380. துள்ளுமத


ராகம் : ஹம்சானந்திஅங்கதாளம் 1½ + 1 + 2 + 3 (7½)
துள்ளுமத வேள்கைக்கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத்தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத்திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப்பெருமாளே.

Learn The Song From Guruji



Learn Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S


Hear Madurai Mani Sing the Thiruppugazh



A keyboard tutorial


Paraphrase

This is another of the several songs based on the Nayaka-Nayaki Bhavam.

துள்ளுமத வேள் கைக் கணையாலே (thuLLu madha vEL kaik kaNaiyAlE) : The barrage of flower arrows sent by the arrogantly swaggering Love God (Manmathan); செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும்,

தொல்லை நெடு நீலக் கடலாலே (thollai nedu neelak kadalAlE) : the deeply distressing blue seas; நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும்,

மெள்ள வரு சோலைக் குயிலாலே (meLLa varu sOlaik kuyilAlE) : the slowly approaching cuckoo from the groves (singing a melancholic tune); மெதுவாக வந்து (தன் சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும்,

மெய் உருகு மானை தழுவாயே (mey urugu mAnaith thazhuvAyE) : All these melt my deer-like love-tormented daughter. Please come and embrace her. காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்.

தெள்ளு தமிழ் பாட தெளிவோனே (theLLu thamizh pAdath theLivOnE) : You are the learned Sambandhan capable of composing poems in chaste Tamil! இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே,

செய்ய குமரேச திறலோனே (seyya kumarEsath thiRalOnE) : You are the eminently elegant Kumaresan, the valorous! செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே,

வள்ளல் தொழு ஞானக் கழலோனே ( vaLLal thozhu nyAnak kazhalOnE) : You have the feet of knowledge which the Great Munificent SivA worships. வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே,

வள்ளி மண வாளப் பெருமாளே. (vaLLi maNavALap perumALE.) : You are the Consort of VaLLi, Oh Great One! வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே