99. கடிமாமலர்


ராகம்: கமாஸ்தாளம்: 5½ (2½ + 1½ + 1½)
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த தொடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்டகதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்துபணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த பெரியோனே
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து வரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்கணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.

kadi maa malarkkuL inbam uLa vEri kakku naNbu
tharu maa kadappa maindha thodai maalai

gana mEru oththidum panniru maa buyath aNindha
karuNaakara prachaNda kadhirvElaa

vadivaar kuRaththi than ponnadi meedhu niththam unthaN
mudiyaana dhutr ugandhu paNivOnE

vaLavaaymai soR prabandham uLa keeranuk ugandhu
malarvaay ilakkaNangaL iyalbOdhi

adimOnai soRkiNanga ulagaam uvappa endrun
aruLaal aLikku kandha periyOnE

adiyEn uraiththa punchol adhumeedhu niththam undhan
aruLE thazhaith ugandhu varavENum

chedi nEr udaR kudambai thanin mEvi utri indha
padidhaan alakkaN ingaN uRalaamO

thiRa maathavark kanindhun iru paadha padhma muyndha
thiru vEragath amarndha perumaaLE.

Learn The Song



Know the Ragam Khamas/Kamas

Janyam of 28th mela Hari Kambhoji
Arohanam: S M1 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

கடிமா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடைமாலை (kadi mA malarkkuL inbam uLa vEri kakku naNbu tharu mA kadappa maindha thodai mAlai) : of all the fragrant flowers, dripping the sweetest honey is the garland of kadappa flowers that confers friendship; கடி = வாசனை; வேரி கக்கு = தேன் துளிப்பதும்; நண்பு தரு = அருச்சிப்பதனால் இறைவனுடைய நட்பைத்தர வல்லதும் ஆகிய; மா கடப்பு அமைந்த தொடைமாலை = பெரிய கடப்ப மலர்களாகக் கொண்டு புனைந்த திருமாலைகளை;

கனமேரு ஒத்திடும் பன் இருமா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா ( gana mEru oththidum panniru mA buyath aNindha karuNAkara prachaNda kadhirvElA) : adorning it on the twelve shoulders that are strong as the renowned meru mountain is the kind lord who possesses the fierce and radiant spear. (vel)

வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது (vadivAr kuRaththi than ponnadi meedhu) : On the golden feet of the beautiful gypsy hunter girl Valli

நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே (niththam unthaN mudiyAna dhutR ugandhu paNivOnE) : You place your cool hair (and crown) in a happy prostration;

வளவாய்மை சொற்ப்ரபந்தமுள கீரனுக்கு (vaLavAymai soR prabandham uLa keeranukkku) : To poet Nakkeeran, who was capable of composing poetical compositions with choicest words of wisdom and truth,வளம் பெற்றதும், சொல்லழகு நிரம்பிய நூல்களை இயற்றுவதில் வல்லமையும் உடைய நக்கீரதேவருக்கு மகிழ்ச்சியுற்று,

உகந்து மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி (ugandhu malarvAy ilakkaNangaL iyalbOdhi) : You happily taught with Your own flower-like mouth the intricacies of grammar;

அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே (adimOnai soRkiNanga ulagAm uvappa endru un aruLAl aLikku ukandha periyOnE) : synchronising with meter and rhyme, You aptly chose the words "ulagam uvappa" and happily blessed him with those opening words, Oh Wise One!அடி, மோனை, சொல் என்னும் யாப்புக்கு இணங்குமாறு "உலகம் உவப்ப" (என்று தொடங்கும் திருமுருகாற்றுப்படை) என்று தேவரீர் திருவருளால் அடியெடுத்துத் தந்த கந்தப் பெருமானே! பெரியவரே!

அடியேன் உரைத்த புன்சொல் அதுமீது நித்தமும் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் ( adiyEn uraiththa punchol adhu meedhu niththamum thaN aruLE thazhaithu ugandhu varavENum) : Kindly come and shower your cool grace on my worthless utterances;

செடி நேர் உடற் குடம்பை தனின்மேவி உற்று (chedi nEr udaR kudambai thanin mEvi utRu) : this shell of a body that houses many sins; செடிநேர்( chedi nEr ): housing sins; பாவத்திற்கு உறைவிடமாகிய பறவை முட்டைக்கு நிகராகிய உடம்பில் விரும்பி பொருந்தி உறைந்திருந்து; செடி நேர் = (பாவச் செயல்களே) அடர்த்தியாக நிறைந்துள்ள, dense; உடற் குடம்பை = உடல் என்னும் கூட்டில்; குடம்பை = கூடு; )

இடிந்த படிதான் அலக்கண் இங்கண் உறலாமோ ( idiindha padidhAn alakkaN ingaN uRalAmO) : must it suffer like this? Here the body is compared to the egg shell of a bird. The egg breaks one day and the bird flies away, just like the life flies away from the body, leaving it dead. முட்டை திடீரென்று உடைந்த படி, இவ்விடத்தில் மரணமாகிய துன்பத்தை அடியேன் அடையலாமோ? அலக்கண் = துன்பம்; முட்டையும் அதனுள் பறவையும் ஒன்றாகவே பிறந்து, பறவை வளர்ந்தபின் முட்டையை உடைத்துக்கொண்டு பறந்துபோய் விடுகின்றது. உயிர் பறவைக்கும் உடம்பு முட்டைக்கும் ஒப்பாகும்.

திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த (thiRa mAdhavark kanindhu un iru pAdha padhmam uyndha) : The pious people (who have controlled their senses) who pray to you with their hearts tender with love attain Your feet, மாதவர்: மாமுனிவோர்; பாத பத்மம்: பாதத் தாமரை(களாலே); உய்ந்த: உய்வுபெற்ற; ; திருவேரகத்து அமர்ந்த பெருமாளே. ( thiru vEragaththu amarndha perumALE.) : Oh, Lord of ThiruvEragam (SwAmimalai)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே