Posts

391. நீலங்கொள்

ராகம் : சாரங்கா/குறிஞ்சி அங்கதாளம் கண்ட நடை (8) நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே.

390. நீரு மென்பு

ராகம் : நவரச கன்னட தாளம் : ஆதி திச்ர நடை (12) நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய வுயிரூறி நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய மொழியாதோ

389. நிருதரார்க்கொரு

ராகம் : மத்யமாவதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ தொருநாளே

388. நிமிர்ந்த முதுகும்

ராகம் : காபி தாளம் : சதுச்ர ரூபகம் (6) நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ

387. நித்தமுற்று உனை

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் 1½ நித்தமுற் றுனைநினைத்து மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக நத்தியு தமதவத்தி னெறியாலே லக்யலக் கணநிருத்த மருள்வாயே

386. நாளு மிகுத்த

ராகம் : கமாஸ் தாளம் : அங்கதாளம் 2 + 1½ + 3 (6½) நாளு மிகுத்த கசிவாகி ஞான நிருத்த மதைநாடும் ஏழை தனக்கு மநுபூதி ராசி தழைக்க அருள்வாயே

385. நாலிரண்டிதழ்

Image
ராகம் : துர்கா அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்