125. ஏது புத்தி
Learn The Song
Learn Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)
Arohanam: S R1 G3 M2 D2 N3 S Avarohanam: S N3 D2 M2 G3 R1 SParaphrase
ஏது புத்தி ஐயா எனக்கு (Edhu budhdhi aiyA enakku) : Where is my intelligence, oh LORD!
இனி யாரை நத்திடுவேன் ( ini yArai naththiduvEn) : Who shall I seek lovingly as a refuge/support, henceforth? இனி யாரைப் பற்றுக் கோடாகக் கொள்வேன், உன்னை அன்றி யாரை அண்டி உய்வு பெறுவேன்?
அவத்தினிலே இறத்தல் கொலோ (avaththinilE yiRaththal kolO) : Should I die after a futile life? பிறவிப் பயனைப் பெறாமல் வீணே இறந்துவிடுவது தகுமா?
எனக்குனி தந்தை தாய் என்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ (enakku ni thandhai thAy endrE irukkavum nAnum ippadiyE thaviththidavO) : Despite Your being my father and mother, must I remain tormented like this?
எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள் — கந்தர்அநுபூதி
சகத்தவர் ஏசலில் படவோ (jagaththavar EsaliR padavO) : Should I become the object of ridicule in this world?
நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா (nagaiththavar kaNkaL kANa pAdham vaiththidaiyA) : Place Thy feet on me right before the eyes of those who snicker at me.
தெரித்து எனை தாளில் வைக்க நியே மறுத்திடில் பார் நகைக்குமையா ( theriththenai thALil vaikka niyE maRuththidil pAr nagaikkum aiyA) : Despite knowing my condition, if You refuse to place me at Thy feet, the entire world will laugh at us, Oh Lord! தெரித்து/தெரிந்து ( theriththu/therinthu ) : knowing, பார் (paar) : world;
தகப்பன் முன் மைந்தன் ஓடி பால்மொழிக் குரல் ஓலம் இட்டிடில் ( thagappan mun maindhanOdi pAl mozhikural Ola mittidil) : When the child runs screaming to his father with the aroma of milk still fresh in his mouth, பால் மொழி குரல் = பால் மணம் மாறாத இனிய குரல்; பால் வேண்டும் குறிப்பு மொழிக் குரல்;
யார் எடுப்பதெனா வெறுத்தழ பார் விடுப்பர்களோ (yAr eduppadhe nA veRuththazha pAr viduppargaLO) : will the father think disgustedly as to who would pick him up and leave the crying child on the floor?
எனக்கிது சிந்தியாதோ (enakkidhu chindhiyAdhO) : Why doesn't this thought occur to me?
ஓதம் உற்றெழு பால் கொதித்தது போல எட்டிகை நீசமுட்டரை (Odham utrezhu pAl kodhiththadhu pOla ettigai neesa muttarai ) : The wicked and foolish demons came surging from all the eight directions like an milky ocean that simmered like the boiling milk, ஓதம் (otham) : sea; எட்டிகை/எட்டு திசை ( ettu thigai) : eight directions; முட்டர் (muttar ) : foolish;
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே (Oda vettiya bAnu saththikai engaLkOvE ) : Oh our Lord! You slaughtered and drove them away with the powerful Spear (SakthivEl), bright like the Sun, held in Your hand, பாநு (bAnu) : sun; பாநு சத்தி கை (bAnu saththi kai) : holding in the hand the vel(shakthi vel), which is radiant as the sun;
உலா உதயபானு சதகோடி உருவான
ஒளியாகும் அயில்வேல்அங் கையிலோனே —(அவாமருவி) திருப்புகழ்
ஓத மொய்ச்சடையாட உற்றமர் மான் மழுக் கரம் ஆட (Odha moycchadai Ada utramar mAn mazhu karam Ada) : The tresses holding the River Ganga and the hands holding snugly the deer and the pick-axe danced; ஓத மொய்ச் சடை (Odha moycchadai ) : The tresses with the sea (River Ganges); மழு (mazhu) : pick-axe;
பொற் கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே (poR kazhal Osai petridavE nadiththavar thandhavAzhvE) : and the anklets on His holy feet made lilting sounds while He danced; That Lord Shiva gave You to us!
மா தினைப்புன மீதிருக்கு மைவாள் விழிக்குற மாதினை (mA thinaipuna meedhirukkum mai vALvizhi kuRa mAdhinai) : VaLLi, the damsel of the KuRavAs with dark (or kohl-smeared) and sparkling eyes who lives in the big millet field; வாள் விழி ( vaaL vizhi) : bright eyes;
திருமார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே (thiru mArba Naiththa mayUra aRbudha kandhavELE) : You hugged that VaLLi with Your broad chest, Oh rider on the Peacock! Lord KandhA!
மாரன் வெற்றிகொள் பூமுடிக் குழலார் வியப்புற (mAran vetrikoL pU mudi kuzhalAr viyappuRa) : The women who adorn their hair with lovely flowers for the success of the mission of Manmathan (God of Love) are amazed; மலரை முடித்துள்ள மாதர்கள் (தமது அழகால் மயங்காததைக் கண்டு) வியப்புறுமாறு மன்மதனை வென்ற
நீடு மெய்த்தவர் வாழ்திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.(needu meyththavar vAzh thiruththaNi mA malaipadhi thambirAnE.) : at the greatness of the sages who have performed long and true penance; those sages live in this distinguished hill station at ThiruththaNigai, which is Your abode, Oh Great One! நீண்ட தவஞ் செய்யும் மாதவர்கள் வாழும் திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள தலைவரே!
Comments
Post a Comment