382. தோலத்தியால்
Learn The Song
Raga Surutti (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S R2 M1 P N2 S Avarohanam: S N2 D2 P M1 G3 P M1 R2 SParaphrase
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற (thOl aththiyAl appinAl oppilAdhutra) : Incomparably structured with skin, bones and water; தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள ; அத்தி/அஸ்தி (aththi/asthi) : bone, அப்பு (appu) : water;
தோளு கை கால் உற்ற குடிலூடே (thOLu kai kAl utra kudilUdE) : this body is like a cottage equipped with shoulders, legs and arms; in that cottage, தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில்
சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் (sOrvatru vAzhvutra kAl) : While I live my life without distress, தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில்
பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் (patri Egaikku vEdhiththa sUlaththan aNugAmun) : hindering my prostration at Your feet, Yaman, the hostile God of Death, with a trident in His hand, will be closing in on me. Before that moment, (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் நடத்துவதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, வேதித்த (vEthiththa) : பகைமை பூண்ட; ஏகைக்கு (Egaikku ) : செல்வதற்கு: அதாவது, நல் வாழ்வு தரும் உனது (கால்) திருவடியைப் பற்றி நான் என் வாழ் நாளைச் செலுத்துதற்கு அல்லது வாழ்வு தரும் படியான வழியை நான் பற்றி என் வாழ் நாளைச் செலுத்துதற்கு ,
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா (kOlaththai vElaikkuLE vitta sUr koththo dEpattu veezh viththa kolai vElA) : Oh Lord, who massacred with Your Spear, felling the entire dynasty of SUran who was hiding inside the sea, disguised as a mango tree - தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே,
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு (kOdhatra pAdhaththilE baththi kUr budhdhi kUrgaikku) : in order that my intellect becomes sharper in devotional prostration at Your blemishless and hallowed feet, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு
நீ கொற்ற அருள் தாராய் (nee kotra aruL thArAy) : kindly bestow on me Your triumphant Grace! நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. கொற்றம் (kotram) : victory;
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே (Alaththai nyAlaththuL Ordhikku vAnaththar AvikkaL mALviththu madiyAdhE) : The lives of all people of the world and the celestials were saved from the clutches of death due to the terrible poison (AlakAlam), ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், ஆலம் (Alam) : poison; ஞாலம் (jnalam) : the world; ஞாலுதல் /நாலுதல் = தொங்கிக்கொண்டிருப்பது; உருண்டையான உலகம் அண்டவெளியில் தொங்கிக்கொண்டிருப்பதால் அது ஞாலம் எனப் பெயர் பெற்றது.
ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும் ( Aliththu mUlaththodE utkoLA dhikkum) : which was imbibed in its entirety by the primordial Cosmic Dancer, Lord SivA; களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும்
ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே (Am vidhdhaiyAm aththai aruLvOnE) : to that SivA You graciously taught the fundamental VEdic ManthrA, Oh Master! ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே,
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட (sEl oththa vEloththa neelaththu mElitta) : Her eyes are like the sEl fish and the sharp spear and are prettier than the blue lilies; சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான
தோதக் கண் மானுக்கு மணவாளா (thOdhak kaN mAnukku maNavALA) : with those eyes, that deer-like VaLLi causes You painful pangs of separation, and You are her consort! கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, தோதகம் (thothagam) : (காம) வருத்தம்;
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே. (theedhatra neethikkuLE baththi kUr baththar sEvikka vAzh viththa perumALE.) : The lives of those devotees who tread the devotional and righteous path of worship are consecrated by You, Oh Great One! குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
Comments
Post a Comment