பாலோ தேனோ
By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link paalO thenO பாலோ தேனோ இதன் இனிமை பாலை ஒத்ததோ அல்லது தேனையோ பலவு உறு சுளை அது தானோ அல்ல அல்ல பலாப்பழத்தின் சுளையையோ வானோர் அமுதுகொல் இல்லை இல்லை இவ்வுலகத்துப் பொருள்களே அல்ல, தேவர்கள் உண்ணும் அமுதம் தான் ஒக்கும், கழை ரச பாகோ ஒருவேளை கரும்பின் சாற்றிலிருந்து எடுத்த சர்க்கரையின் பாகு எனலாமோ ஊனோடு உருகிய மகன் உண தன் உடல் தசையும் உருகிவிடுகிறாற்போல வருந்தி அழுத திரு ஞான சம்பந்தக் குழந்தைக்குப் பசியாறும்படி அருள் ஞானப் பாலோ உருகி சீர்காழிப்பதியில் அன்று உமை அன்னை கொடுத்தருளிய அவள் தன் திருமுலையில் ஊறிய ஞானப்பாலைக் கூறினாலும் தகுமோ