முற்பட்டு இப்பூமியில் ஆன்மா வந்து பிறக்கின்றது. அகிர்த்தியம்/அக்ருத்யம் = தகாத செயல்; தலம் = பூமி;

முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை (muRka daith thaviththu niththa muzhalvEnai) : and I roam around hither and thither desperately every day. பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை,

முட்ட இக்கடைப் பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே (mutta ikkadai piRappinuL kidappadhai thavirththu muththi satru enakku aLippadhu oru nALE) : Would You one day grant salvation to me, who is totally submerged/mired in this despicable birth/life?

வெற்பு அளித்த தற் பரைக்கு இட புறத்தை உற்று அளித்த (veRpa Liththa thaRpa raikki dappu Raththai utraLiththa) : The Lord who willingly gave the left half of His body to Devi Parvathi, the daughter of Mount Himavan. இமயமலை போற்றி வளர்த்த உமாதேவிக்கு, இடப்பாகத்தை அன்பு வைத்து அளித்த,

தற்பரம் என்றால் மேம்பட்டது, சிவத்தை குறிப்பது. தற்பரை என்றால் சிவசத்தி. தானாக இருப்பது ஒளியாகிய பரம். தான் எனும் உணர்வைத் தரும் அல்லது தாங்கி வரும் இருளாகிய மாயா சக்தி தற்பரை. பரமான ஒளியில், மாயையாகிய பரையானது தான் என்கிற உணர்வு தோற்றுவித்து உடல் உணர்வு, உய்வு, ஞானம், பேதம் ஆகிய உணர்வுகளை நடத்திக் காட்டும்.

வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா (viththa gaththar petra kotra mayil veerA) : He is the Chief of all Knowledge and Learning; and You are that SivA's Son, Oh victorious stalwart mounting the Peacock! ஞான முதல்வராகிய சிவபெருமான் பெற்றருளிய வெற்றியுடைய மயில் வீரரே!

வித்தை தத்வம் முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே (viththai thathva muththamizh sol aththa saththam viththarikku meyth thiruththaNip poruppil uRaivOnE ) : You reside in the hills of ThiruththaNigai that ring with the essence and words of wisdom and truth expressed in Tamil language in all the three divisions of literature, music and drama, வித்தையும், உண்மையும், முத்தமிழும், சொல்லோசையும், பொருளொசையும் நீடித்து, என்றுமுள்ள திருத்தணியம்பதியில் எழுந்தருளி இருப்பவரே!
திருத்தணியம்பதியில், அநேக வித்தைகளும், வித்தைகளின் உண்மைகளும், முத்தமிழ் முழக்கங்களும், சொல்லோசையும், பொருளோசையும், சதா இடையறாது நீடித்திருக்கின்றன. அத்தம் சத்தம் = அர்த்தம் சப்தம்

கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் உற்ற (kaRpagap punak kuRaththi kachcha darththa chithramutra) : At the millet-field (in VaLLimalai) abounding with wish-yielding KaRpaga-like trees is VaLLi, the damsel of the KuRavAs, wearing tight and beautiful bodice,

கற்புர திரு தனத்தில் அணைவோனே (kaRpurath thiruth thanaththil aNaivOnE ) : over her bosoms smeared with fragrant camphor, and you hug them;

கைத்து அரக்கர் கொத்து உக சினத்து (kaiththarakkar koththu gachchinaththu) : Your rage drove away the hostile group of demons, பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, உகுதல் = உதிர்தல், சிந்துதல், சிதறுதல், நிலைகுலைதல்;

வஜ்ரனுக்கு அமைத்த கைத்தொழுத் தறித்து விட்ட பெருமாளே.(vajranuk amaiththa kaiththozhuth thaRiththu vitta perumALE.) : and You broke into pieces the shackles that were laid (by SUran) on the hands of IndrA, holding the weapon VajrA, Oh Great One! வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே. )

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே