சிகரமருந்த — திரு இரவிக்குமார் உரை
இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களில் ('சப்த புரி', மோட்ச புரி) ஹரித்வாரும் ஒன்று. மற்றவை அயோத்தி, மதுரா, காசி, காஞ்சி, உஜ்ஜயனி, துவாரகை ஆகும். பண்டை காலங்களில் ஹரித்துவாரை மாயாபுரி என்றே அழைத்தனர். ஹரித்வாரில் 3 சக்தி பீடங்கள் உள்ளன. ஒன்று மானசா தேவி, மற்ற இரண்டும் சண்டி தேவி,மாயா தேவி ஆகியவைகளாகும். சண்டி தேவிக்கு இன்னொரு பெயர் சண்டிகா. சக்தி பீடங்கள் என்பன தக்ஷ யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சிவபத்தினியான சதி தேவியின் துண்டிக்கப்பட்ட அங்கங்கள் விழுந்த இடங்கள் ஆகும். ஹரித்வாரில் தான் மார்பு பகுதிகள் விழுந்ததாக கருதப்படுகிறது.
ஈசனை அழைக்காது தக்ஷன் நடத்திய யாகத்தில் அவனது மகளான தாக்ஷாயணி என்ற சதி தேவி கணவனுக்காக நியாயம் கேட்டு வந்தும் அவளை மதியாது இருக்கவே, வெகுண்ட ஸதி அக்னி குண்டத்தில் குதித்து உயிரை விடுகிறாள். இதனை ஈசன் அவள் உடலை சுமந்து ருத்ர தாண்டவம் ஆடி விடுகிறார். அப்பொழுது தேவியின் அங்கங்கள் சிதறி விழுந்த இடங்கள் ஐம்பத்தொன்று சக்தி பீடங்களாக கருதப் படுகின்றன.
மாயாதேவி கோவிலில் மூல ஸ்தானத்தில் 3 அம்மன் சிலைகள் உள்ளது. நடுவில் மாயா தேவியும் இடது புறம் காளியும் வலது புறம் காம்க்யா தேவியும் உள்ளனர்.
சிகரமருந்த — திருப்புகழ்
சிகர மருந்த வாழ்வது சிவஞானம்சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்தி டாவருள் புரிவாயே
அகர நெருங்கி னாமய முறவாகி
அவச மொடுங்கை யாறொடு முனமேகி
ககன மிசைந்த சூரியர்புகமாயை
கருணை பொழிந்து மேவியபெருமாளே.
சிகரத்தில் இருந்து வீழும் அமிர்தத்தை அருந்தி வாழ்வதே சிவஞானம் இதை அறிந்திடாது கர்மங்கள் செய்து மயங்கி சிதறி அழிந்திடாமல் நான் இருப்பேனாக. எனது மாமகாரம் நொறுங்க மாயை எனை விட்டொழியும், அழிவுக்குட்படும் அந்த அகமாயை நான் சத்யம் என்று நினைத்து மயங்கிடாது இருக்க உனது அருள் துணை வேண்டும் ஐயனே. அகரமெனும் மூலத்தை நெருங்கி என்றும் ஆனந்த உறவாகி நின்று, மயக்கம் ஒழித்தவர்களுடனே என்றும் எனது மனம் உறவாகிச் செல்லும்படி நீயே எனக்கு அருளவேண்டும். செம்பொன் போன்ற நிறத்தையுடைய சூரியரும் வந்து உனது தாள்பணிய அவனுக்கு கருணைபுரிந்து காத்தருளிய மகாமாயையை வென்ற பெருமாளே (அல்லது மாயையை தன்னுள்ளே அடக்கி நிற்கும் பெருமாளே / அல்லது அந்த மகாமாயையாகிய அன்னை ஆதிசக்தியின் அன்பைப் பெற்ற பெருமாளே.)
அறிதல் வேறு ஞானம் அடைதல் வேறு. அறிவின் தெளிவே ஞானம். உலகியல் ஞானம் உலகப் பொருட்களைப்பாற்றிய அறிவின் தெளிவு. ஆன்ம ஞானம் ஆன்மாவைப்பற்றிய அல்லது இறைவனைப்பற்றிய தெளிவு. இங்கே இன்னும் உணர்தல் என்னும் சுய அனுபவம் இதிலிருந்து தனித்தே நிற்கின்றது. அறிவுத்தெளிவகிய ஞானம் + சுய அநுபூதி = இறையனுபவம் அதனால் ஒரு விஷயத்தை அறிந்துகொண்டதால் மட்டும் ஞானம் பெற்றவர்களாக முடியாது. “சிகர மருந்த வாழ்வது சிவஞானம்” என்னும் வாக்கியத்தில் அருணகிரிநாத சுவாமிகள் பெரிய ரகசியத்தை சுலபம் போலக் கூறிவிட்டார். ஆனால் அந்த நிலையை அடையவே யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும், பக்தர்களும் ஏங்கித் திரிகின்றனர். யதார்த்தத்தில் அது ஒரு படிநிலையே அதைத் தொட்டு அதைவிடவும் உயர்ந்த நிலைகளை ஒரு யோகி அடையவேண்டியுள்ளது. சிவன் கையில் கபால பிக்ஷை பாத்திரம் இருப்பதுவும் இதன் காரணமே.
அருமை நல்ல தகவல் பக்தி உணர்வின் ஆனந்தம்
ReplyDelete