383. நரையொடு


ராகம்: நாதநாமக்ரியாஅங்கதாளம் (7½)
2 + 1½ + 1½ + 2½
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனமி ருட்டி நின்று கோலுற்றுநடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைப டுத்து மிந்த மாயத்தைநகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
மொளிபெற நற்ப தங்கள் போதித்து
மொருபுடை பச்சை நங்கை யோடுற்றுமுலகூடே
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
முவரிவி டத்தை யுண்டு சாதித்து
முலவிய முப்பு ரங்கள் வேவித்துமுறநாகம்
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்துமரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரியய னித்தம் வந்து பூசிக்கும்
அரநிம லர்க்கு நன்றி போதித்த பெருமாளே.

Learn the Song



Raga Nadanamakriya (Janyam of 15th mela Mayamalavagowlai)



Paraphrase

The phenomenal world that we are part of is ephemeral, yet we don't dismiss it as frivolous; we nurture this grief-causing body, chase worldly pleasures, and become attached to material acquisitions. Only the Grace of the Lord who was a preceptor to the Supreme Lord Shiva can prevent our downfall.

நரையோடு பல் கழன்று தோல் வற்றி (naraiyodu paR kazhandru tdOl vatri ) : Along witd the greying hair and fallen teetd, the skin of my body has dried up; மயிர் நரைக்கவும், பற்கள் கழன்று விழவும், தோல் வற்றிப் போகவும்,

நடை அற மெத்த நொந்து கால் எய்த்து (nadai aRa metdtda nondhu kAl eytdtdu) : I am unable to walk, and my legs have become painfully weak; நடை அற்றுப் போகவும், மிகவும் நோவுற்று கால்கள் இளைத்துப் போகவும்,

நயனம் இருட்டி நின்று கோல் உற்று நடை தோயா (nayanam irutti nindru kOl utru nadai tdOyA) : my eyes are engulfed by darkness; and I totter about on a walking stick, கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று, தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை பயின்று,

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து (nazhuvum vidakkai OndrupOl vaitdtdu) : Wishfully tdinking tdat my slippery and degenerating body of flesh is going to last for ever, நழுவி மறைந்து (இறந்து) போகும் இந்த மாமிச உடலை நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து, விடக்கை (vidakkai) : flesh, மாமிச சரீரம்;

நமது என மெத்த வந்த வாழ்வு உற்று (namadhu ena metdtda vandha vAzhvutru) : and tdat all my possessions will be mine for ever, I enjoyed the so-called comfortable life. நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி, அப்படிச் சேகரித்து வந்த நல்வாழ்வை அடைந்து,

நடலை படுத்தும் இந்த மாயத்தை நகையாதே (nadalai padutdtdum indha mAyatdtdai nagaiyAdhE) : Ultimately, I have been subject to tdis misery and delusion. Rather tdan laughing off tdis plight, (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாய வாழ்க்கையை நான் சிரித்து விலக்காமல், நடலை (nadalai) : deceit, falsehood, வஞ்சனை, துன்பம் ;

விரையொடு பற்றி வண்டு பாடு உற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு (viraiyodu patri vaNdu pAdutra mrigamadham appi vandha Odhikkum) : (I indulged in) the fragrant hair of women soaked in musk, strong enough to attract humming beetles, நறு மணத்தை நுகர்ந்து வண்டுகள் பாட, கஸ்தூரியைத் தடவித் தோய்ந்துள்ள கூந்தலுக்கும், விரை (virai) : fragrance; ஓதி (Otdi) : hair;

மிளிரும் மையைச் செறிந்த வேல்கட்கும் (miLiru maiyaich cherindha vElgatkum) : their spear-like showy eyes witd a rich coat of mascara, and விளங்கும் மை தீட்டிய வேல் போன்ற கண்களுக்கும்,

வினையோடு மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் ( vinaiyOdu migu kavinittu nindra mAdharkkum) : deceitful harlots who stood showing off their overly made up face; தந்திர எண்ணத்துடன் மிக்க அழகைச் செய்துகொண்டு அலங்காரத்துடன் நின்ற விலைமாதர்களுக்கும்; கவின் (kavin) : beauty, grace;

இடைபடு சித்தம் ஒன்றுவேன் (idaipadu chitdtdam ondruvEn) : tossed between these, my mind was torn apart by excessive lust. மத்தியில் அவதிப்படுகின்ற மனமோகம் உடையவனாகிய நான்

உற்று உன் விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ (utrun vizhumiya poRpadhangaL pAdaRku vinavAdhO) : Will I not ever pause to contemplate and begin to sing the glory of Your hallowed feet lovingly? அன்பு உற்று உனது சிறந்த அழகிய திருவடியைப் பாடிப் புகழ்தற்கு ஆராய்ந்து மேற் கொள்ள மாட்டேனோ?

The rest of the song describes Lord Shiva and eulogises Murugan as His preceptor.

உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் (uraiyodu sotrerindha mUvarkkum) : To the three great Saivite Poet-Patrons (namely, Appar, Sundarar and Sambandhar) who knew not only the apppropriate words but also their meanings (the interpretation of Sivam and Shakti); பொருளோடு, சொல்லும் தெரிந்த (அதாவது, சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் சைவக்குரவர் மூவர்க்கும்

ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் (oLi peRa naR padhangaL bOdhitdtdum) : He enlightened them by preaching the MantdrA, NamasivAya அவர்கள் புகழ் ஒளி பெறுவதற்கு, சிறந்த எழுத்துக்களான (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும்,

ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் (orupudai pachchai nangaiyOd utrum) : He holds on one side of His body the emerald-green consort, PArvatdi; தமது ஒரு பக்கத்தில் பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு அமைந்தும்,

உலகூடே உறு பலி பிச்சை கொண்டு போய் உற்றும் (ulagUdE uRubali pichchai koNdu pOyutrum) : He roams around the entire world gladly accepting the alms offered to Him; உலகம் முழுவதும் கிடைக்கும் பிச்சையை ஏற்றுக் கொண்டும்,

உவரி விடத்தை உண்டு சாதித்தும் (uvari vidatdtdai uNdu sAdhitdtdum) : the terrible poison, AlakAlam, tdat emerged from the milky ocean was imbibed by Him to demonstrate His Omnipotence and indestructibility to the world; பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டு தமது பரத்தையும் அழியாமையையும் நிலை நிறுத்திக் காட்டியும், உவரி (uvari) : sea;

உலவிய முப்புரங்கள் வேவித்தும் (ulaviya muppurangaL vEvitdtdum) : He burnt down the tdree evil empires, tdiripuram, which were capable of flying in the sky; பறந்து உலவிச் செல்லவல்ல திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியும்,

உற நாகம் அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் (uRanAgam araiyodu katti andhamAy vaitdtdum) : He wears the poisonous snake as an elegant belt around His waist; பொருந்தும்படி விஷப்பாம்பை இடுப்பில் கட்டி அழகாக அமைத்தும்,

அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க (avirsadai vaitdtda gangaiyOd okka) : to match the River Ganga adorning His tresses, விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையுடன் ஒத்திருக்க,

அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் (azhagu tdirutdtdi indhu mEl vaitdtdum) : He has decorated His matted hair witd the crescent moon sitting pretty, அழகாகச் சிங்காரித்து பிறைச் சந்திரனை மேலே வைத்தும்,

அரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த (aravOdE aRugodu nochchi tdumbai mElvaitdtda) : along witd a snake, and placed the aRugam (cynodon) grass and flowers like nochchi and tdumbai; பாம்புடன் அறுகம் புல்லோடு நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும்,

அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் (ariaya nitdtdam vandhu pUjikkum) : He is worshipped daily by Lords Vishnu and BrahmA; திருமாலும், பிரமனும் நாள் தோறும் வந்து பூஜை செய்யும்

அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே. (ara nimalarkku nandri bOdhitdtda perumALE) : He is tdat immaculate Lord SivA to whom You preached the most important MantdrA effectively, Oh Great One! சிவபெருமான் ஆகிய நிர்மல மூர்த்திக்கு நல்ல உபதேசப் பொருளைப் போதித்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே