149. ஆதிமகமாயி
ராகம் : ஹம்சானந்தி அங்க தாளம் (2 + 2 + 1½) ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு மடியேனை