298. சிகர மருந்த
Learn The Song
Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)
Arohanam: S R1 G3 M2 P D1 N3 S Avarohanam: S N3 D1 P M2 G3 R1 SParaphrase
சிவஞானப் பேரொளிக்கும் ஆணவமாகிய இருளுக்கும் இடம் கொடுத்து நிற்பது உயிர். உயிரில் பதிஞானம் மேலிட்டு நின்றால் ஆணவம் ஒளிந்து நிற்கும். ஆணவ மலம் மேலிட்டு நின்று மும்மலங்களுக்குள் மூழ்கிக் கிடந்தால் ஞானப் பேரொளி விலகி நிற்கும். ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களில் இருந்து உயிர்கள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளும் வலிமையற்றன. அதிலிருந்து நாம் விடுபட்டால் தானே நமக்கு மன அடக்கம் வரும். மனம் ஒடுங்கினால் ஞானமும் வரும். அத்தகைய பெருநிலையை எனக்கு அருள்வாய், என்கிறார் அருணகிரி நாதர்.
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் (sikaram arundha vAzhvadhu sivanyAnam) : One gets the Knowledge of Shiva when they pronounce the 'si' of the Sivayanama panchakshara mantra; (சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள) 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும்; அருந்த: உச்சரிக்க; வாழ்வது: உண்டாவது
சிவாயநம என்பதில் சி காரம் சிவத்தை உணர்த்தும் மகரம் - ஆணவ மலத்தை உணர்த்தும். ;
சிதறி அலைந்து போவது செயல் ஆசை (sidhaRi alaindhu pOvadhu seyalAsai) : with that pronounciation, the mind, speech and body lose their action and desires; (அத்தகைய உச்சரிப்பால்) சிதறுண்டு அலைந்து அழிந்து போவது (மனம், வாக்கு காயம் இவைகளின்) செயலும் ஆசைகளும்; செயலாசை = பற்று;
மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இந்த தடுமாற்றம் சிவஞானத்தால் அழியும்.
மகர நெருங்க வீழ்வது மகமாய (makara nerunga veezhvadhu magamAya) : when one pronounces the makara syllable, the grand illusion called maha maya gets destroyed; மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. மகரம் = 'ம' என்னும் எழுத்து, ஆணவ மலம்; ;
மருவி நினைந்திடா அருள் புரிவாயே (maruvi ninain dhidA aruL purivAyE) : Bless me so that I meditate on You and reach a stage beyond memory and forgetfulnesse. உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக.;
The following lines describe how the sun suffered under the demon Surapadman's rule. SUran ordered the Sun to decrease the intensity of its heat rays while passing through the streets of the city. Murugan destroyed SUran and helped the sun gods to regain their former glory.
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி (akara nerungin Amayam uRavAgi) : Whenever the Sun approached the streets (of Veeramahendrapuram), he was distressed, (வீரமஹேந்திரபுரத்தின்) வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு; அகரம் (agaram) : street; ஆமயம் (Amayam) : disease, distress;
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி (avasamodum kaiyARodu munam Egi ) : stunned and disturbed at the time of Suran's rule, மயக்கத்துடனும் தன் செயலற்றும் சூரனது அரசாட்சிக் காலத்தில் சென்று, அவசம் (avasam) : மயக்கம் ; முனம் (munam) : சூரனது அரசாட்சிக் காலத்தில், கையாறு (kaiyARu) : செயலறுதல்;
ககனம் இசைந்த சூரியர் புக ( gaganam isaindha sUriyar puga) : all the twelve Suns (AdhithyAs) in the skies surrendered to You. ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக,
கருணை பொழிந்து (karuNai pozhindhu) : You were so kind to the Suns (that You rescued them from SUran by destroying him).
மாயை மேவிய பெருமாளே. (mAyai mEviya perumALE.) : You chose MAyApuri as Your abode, Oh Great One!
சிவ பஞ்சாக்ஷரம்
ஆறாவது அறிவைக் கொண்ட மனித வாழ்வின் நோக்கம் அறிவு முழுமை பெற வேண்டும். எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ, அந்த அடிப்படையை உணர்ந்து, அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதே நம் வாழ்வின் நோக்கம்.
இந்த உலகம் சப்த அலைகளால் நிரம்பியது. அண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம் வலது காதால் கேட்டு பெற்ற ரகசியம் தான் சைவ சமயத்தின் மூல மந்திரமான "நமசிவய" எனும் திருவைந்தெழுத்து / பஞ்சாட்சரம். உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவய என்பதன் பயன்.
திருமறைகளை பாடி வந்த நாயன்மார்கள் பஞ்சாட்சர மந்திரத்தை முதலில் அவர்கள் ந ம சி வ ய என்று தான் சொல்லிவந்தார்கள் , இப்படி சொல்வதினால் இகலோக வாழ்க்கை மேன்மையாகும், ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில காலம் கழித்து சி வ ய ந ம என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள். அதன்படி
சி- சிவம்
வ- திருவருள்
ய-ஆன்மா
ந-திரோதமலம்
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மாவை சுத்தம் செய்து சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபட வைக்கும் பொருள். எல்லா அட்சரமும் சிவ பதியட்சரத்தில் ஒடுங்க சீவன் முக்தி வரும் என்பது சித்தர் வாக்கு.
திரோதமல மாறுமடி யார்களரு மாதவர்தி
யாமுறு பாதந்தருவாயே (அவாமருவி)
திரோத மலம் ஆறும் அடியார்கள் = உன்னை மறத்தல் எனும் குற்றம் நீங்கிய மெய்யடியார்கள்;
Comments
Post a Comment