119. உடையவர்கள் ஏவ


ராகம்: நளினகாந்தி தாளம்: ஆதி
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர்தர்பர யோகர்நிலவோடே
விளைவுசிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடுமதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர்நடையி டாமுன் வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு பெருமாளே

Learn The Song



Raga Nalinakanthi (Janyam of 27th mela Sarasangi)

Arohanam: S G3 R2 M1 P N3 S    Avarohanam: S N3 P M1 G3 R2 S

udaiyavargaL Evar evargaLena nAdi
uLamakizha Asu kavipAdi
umathupugazh mEru giriyaLavu mAna
thenavuramu mAna mozhipEsi
nadaipazhagi meeLa vaRiyavarkaL nALai
nadavumena vAdi mugam vERAy
naliyumunamE un aruNavoLi veesu
naLina iru pAtham aruLvAyE
vidaikoLuvu bAgar vimalar thirisUlar
vigirthar para yOgar nilavOdE viLavu siRu pULai nakuthalaiyo dARu
vidavaravu chUdu mathipAra
chadai iRaivar kANa umai makizha gnAna thaLar nadaiyi dAmun varuvOnE thavamalaru neela malar chunai anAthi thaNimalai ulAvu perumALE

Paraphrase

உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி (udaiyavargaL Evar evargaLena nAdi ) : Searching for and seeking the haves (wealthy people),

உளமகிழ ஆசுகவி பாடி (uLa magizha Asu kavi pAdi) : I make them happy, singing lyrical poems,

உமது புகழ் மேரு கிரியளவும் ஆனது என (umathu pugazh mEru giri aLavumAnathu ena) : praising that their fame is comparable to the lofty Mount MEru,

உரமுமான மொழி பேசி நடை பழகி மீள வறியவர்கள் (uramumAna mozhipEsi nadai pazhagi meeLa vaRiyavargaL) : flatter them thus, yet return poor and empty-handed; வலிமையான துதி மொழிகளைப் பேசியும், நடந்து நடந்து பழகியும், தரித்திரர்களாகவே மீளும்படி, வறியவர்கள் மீள(vaRiyavargaL meeLa ) : return as poor or destitute; வறியவர்கள்: destitute;

நாளை நடவுமென வாடி முகம் வேறாய் (nALai nadavumena vAdi mugam vERAy) : and my face becomes pale, hearing the words "come tomorrow"

நலியுமுனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே (naliyumunamE un aruNa oLi veesu naLina iru pAtham aruLvAyE) : and my heart despairs; before this happens, kindly grant me Your lotus feet that radiates reddish glow; நளின ( naLina ) : lotus-like;

The next 4 lines describe Lord Shiva, father of Lord Muruga.

விடை கொளுவு பாகர் விமலர் திரி சூலர் விகிர்தர் பர யோகர் (vidaikoLuvu pAgar vimalar thiri sUlar vigirthar para yOgar) : The Lord who mounts the bull (Nandi), the Pure, the Holder of Trishul or trident, Unique and the Supreme Yogi; விகிர்தர் (vigirthar) : God or someone with unique actions or capabilities;

நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடும் (nilavOdE viLavu siRu pULai nakuthalaiyodu ARu vidavaravu chUdum ) : and wears the crescent moon, vilvam (bael) leaf, little pULai (Indian laburnum) flower, the skull with teeth, the river Ganga and the poisonous snake; விளவு (viLavu ) : vilva; நகுதலை (naguthalai) : skull with teeth;

அதிபாரச் சடை இறைவர் காண (athi bhara sadai iRaivar kANa) : on His weighty tresses; and while that SivA is watching,

உமை மகிழ ஞான தளர் நடையிடா முன் வருவோனே (umai magizha gnAna thaLar nadai idAmun varuvOnE) : and to the delight of Mother UmA, You walk before them in gentle gait reflecting wisdom!

தவ மலரு நீல மலர் சுனை (thavamalaru neela malar sunai) : (This place has) a pond where blue lilies blossom in plenty; தவமலரும் = மிகுதியாக/அடர்ந்து மலர்கின்ற, தவம் = காடு;

அநாதி தணி மலை உலாவு பெருமாளே (anAthi thaNimalai ulAvu perumALE) : and this is the ancient Mount ThiruththaNigai without a beginning, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே