84. புடவிக்கு அணிதுகில்
ராகம் : சாருகேசி தாளம் : ஆதி 2 களை புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா