விடுங்கை பதவுரை
By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vidungai விடும் கைக்கு ஒத்த உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) கடா உடையோனிடம் அடங்கி எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, கைச்சிறையான அநேகமும் கை வசப்பட்ட பலவித செல்வங்களும் விழுங்கப்பட்டு அறவே முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு அறல் ஓதியர் விழியாலே ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு) விரும்பத்தக்கன போகமும் மோகமும் விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும் விளம்பத்தக்கன பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஞானமும் மானமும் கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்