137. நினைத்ததெத்தனையில்


ராகம் : சிந்துபைரவிதாளம்: கண்டஜம்பை (8)
நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்தி தனைப் பிரியாமற்
கனத்த தத்து வமுற் றழியாமற்
கதித்த நித்தி யசித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக் கெளியோனே
மதித்த முத்த மிழிற் பெரியோனே
செனித்த புத்தி ரரிற் சிறியோனே
திருத்த ணிப்ப தியிற்பெருமாளே.

Learn The Song



Paraphrase

நினைத்தது எத்தனையில் தவறாமல் (ninaiththadhu eththanaiyil thavaRAmal) : I should achieve all my ambitions without failing even an iota; நினைத்த கருமங்கள் எல்லாம் நினைத்த படியே கை கூடவும், எத்தனையில் = எல்லா வகையிலும்;

நிலைத்த புத்தி தனை பிரியாமல் (nilaiththa budhdhi thanaip piriyAmal ) : I should always have a steady mind, fixed unwaveringly on Eternal knowledge, நிலைத்த அறிவு என்னை விட்டு எப்போதும் அகலாமல் இருக்கவும்,

கனத்த தத்துவம் உற்று அழியாமல் (ganaththa thaththuvamutr azhiyAmal) : I should not be bogged down by the weight of the 96 tattvas but transcend it for attaining eternity; பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து, அதனாலே அழியாப்பதம் அடைந்தும்,
Tattvas are the principles of nature which are behind phenomenal appearance. Tattvas are functions of Consciousness. God's Infinite, Independent and Free Consciousness has to be obscured by layers of tattvas to provide the substance from which the Material Universe is created. Being steeped in tattvas means leading ordinary day-to-day life. Only when one transcends it, can he/she realize oneness with the Infinite Bliss.

கதித்த நித்திய சித்த(ம்) அருள்வாயே (gadhiththa niththiya chith aruLvAyE) : For this, kindly grant me the exalted and immortal Eternal Knowledge. கதித்த = வெளிப்படுகின்ற; நித்திய சித்து = அழியாத சித்து;
மனதின் ஆற்றலைக் கொண்டு உடலை செயல்படுபவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சித்தத்தின் ஆற்றலைக் கொண்டு ஆன்மாவின் இயற்கை ஆற்றலோடு கலந்து புலன்கள் வழியில்லாமல் செயல்படக்கூடியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள். சித்தமும் மனமும் ஆன்மாவின் ஆற்றலின் மூலமே செயல்படுகிறது. ஆன்ம ஆற்றலோடு இணைந்து வாழக் கூடியவர்கள் சித்தர்கள். இவர்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றலை, உடலில் இயற்கையாக உள்ள குண்டலினி சக்தி எனும் ஆதாரசக்தி ஆற்றலுடன் தனதுடைய பிரணாயாம பயிற்சியினால் மேலும் மேலும் கூட்டி, அந்த சக்தியை விரிவடையச் செய்து, ஆறு ஆதாரங்களிலும் நிரப்பி முழு ஆற்றலோடு ஞானத்தை அடைகிறார்கள். இப்படி மனதை ஒருமுகப்படுத்தி, பர ஆற்றலோடு ஒன்றோடு கலந்து, உடலில் ஆதார ஆற்றலையும் பர வெளி ஆற்றலையும் ஒன்றாக நிறுத்தி வாழ்பவனே ஜீவ முக்தன் அல்லது நித்திய சித்து அடைந்தவன் ஆவான்.

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே (maniththa baththar thamak keLiyOnE) : Among the human beings, You are easily accessible to Your devotees. மனித்தர் (maniththa) : மனிதர்களுக்குள்:

மதித்த முத்தமிழில் பெரியோனே ( madhiththa muththamizhil periyOnE ) : You are a wizard in all three regarded divisions (Iyal, Isai, Nadagam) of Tamil literature!

செனித்த புத்திரரில் சிறியோனே (jeniththa puththiraril siRiyOnE) : of all the Sons born to Lord SivA, You are the youngest! சிவ குமாரர்கள் பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆக ஐவரில் இளையவர் குமாரக் கடவுள். பைரவரை விடுத்து நான்கு புத்திரர்கள் என்றும் கூறுவதுண்டு.

திருத்தணி பதியில் பெருமாளே.(thiruththaNip padhiyil perumALE.) : You have Your abode at ThiruththaNigai, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே