Posts

Showing posts with the label கருப்புவிலில்

67. கருப்புவிலில்

ராகம் : சிந்து பைரவி தாளம் : கண்ட த்ருவம் கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி உனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு அருளாலே உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்தபொருள் உணர்த்துநா ளடிமையு முடையேனோ