379. திரை வஞ்ச


ராகம் : நாட்டகுறிஞ்சிதாளம்: கண்டசாபு (2½)
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி விளையாடிச்
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கண மயன்மாலும்
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ மயிலேறி
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி யருள்வாயே
பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரைநடராஜன்
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுநனருள்பாலா
இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
மெரியுண்டு பொடியஅயில்விடுவோனே
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெணுபஞ்ச ணையின்மருவுபெருமாளே.

Learn The Song from Guruji



Raga Nattai Kurinji (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S
Avarohanam: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S


Paraphrase

Saint Arunagirinathar prays for a state of Jeevanmukti where he follows the sakha marga and becomes His spiritual companion, then attains 'saarubam' and finally reaches 'sAyujyam', to fully immerse in true Siva consciousness and realize 'shivoham'. Saiva Bhakti Marga explained. See also Four Methods of worship.

திரை வஞ்ச இரு வினைகள் (thirai vanja iru vinaigaL ) : The twin karmas, good and bad, that come like sea waves; கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும்,

நரை அங்கம் மலம் அழிய (narai anga malam azhiya: ) : the body that yields to greying of hair and the three slags/blemishes or malas – all these must perish. For this, மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும்,

சிவ கங்கை தனில் முழுகி விளையாடி ( sivagangai thanil muzhugi viLaiyAdi) : I wish to dip myself in the River Ganga of SivA's nectar, immerse in it and swim around until; சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி,

சிவம் வந்து குதி கொள (sivam vandhu kudhi koLa ) : the sacred principle called SivA takes a firm footing in my mind so that my form becomes identical with Your form; உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய,

அகம் வடிவு உன்றன் வடிவம் என (agam vadivu undran vadivam ena) : என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி,

திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் (thigazh aNdar munivar gaNam ayan mAlum) : the effulgent celestials and the sages, along with BrahmA and Vishnu,

அரன் மைந்தன் என களிறு முகன் எம்பி என மகிழ(aran maindhanena kaLiRu mukan embiyena magizha) : must declare (me) as the Son of Lord SivA and the elephant-faced Ganapathi must be elated to accept (me) as His younger brother;

அடியென் கண் அளி பரவ மயில் ஏறி அயில் கொண்டு (adiyenkaN aLiparava mayilERi ayil koNdu) : to show Your infinite compassion for me, kindly mount Your peacock, holding the Spear in Your hand, அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி,

திரு நடனம் என தந்தை உடன் மருவி (thiru natanam ena thandhaiyudan maruvi) : and join with me in an unison like in Your father's great cosmic dance தந்தையாகிய சிவபெருமானுடைய நடனம் என்று சொல்லும்படியாக என்னுடன் பொருந்தி,

அருமந்த பொருளை இனி அருள்வாயே (arumantha poruLaiyini aruLvAyE:) : to graciously teach me as well, the rarest PraNava ManthrA! அச்சிவனுக்கு உபதேசித்த உண்மைப் பொருளை எனக்கும் உபதேசித்து அருளுக.
அருமந்த - அருமருந்தன்ன, அரிய மருந்துபோன்ற; பிரணவ மந்திரம் நோய்ப்பயம் தீர்ந்து மேலும் வாராமற் காப்பதுபோல, இப்பிறவியிலும் அருள் பாலித்து மறு பிறவி ஏற்படாமல் காப்பதனால் அருமந்து எனப்பட்டது.
.

The next two lines refer to the incidents that take place in the life of the great Nayanmar Saint Manickavachagar, as mentioned in the Thiruvilayadal Puranam.

பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு (pariyenba narigaL thamai natanangkodu) : In a divine prank, He transformed the jackals into horses குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி,

ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் (oruvazhudhi parithunja varu madhurai NadarAjan) : and made all the horses belonging to a PANdiya King die (overnight); He is Lord NadarAjan who came to Madurai; ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்து விடும்படியாக (குதிரை உருவம் மறைந்து) எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான்;

பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ (pazhiyanji enadharugil uRai puNdarika vadiva) : just to save Himself from blame, He stands besides me all the time; He has a skin texture of the red lotus; பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன்,

பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா (pavaLam sol umai kozhunan aruL bAlA) : One could also say that it is a coral hue; He is the Consort of UmAdEvi; You are the son of that Lord SivA! பவள நிறத்தினன் என்று சொல்லும்படியானவனும் உமா தேவியின் கணவனுமான சிவபெருமான் அருளிய மகனே! கொழுநன் என்றால் மனைவிக்குப் பற்றுக்கோடானவன். கணவன் என்பது இதன் பொருள்.

இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இரு வினையும் (iruL vanjagiri avuNarudan engaL iruvinaiyum) : Mount Krouncha, which was eerily dark and notorious for its treachery, the demons living thereon, and our deeds (both good and bad) இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும்,

எரி உண்டு பொடிய அயில் விடுவோனே (eriyuNdu podiya ayil viduvOnE) : were all burnt down when You wielded the Spear!

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குற மகளொடு (enadhanbil uRaisayila magizh vanji kuRamagaLodu) : Along with Valli, the vanji (rattan reed) creeper-like damsel of the KuRavAs, who dwells in my devotion and lives happily in the valley of VaLLimalai, என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன்

எ(ண்)ணு(ம்) பஞ்சு அணையில் மருவு பெருமாளே.(eNu panjaNaiyin maruvu perumALE.) : You get into Your venerable bed of soft cotton, Oh Great One! மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே.

When Lord Shiva Transformed Jackals Into Horses And Back Again

This particular story is part of the life history of Saint Manickavasagar, one of the 64 nayanars, as mentioned in the Thiruvilayadal Puranam. Manikkavasakar was born in Vadhavoor (Thiruvadhavoor, near by Melur in Madurai district), and was a minister to the Pandya king Varagunavarman II (c. 862 C.E. – 885 C.E.). The king Arimarthana had once entrusted him with a large amount of money to purchase horses for his cavalry. On his way he met an ascetic devotee of Siva, who in fact was Siva himself. Manikkavasakar received enlightenment, and built the temple of Siva in Tirupperunturai with the money. When it was time to produce the steeds before the king, Manickavasagar took refuge under his lord, Shiva. The Lord disguised Himself as the horse-keeper, transformed jackals into horses and presented them to the king. At night, the horses turned into jackals once again. Angered, the king imprisoned Manickavasagar. Lord Shiva then caused a flash flood to occur in the Vaigai river and made the king realize the greatness of Manickavasagar.

பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே