123. எனக்கென யாவும்


ராகம்: மாயாமாளவ கௌளைதாளம்: ஆதி
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென்பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் குளிமேவி்
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந்தொழுவேனோ்
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன்றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும்முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும்்பெருமாளே.

Learn The Song




Paraphrase

எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம் தனில் ஓயா ( enakkena yAvum padaiththida nALum iLaippodu kAlam thanil OyA) : In order to procure for my every need, I toil relentlessly for days on;

எடுத்திடு காயம் தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற ( eduththidu kAyam thanaikkodu mAyum ilacchai ilAthen bavamARa ) : I enter many bodies (several births) and then die; In order that the sin of such shameless existence ends; இலச்சை ( ilacchai) : shame;

உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்குளி மேவி (unai pala nALum thiruppugazAlum uraiththiduvAr tham kuLi mEvi) : I should go to the dwellings of the devotees who have been singing or studying Tiruppugazh for a long time, தங்கு உளி மேவி = தங்குகின்ற இடத்துக்குச் சென்று,

உணர்த்திய போதம் தனை பிரியாது (uNarththiya pOthth thanai piriyAthu : without deviating from their teachings, (அந்த அடியார்கள்) உணர்த்திய ஞான வாசகங்களைக் கடைப்பிடித்து அதினின்றும் விலகாமல்,

ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ (oN polacchara NAnun thozhuvEnO?) : Will I ever prostrate and worship Your bright holy feet? ஒளி வீசும் அழகிய திருவடியை அடியேன் தொழும் பாக்கியம் உண்டாகுமோ? ஒண் பொல (oN bola ) : radiating light;

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் (vinai thiRamOdu anRu ethirththidum veeran vizhakkodu vEL konRavan neeyE) : Once, the brave Manmatha, who was skillful in archery, stood in combat and SivA brought him down; வினை திறம் (vinai thiRam) : competency in action; தொழிலில் திறமையுடன், வேள் (vEL ) : manmatha, the god of love;

நீயே விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்பு உற வேதம் புகல்வோனே (neeyE viLappu ena mEl enRu idakku ayanArum viruppuRa vEtham pugalvOnE) : That Shiva told You to explain the meaning of Pranava mantra, you expounded the mantra, which even Lord Brahma listened to with great interest; (அந்த சிவன்,) "முருகா! நீ பிரனவப் பொருளைக் கூறுவாய்” என்று கேட்க, தான் மேலானவன் என்று முரண்பட்ட பிரமதேவனும் விரும்பி மகிழ, வேதப்பொருளை உபதேசித்தவரே!

சினத்தொடு சூரன் தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே ( sinaththodu sUran thanaikkodu vElin siraththinai mARum murugOnE ) : You beheaded the demon Suran by throwing the spear angrily at him; கொடுவேல் = உக்கிர வேல்;

தினை புன மேவும் குற கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே. (thinaippuna mEvum kuRakkodiyOdum thiruththaNi mEvum perumALE) : You are seated at ThiruththaNigai, Oh Great One, with Valli, the Kurava lass who guards the millet fields.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே