51. வஞ்சத்துடனொரு
ராகம் : மனோலயம் தாளம் : ஆதி (2 களை) வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும்