387. நித்தமுற்று உனை


ராகம் : குந்தலவராளிஅங்கதாளம் 1½
நித்தமுற் றுனைநினைத்துமிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக
நத்தியு தமதவத்தினெறியாலே
லக்யலக் கணநிருத்தமருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர் கிளைமாள
விட்டநத் துகரனுக்குமருகோனே
குற்றமற் றவருளத்திலுறைவோனே
குக்குடக் கொடிதரித்தபெருமாளே.

Learn The Song



Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S S   Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி ( niththam utrunai ninaiththu miga nAdi) : Everyday I ardently contemplate on You in my mind; தினமும் உன்னை மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும்,

நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக நத்தி (nishtai petru iyal karuththar thuNaiyAga naththi) : I also seek the company of great people who have transcended great heights in meditation, தியானநிலை பெற்று வாழும் கருத்தமைந்த பெரியோரைத் துணையென்று அவர்களை நாடியும்; நத்தி (naththi) : விரும்பி;

உ(த்)தம தவத்தின் நெறியாலே (uththama thavaththi neRiyAlE: and willingly follow their righteous directions; and as a result; சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக

லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே (lakya lakkaNa niruththam aruLvAyE) : You must appear before me dancing in accordance with all the theories in Bharatha Natya SAstrA and the rules laid out in the Nriththa SAstra.இலக்கியத்தில் (பரத சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது நிருத்த தரிசனத்தை நீ எனக்கு அருள்வாயாக.
திருப்பெருந்துறையில் எல்லையற்ற பேரானந்தம் தந்த சிவபெருமானின் திருக்கூத்தை தில்லையம்பலத்தில் முடிவில்லாத ஆனந்த நடராசனாகக் கண்டமையைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதியை கண்டபத்து திருவாசகம் என்றும், பதிகத்தின் உட்பொருளை ‘நிருத்த தரிசனம்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாள விட்ட (vetri vikrama arakkar kiLai mALa vitta) : Dynasties of victorious and powerful demons (asuras) were destroyed வெற்றியும் பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த

நத்துகரனுக்கு மருகோனே ( naththu karanukku marugonE) : by the weapon, ChakrA, held by Vishnu; and You are His nephew!) : சக்ராயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே; நத்து = சங்கு;,

குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே (kutram atravar uLaththil uRaivOnE) : You reside in the hearts of people who are sinless! குற்றம் இல்லாத பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே,

குக்குடக் கொடி தரித்த பெருமாளே. (kukkudak kodi dhariththa perumALE.) : You hold in Your hand the staff of Rooster, Oh Great One! சேவற்கொடியை ஏந்திய பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே