Posts

Showing posts from February, 2019

எழுபிறவி — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song ezhu piravi ( எழுபிறவி ) in English, click the underlined hyperlink. முன்னுரை எழுபிறவி என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். திருத்தல யாத்திரை சென்று அந்தந்தத் தலங்களின் முருகனை திருப்புகழ் பாடல்களால் போற்றி வணங்கிய அருணகிரிநாதர், தல யாத்திரை முடித்துக் கொண்டு , திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், ஆர்வம் அடங்காமல், முருகனைப் பாடிய பாடல்கள், பொதுப் பாடல்களில் அடங்கும்.

முட்டுப் பட்டு — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song muttup pattu ( முட்டுப் பட்டு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "முட்டுப் பட்டுக் கதிதோறும் " என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஞானவெளியில் சிறகடிக்கத் துடிக்கும் ஆன்மாவின் தாகமாய், ராகமாய் ஒலிக்கும் பாடல். பட்டுத் துடித்த பின் விட்டு விடுதலையாக நினைக்கும் பக்தியின் உச்சம். முருகனை உணர்ந்து கொண்டு விட்ட உன்னத நேரத்தில் உதிக்கின்ற வரிகள். இழுத்துச் செல்லும் பிறவிச் சுழலிலிருந்து விடுபடக் கதறும் அபயக்குரல். காஞசியாயிருந்தாலும், கைலாசமாகவே இருந்தாலும், அவனை எட்டிவிடாதோ பக்தனின் குரல்! இதயத் தாமரைக்குள் எழுந்தருளிவிட மாட்டோனோ எம் பெருமான்!

அனித்தமான : JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song aniththamaana ( அனித்தமான ) in English, click the underlined hyperlink. முன்னுரை "அனித்தமான ஊனாளும்" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஞானிகளின் யோக நிலைகள் என்பது வேறு; அஞ்ஞானிகளாம் சாதாரண மனிதர்களின் யோகப் பயிற்சிகள் என்பது வேறு. உடல் தான் நிரந்தரம்; அதைப் பேணுவது என்பது தான் வாழ்வின் நோக்கம் என்பது போன்ற யோகப் பயிற்சிகளை அருணகிரிநாதர் சாடுகிறார். சிவயோக நிலை நின்று, மெய்ப்பொருளாம் முருகனை உணரும் சிவஞானம் நாடுகிறார். அந்த ஞானம் அருளுமாறு முருகனை வேண்டிப் பாடுகிறார். எந்த நிலையில் இருக்கிறோம், எந்த நிலைக்கு உயர வேண்டும் எனத் தெளிவாகக் காட்டும் பாடல். முருகன் புகழ் அமுதமாய்ப் பொங்கி வரும் பாடல்.

திருவாதவூரார் வரலாறு

By Mrs Devaki Iyer, Pune. மாணிக்கவாசகர் என்று அறியப்படுகிற சைவ சமயக்குரவர்களில் காலத்தால் கடையவர், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கூடற்பதிக்கருகில் வாதவூரில் அவதரித்தார். திருவாதவூரார் என்றே பெயர் காணப்படுகிறது. ஆமாத்திய ப்ராம்மணகுலத்தில் பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து மதி நுட்பத்திற்கும் நெறி திட்பத்திற்கும் பெயர்பெற்று விளங்கினார். திருவாதவூரார் அரிமர்த்தன பாண்டிய மன்னனால் மதிமந்திரியாக வரிக்கப்பட்டு அப்பதவியைச் சிறந்த முறையில் வகித்து வந்தார். ஆனால் மனம் ஈசனையே நாடிற்று. பணியிலிருந்து ஓய்வு விரும்பியவருக்குக் குதிரை வாங்கி வரும் பணி கொடுத்துச் சோழ நாட்டுத்துறை முகத்துக்கு அனுப்பினான் அரசன்.

திருஞானசம்பந்தர் வரலாறு

By Mrs Shyamala, Pune. திருஞானசம்பந்தர் சைவம் தழைக்க பாடுபட்டவர்களில் ஒருவர். மிக சிறு வயதிலேயே பதிகம் பாட ஆரம்பித்தார். நமக்கு 368 பதிகங்களே கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் சீர்காழியில் சிவபாதருக்கும் பகவதி அம்மாவுக்கும் கிபி 637ல் மகனாய் தோன்றினார். மூன்று வயது குழந்தையாக இருந்த போது தந்தை தோணியப்பர் ஆலய குளக்கரையில் குழந்தையை அமர்த்தி விட்டு நீராடச் சென்றார். குழந்தைக்கு பசி. அம்மா அம்மா என்று அழ உமையவள் பாலுடன் சேர்த்து ஞானத்தையும் ஊட்டினாள். திரும்பி வந்த தந்தை குழந்தை வாயில் பால் வழிவது கண்டு பிள்ளையிடம் வினவ "தோடுடைய செவியன்" என பாடி, மேலே கை தூக்கி பரம் பொருளை அடையாளம் காட்டினார். இவர் முருகனின் அவதாரம் என்கிறார் அருணகிரிநாதர்.

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே