அற்றைக் கிரை — JR விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song atraikku irai ( அற்றைக் கிரை ) in English, click the underlined hyperlink. முன்னுரை "அற்றைக் கிரை தேடி" என்று தொடங்கும் காஞ்சி மாநகர் திருத்தலப் பாடல். எளிமை போல் தோன்றும் வலிமையான பாடல். ஞானச் சாற்றினை அல்லவா பிழிந்து தருகிறார்! அது அருணகிரிநாதரின் அனாயாசம். சுற்றி வளைக்காமல், முதிர்ந்த, முழுமையான வெற்றிக் கனி பறிக்க வேலனை வேண்டும் பாடல். இகத்திலிருந்து பரத்துக்கு ஏற்றிவிடும் பாடல். இப்படித் திருப்புகழ் எங்கும் மணம் மிகுந்த ஞானப் பூக்களைத் தூவி விடுகிறார் அருணகிரிநாதர். நம் மனதும் மணம் பெறுமோ!