132. சினத்திலத்தினை


ராகம் : சாமாஆதி 2 களை (எடுப்பு 3/4 இடம்)
சினத்தி லத்தினை சிறுமண லளவுடர்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபலவதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வதளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகரமொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகுதகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசைபொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள்பெருமாளே.

Learn The Song



Raga Sama (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S D2 P M1 G3 R2 S


Paraphrase

சி(ன்)ன திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை (si(n)na thilam thinai siru maNaL aLavu udal seRiththadhu eththana) : I have assumed countless forms with sizes equal to those of little til seed (sesame), thinai seed and minuscule sand! திலம் (thilam) : gingelly/sesame seed;

சிலை கடலினில் உயிர் செனித்தது எத்தனை (silai kadalinil uyir jeniththadhu eththanai) : In how many countless forms have I been born in the roaring ocean full of waves ; சிலை கடல் (silai kadal) : roaring sea;

திரள் கயல் என பல அது போதா(து) (thiraL kayal ena pala adhu pOdhA(thu)) : from the giant shark to little fish? Not content with that,

செ(ன்)மித்தது எத்தனை மலை சுனை (semiththadhu eththanai malai sunai) : how many births have I taken in hills and ponds?

உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு (ulagidai sezhiththa dheththanai siRu thana mayalkodu) : In how many physical forms did I exist in this world and in how many did I lust for the worthless bosoms of women?

செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ (jedaththil eththanai naman uyir paRi koLvadhu aLavEdhO) : Is there a count for the number of lives that were snatched away in several births by Yaman (God of Death)?

The reason for these countless births are the countless thoughts arising in the mind – the endless deceptions and countless killings that prompt Brahma to write non-stop the fates இத்துணை கோடி பிறவிகள் வந்து கொண்டே இருப்பதற்குக் காரணம்) மனத்தில் எண்ணுகின்ற எண்ணங்கள் எண்ணில்லாதன; வஞ்சங்களும் எண்ணில்லாதன; பிறர் குடிகளைக் கெடுத்தனவும் எண்ணில்லாதன; விலங்குகளைப் போல் மன்னுயிரைக் கொன்றதும் தின்றதும் எண்ணில்லாதன; பிரமதேவன் கையொழியாமல் விதி விலக்குகளை எழுதியதும் எண்ணில்லாதன; ஆதலால் கொசுவுக்கு நிகரானவனும் பிடிவாத முடையவனும், அறிவற்ற குலத்தினனும், அறிவழிந்த வஞ்சகனுமாகிய அடியேன் தேவரீருடைய திருவடிக் கமலத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுமாறு இனிமேலாவது திருவருள் புரிவீர்.

மனத்தில் எத்தனை நினை கவடுகள் (manaththil eththanai ninai kavadugaL) :How many treacherous thoughts did I nurture in my heart? கவடு (kavadu) : treachery;

குடி கெடுத்தது எத்தனை (kudi keduththadhu eththanai) : How many families did I ruin?

மிருகமது என உயிர் வதைத்தது எத்தனை அளவு இலை (mirugamadhu ena uyir vadhaiththadhu eththanai aLavilai) : How many living beings did I torture in a beastly way? There is no count!

விதி கரம் ஒழியாமல் வகுத்தது எத்தனை (vidhikaram ozhiyAmal vaguththa dheththanai) : How many incidents have occurred which did not depart from the path of destiny?

மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை(masaganai murudanai madai kulaththanai madhi azhi viraganai) : I am like a mere mosquito, a foolish person, one in the clan of dullards and who is full of lust and devoid of wisdom; மசகன் : mosquito;

மலர் பதத்தினில் உருகவும் இனி அருள் புரிவாயே (malar padhaththinil urugavum ini aruL purivAyE) : kindly bless me so that my heart may melt at Your lotus feet henceforth.

தனத்த.. டுடுடுடு (thanaththa ... dudududu) : To the aforesaid meter,

தமித்த மத்தள தமருகம் விருது ஒலி கடல்போல (thamiththa maththaLa dhamaruga virudholi kadal pOla) : the sounds of victory from maththaLam and dhamarukam resounding like the roaring sea.

சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அது இமிழ்த்திட ( sinaththu amarkkaLa seruthigazh kurudhi adhimizhththida) : On the battle field, blood was shed profusely in the furious battle, அமர்/செரு (amar/samar) : war; களம் (kaLam) : field, battle-field;

கரி அசுரர்கள் பரி சிலை தெறித்திட (kari asurargaL pari silai theRiththida) : Elephants, demons, horses and bows were torn into shreds; கரி(kari) : elephant; பரி (pari) : horse;

கழு நரி தி(ன்)ன நிணம் மிசை பொரும் வேலா (kazhu nari thina niNamisai porum vElA) : while vultures and wolves fed on the corpses, You stood on a mountain of human flesh and fought with SUran, Oh VElA! நிணம் ( niNam ) : flesh;

செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் (sezhikkum uththama sivasaraNargaL) : The virtuous devotees of Shiva

தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி (thavamuni gaNaththavar madhumalar kodu paNi) : and the galaxy of sacred sages worship You with honey-filled flowers at

திருத்தணி பதி மருவிய குற மகள் பெருமாளே.(thiruththaNip padhi maruviya kuRamagaL perumALE.) : ThiruththaNigai, where You reside along with Your consort, VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே