85. போதகம் தரு
ராகம் : பந்துவராளி தாளம் : 1½+ 2 + 2 + 1½ + 2 போத கந்தரு கோவேந மோநம நீதி தங்கிய தேவாந மோநம பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும் பூணு கின்றபி ரானேந மோநம வேடர் தங்கொடி மாலாந மோநம போத வன்புகழ் ஸாமீந மோநம அரிதான வேத மந்திர ரூபாந மோநம ஞான பண்டித நாதாந மோநம வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான மேனி தங்கிய வேளேந மோநம வான பைந்தொடி வாழ்வேந மோநம வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்