134. துப்பாரப்பார்
Learn The Song
Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S G3 M1 P N3 D2 N3 S Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 SParaphrase
துப் பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி (thuppu pAr appAdal thee moy kAl chol pA veLi) : The fertile Earth, water, flickering Fire, breezy Wind, and the popular wide Sky (the five Elements, in all); து (thu) : food; து = உண், சாப்பிடு; துப்பார்க்கு என்றால் உண்பவர்க்கு என்று பொருள். துப்பார் = உணவைத் தரும் மண்; "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" (திருக்குறள்) — “உண்போர்க்கு உண்ணுமாறு உணவாக்கித் தந்து உண்போர்க்கு உண்ணத் தகுந்த உணவும் ஆகும் மழை” என்று பொருள். பார் = பூமி ; அப்பு = நீர்; ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு; மொய் = நெருங்கி வீசும்; கால் = காற்று; சொல் = புகழப்படுகின்ற; பா = அகன்ற; வெளி = ஆகாயம்;
முக்குண மோகம் (muk guNa mOgam) : the three gunas(sathvic, rAjasic, and thAmasic) and the three desires (for the land, woman and gold)
துற்று ஆய (thutru Aya) : have all been inextricably combined (to form this body). துற்று ஆய(thutru aaya ) : densely woven;
பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் (peeRal thOlittE sutrA madhanap piNi thOyum) : The tattered skin (with nine orifices) is wrapped around this body and afflicted with diseases caused by sexual passion; பீறல் (peeRal) : tattered, full of holes, refers to the nine orifices in the body: two each in the eyes, ears and nose, mouth, passages for passing urine and feces, மதன பிணி(madana piNi) : diseases caused by Love God Manmathan;
இப் பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே (ippAva kAyaththu AsaippAdu etrE ulagil piRavAdhE) : I do not wish to place any desire on this body which is the cause for births;
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தர வேணும் (eththAr viththAraththE kittA ettA aruLaith thara vENum) : Give me that Grace that is outside the reach of people with mere intellect/education who fail to worship You; எத்தார் (eththaar) : those who do not worship/praise; வித்தார் (viththaar) : exquisitely composed literary composition, விரிவாக அழகுத்திறனுடனும் சாமர்த்தியத்துடனும் பாடும் நூல்
தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே (thappAmaR pAdi sEvippAr thaththAm vinaiyai kaLaivOnE) : You remove the consequences of all karmas of those who worship you without fail,
தற்கு ஆழி சூர் செற்றாய் (thaRkA zhichUr setrAy) : You destroyed the arrogance and the sovereign rule of SUran, the demon; தற்கு/தருக்கு ( tharku) : arrogance; ஆழி (aazhi) : signet ring; Surapadman's signet ring reigned in all the 1008 andams (celestial shells in the cosmos);
மெய் போதத்தாய் தணிகை தனி வேலா (maiy bOdhaththAy thaNigai thanivElA) : You are the dispenser of True Knowledge and You reside with your unique speat at Thiruththanigai; மெய் போதம் () : true knowledge/wisdom;
அப் பாகை பாலை போல் சொல் (ap pAgai pAlai pOl sol) : with a voice as sweet as sugar and milk,
காவல் பாவை தனத்து அணைவோனே (kAvaR pAvai thanathu aNaivOnE) : and You went to embrace her!is Valli, the damsel guarding the millet field, whose bosom you hug,
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே. (aththA niththA muththA chiththAappA kumarap perumALE.) : Oh Supreme One, Oh Eternal One, Oh the One without any bondage, and Oh Mystical One! Oh universal Father, KumarA, Oh, Great One! அத்தா = அனைவருக்கும் மூத்தோனே; முத்தா/முக்தா = மும்மலத்தை அகற்றி முக்தி கொடுப்பவனே!
Comments
Post a Comment