384. நாராலே
Learn The Song
Paraphrase
Saint Arunagirinathar asks the Lord to bestow on him the ability to sing hymns in praise of His feet.
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசற் குடிலூடே (nArAlE thOl neerAlE Am nAnA vAsaR kudilUdE) : This body is like a cottage composed of fibrous nerves, skin, water and several doorways (nine portals). நார் போன்ற நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (நவத் துவாரங்களை) உடைய குடிசையாகிய இந்த உடலினுள்; ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்;
ஞாதாவாயே வாழ்கால் ஏகாய் (njAthAvAyE vAzhkAl EkAy) : While living in this body as an intelligent person, the day of departure from life will come; அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம்; ஞாதா ( njAthA/ज्ञाता ) : Knower. ஏகாய் (EkAy) : ஏகுதல் ஆய் = இறந்து போதல் ஏற்பட்டு;
நாய் பேய் சூழ்கைக்கு இடமா முன் (nAy pEy sUzhkaikku idamA mun) : Before the body is subjected to preying by dogs and devils, நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக ,
தாரார் ஆர் தோள் ஈராறானே (thArAr ArthOL eerARAnE) : Oh Lord who wears the fulsome garlands of Aththi (mountain ebony) flowers on His twelve shoulders , ஆத்தி மாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, தாராரார் (தார் ஆர் ஆர்) = ஆர் தார் ஆர் = ஆத்திமாலை நிறைந்த,
சார் வானோர் நற் பெரு வாழ்வே (sAr vAnOr naR peru vAzhvE) : Oh the bestower of prosperous life on Your devotees, உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே, சார்வா(ர் ஆ)னோர் - உன்னைச் சார்ந்த அடியவர்களுக்கு
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடாண்மைத் திறல் தாராய் (thAzhAthE nAyE nAvAlE thAL pAdANmai thiRal thArAy) : without delay, kindly grant me, the lowly dog, the vigour and strength to sing the glory of Your feet with my tongue! சற்றும் தாமதியாமல் நாய் போன்ற அடியேன் என் நாவைக் கொண்டு உன் திருவடிகளைப் பாடும் வலிமைத் திறலைத் தருவாயாக.
பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர் (pAr EzhOr thALAlE ALvOr) : Lord Vishnu who protects the seven worlds with His perseverance ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும்; ஓர் தாள் = ஒப்பற்ற முயற்சி; தாள் = முயற்சி;,
பாவார் வேதத்து அயனாரும் ( pAvAr vEthaththu ayanArum) : and BrahmA, who preaches the VEdAs full of songs, பரந்த / தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும்; பா= பரவுதல், பாட்டு, தூய்மை, அழகு; பாவார் = பா + ஆர்; ,
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா (pAzh UdE vAn UdE pAr UdE Ur pAthaththinai nAdA) : searched in the wastelands, in the skies and in the earth for the hallowed feet of Lord SivA which they could never attain; வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத
சீரார் மாதோடே வாழ்வார் (seerAr mAthO dEvAzh vAr) : He is of such a unique glory; He lives with His consort, PArvathi; சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும்,
நீள் சே ஊர்வார் பொற் சடையீசர் (neeL sE UrvAr poR sadaiyeesar) : He mounts the huge bull (Nandi); He has golden tresses; பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய; சே ஊர்வார் (sE UrvAr) : இடபத்தை ஊர்தியாக / வாகனமாக கொண்டவர்;
சேயே வேளே பூவே கோவே (sEyE vELE pUvE kOvE) : You are the son of that Lord SivA! You are the reddish God of Love! You are the handsome king! குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே,
தேவே தேவப் பெருமாளே. (thEvE thEvap perumALE.) : Oh Lord, You are the God of all the Celestials, Oh Great One! தெய்வமே, தேவர்களின் பெருமாளே.
Comments
Post a Comment