Posts

Showing posts from May, 2018

காணாத தூர - ஜானகி ரமணனின் கருத்துரை

Posted by Smt. Janaki Ramanan. You may read kaanaatha thoora for an explanation of the song in English சோணாசலத்தின் சுடரொளியே சரணம். "காணாத தூர நீள் நாத வாரி" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். அண்ட சராசரத்திலும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆன்மாவாய் அமைந்திருப்பவன் முருகன் என்பதாலே அருணகிரிநாதருக்கு அவனை வெவ்வேறு விதமாய் உருவகப்படுத்தி உருக முடிகிறது. குழந்தையாய் மடி மீது வைத்துக் கொஞ்ச முடிகிறது. அன்னை தந்தையாய் வைத்து அடிபணிய முடிகிறது. நாயகனாய் நினைத்து ஏங்க முடிகிறது. எல்லாமே அவன், ஒவ்வொன்றிலும் அவன் என்று பார்க்கும் பக்தியின் பரிமாணங்கள் இவை. இந்தப் பாடலும் முருகனை நாயகனாய்ப் பாவித்து தன்னை நாயகியாய் வைத்து பக்தன் அருணகிரியார் பாடும் பாடல். இந்த நாயக நாயகி பாவத்தின் உச்சம் தான் வள்ளி தத்துவம் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. காணாத தூர நீள் நாத வாரி காதார வாரம் விளக்கம் : தலைவன் உடன் இருக்கும் பொழுது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை Uரந்து விரிந்திருக்கும் இந்தக் கடலின் அலை ஓசை இன்ப நாதமாய் ஒலிக்கிறது. இன்றோ தலைவனைப் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அது நாரா...

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே