Posts

Showing posts from November, 2018

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink. முன்னுரை காமக் கோட்டத்தின் கந்தா! அத்திவரதரின் அழகிய மருகா! சரணம். "சீசி முப்புரக் காடு நீறெழ" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். பக்தர்களுக்காக ஒளிமயமான மலர்ப்பாதை விரித்து வைத்திருக்கிறான் முருகன். அதில் நடந்தால் ஆணவம், கன்மம், மாயை என்ற மாசுகள் எரிந்து போகும். பஞ்ச கோசங்கள் தாண்டிய ஆன்ம ஸ்வரூபம் காட்சி தந்துவிடும். சூரிய ஞானப் பெருவெளியில் சஞ்சாரம் செய்யும் பேறு கிட்டும். முக்தி வாசல் திறக்கும். அநுபூதியாம் பேரானந்த அனுபவம் மலர்ந்து விடும். இவையெல்லாம் புரியாமலே வாழ்வின் பெரும் பகுதி வீணாகி விட்டதே, வேலா! பந்த பாசங்கள் அகற்றி, உன் மேல் மாறாத நேசத்தை நெஞ்சிலே நிறுத்தி வைப்பாய் – என அருணகிரிநாதர் வேண்டுகின்ற பாடல். மனித நெஞ்சத்தை நன்னிலமாக்கி, அதில் பக்தியை விதைக்க அவர் பாடுபடுவது தான் ஒவ்வொரு பாடலுமே. பாடலின் இரண்டாம் பகுதியில் அவனுடைய புகழ் என்னும் தேனை அருந்தச் செய்து விடுவதாலே சொல்லொணா மன நிறைவு.

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே